- Advertisement -
Homeஆன்மிகம்மகாலட்சுமி தாயாரே மணம் குளிர்ந்து பொன்னையும் பொருளையும் வாரி வழங்க இந்த ஐந்து பொருட்களை ...

மகாலட்சுமி தாயாரே மணம் குளிர்ந்து பொன்னையும் பொருளையும் வாரி வழங்க இந்த ஐந்து பொருட்களை வாழ்க்கையில் ஒரே ஒரு முறை தானம் செய்து விடுங்கள் போதும்.

- Advertisement -

நாம் செய்யும் தானத்தில் மனம் மகிழக்கூடியவள் மகாலட்சுமி தாயார். அவ்வாறு மகாலட்சுமி தாயார் மனம் மகிழ்ந்தால், சுக்கிரன் பகவான் ஜாதகத்தில் உச்சமாக இருந்தால் என்ன பலன்களை தருவாரோ அத்தகைய பலன்களை தரத் துவங்குவார். இதன் மூலம் நம்மிடம் இருக்கும் கடன் பிரச்சனைகள் குறையும், வறுமை அகலும், நல்ல வருமானம் கிடைக்கும், செல்வ செழிப்பு ஏற்படும். அந்த வகையில் நாம் செய்யக்கூடிய தானங்களில் சிறந்த தனமான பஞ்சலக்ஷ்மி பொருட்களை தானம் செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரை மகிழ்விக்க முடியும். இந்த பஞ்சலக்ஷ்மி பொருட்கள் என்றால் என்ன? இந்த பொருட்களை முறையாக எப்படி தானம் செய்வது என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்ப்போம்.

பஞ்சலக்ஷ்மி பொருட்கள் தானம்:
பஞ்சலக்ஷ்மி பொருட்கள் என்பது பால், தேன், நாணயம், தாமரைப்பூ மற்றும் தானியங்கள் ஆகும். இவை அனைத்திலும் மகாலட்சுமியின் பரிபூரண கடாட்சம் இருக்கிறது. இந்த பொருட்களை நாம் தானம் செய்யும் பொழுது மகாலட்சுமி மனம் மகிழ்வாள். இந்தப் பொருட்கள் சுக்கிரனை வசியப்படுத்தும் பொருட்களாகவும் கருதப்படுகிறது.

- Advertisement -

மேலும் இந்த பொருட்களை நாம் வெள்ளிக்கிழமைகளில் தானம் செய்ய சுக்கிர வசியம் ஏற்படும். சரி, இந்த பொருட்களை எங்கே? யாருக்கு? தானம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம். வறுமையில் வாடும் ஏழை குழந்தைகளுக்கு பாலை தானமாக தர வேண்டும். தேனை பெண்களுக்கு தானமாக தர வேண்டும். தாமரை பூவை கோவிலுக்கு தானமாக தர வேண்டும்.

தானியங்களை பறவைகளுக்கு தானமாக தர வேண்டும். தானியம் என்று குறிப்பிடும் பொழுது அது எந்த வகையான தானியமாக இருந்தாலும் பரவாயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாணயத்தை ஆண்களுக்கு தானமாக தர வேண்டும். நாணயம் என்றால் ஒரு ரூபாய் நாணயம் போதுமானது. இவ்வாறு நாம் வெள்ளிக்கிழமை தோறும் தானம் செய்து வந்தால் மகாலட்சுமி மனம் குளிர்ந்து, சுக்கிர வசியம் ஏற்பட்டு, நம் வாழ்வில் நாம் செல்வ செழிப்புடன் வாழலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: குலதெய்வம் உங்கள் வீட்டில் இருக்கிறதா? குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள இதோ இப்படி செய்து பாருங்கள்.

மேலும் வெள்ளிக்கிழமைகளில் நம் வீட்டு பூஜை அறையில், சுக்கிர ஹோரையில் வெள்ளி கிண்ணத்தில் நாணயங்களை குவியலாக குவித்து வைத்து கொள்ள வேண்டும். அதை அஷ்டலஷ்மி ஆக நாம் மனதார பாவித்து பூஜை செய்ய வேண்டும். அடுத்த நாள் அந்த கிண்ணத்தில் இருந்து நாணயங்களை எடுத்து முதலில் ஒரு மங்களகரமான பொருளை நாம் வாங்க வேண்டும். இவ்வாறு நாம் தினமும் செய்யலாம். இப்படி செய்து வரும் பொழுது, மகாலட்சுமியின் பரிபூரண ஆசீர்வாதம் நமக்கு ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சற்று முன்