வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் அனைத்தும் பஞ்சாய் பறந்து போக இந்த வழிப்பாட்டை செய்தால் போதும். எந்த பிரச்சனையும் உங்களை அண்டவே விடாமல் தகர்த்தெறியும் சக்தி வாய்ந்த பஞ்சகுண சிவ மூர்த்தி வழிபாடு.

sivan-vilakku
- Advertisement -

வாழ்வில் எல்லோருக்கும் எப்போதும் ஒரே விதமான பிரச்சனைகள் இருப்பதில்லை. வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமான பிரச்சனைகள் வருவதுண்டு. அப்படி வரும் வெவ்வேறு பிரச்சனைகளுக்கு ஏற்றார் போல நாம் அதற்கான கடவுளை வணங்குவதன் மூலம் நமது பிரச்சனைகள் தீரும். அந்த வகையில் நம்முடைய பல பிரச்சனைகளை களை தெரியக்கூடியவர்களாக இருக்கிறார்கள் பஞ்சகுண சிவ மூர்த்திகள். சிவனின் ஐந்து விதமான குணங்களை உணர்த்தக் கூடிய சிவனின் அவதாரம் தான் பஞ்சகுண சிவ மூர்த்திகள். இந்த பஞ்சகுண சிவ மூர்த்திகள் குறித்தும், அவர்களின் குணங்கள் குறித்தும், எந்த பிரச்சனைக்கு யாரை வழிபடலாம் என்பது குறித்தும் பார்ப்போம் வாருங்கள்.

பஞ்ச குணங்கள் என்று கூறப்படுபவை ஆனந்தம், சாந்தம், கருணை, வசீகரம் மற்றும் ருத்ரம் ஆகும். ஆனந்த மூர்த்தியாக திகழக்கூடியவர் நடராஜர். இந்த நடராஜரை நாம் தொடர்ந்து வணங்கும் பொழுது, நம்முடைய வாழ்க்கையில் ஆனந்தங்கள் பல பெருகி, அவர் எவ்வாறு ஆனந்த நடனம் புரிந்தாரோ அதே போல் நம் வாழ்க்கையும் ஆனந்தத்தில் திளைக்கும்.

- Advertisement -

சாந்த மூர்த்தியாக திகழக்கூடியவர் தட்சிணாமூர்த்தி. இவரை நாம் தென்முக கடவுள் என்றும் குரு பகவான் என்றும் கூறுவோம். இவர் எப்பொழுதும் ஆழ்ந்த தியானத்தில் இருக்கக்கூடியவர். நம் வாழ்க்கையில் நமக்கு நிம்மதி கிடைக்க வேண்டும் என்றாலும் சாந்தமாக இருக்க வேண்டும் என்றாலும் இந்த சாந்த மூர்த்தியான தக்ஷிணாமூர்த்தியை வணங்கலாம்.

கருணையே வடிவாய் கருணா மூர்த்தியாக திகழக்கூடியவர் சோமாஸ்கந்தர். இவர் குடும்ப சமேதமாய் உமையாளுடனும், மகனான முருகனுடனும் சேர்ந்து இருப்பதால், இவரை வணங்குவோர் குடும்ப ஒற்றுமையுடன் வாழ்வார்கள். மேலும் இவரை நாம் வேண்ட நமக்கு வேண்டிய வரம் அனைத்தையும் வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வசீகர மூர்த்தியாக திகழக்கூடியவர் பிட்சாடனார். இவர் தன் கையில் திருவோட்டை ஏந்தி பிச்சை எடுத்த வண்ணம் காட்சியளிக்க கூடியவர். இருப்பினும் இவரிடம் இருக்கக்கூடிய வசீகரத் தன்மையால், இவரை வசீகர மூர்த்தி என்று கூறுகிறார்கள். மேலும் இவரை வணங்குவதன் மூலம் அந்த ஈர்ப்பு சக்தியானது நமக்கு அதிகரித்து, நம்மையும் ஒரு வசீகரத் தன்மைக்கு ஆட்படுத்துவார்.

ருத்ரமூர்த்தி என்றும் உக்கிரமூர்த்தி என்றும் அகோர மூர்த்தி என்றும் அழைக்கப்படுபவர் பைரவர். தீவினைகள் அனைத்தையும் அகற்றுவதில் வல்லவராக திகழ்பவரே பைரவர். பைரவரை நாம் வணங்குவதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய எண்ணிலடங்கா பிரச்சனைகளில் இருந்தும், தீமைகளில் இருந்தும் நம்மை காப்பாற்றி நல்வழிப்படுத்துவார். பிரச்சனைகளில் இருந்து வெளியே வந்து வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு பெருந்துணையாக இருப்பவர் பைரவரே.

இவ்வளவு அற்புதமான குணங்களை தன்னகத்தை கொண்ட சிவபெருமானை, நமக்கு எந்த குணம் முக்கியமாக வேண்டும் என்று கருதுகிறோமோ அந்த குணத்திற்குரிய சிவ மூர்த்தியை வழிபட்டு, அந்த குணத்தை நாமும் அடைந்து வாழ்வில் வெற்றி பெறுவோம். ஓம் நமசிவாய.

- Advertisement -