குலதெய்வம் உங்கள் வீட்டில் இருக்கிறதா? குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள இதோ இப்படி செய்து பாருங்கள்.

kula theiva poojai
- Advertisement -

ஒரு குடும்பத்திற்கு குலதெய்வத்தின் அருள் கிடைத்து விட்டால் போதும் அவர்களின் வாழ்க்கையில் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. ஏனென்றால் குலதெய்வம் என்பது அந்த குலத்திற்கே ஒரு தேவதை போன்றது. தேவதைகள் இருக்கும் இடம் எப்போதும் பிரகாசமாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும். அது போல தான் குலதெய்வத்தின் பரிபூரண அருள் ஒரு குடும்பத்திற்கு கிடைத்தால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானருக்கு தோன்றும் ஒரு கேள்வி குலதெய்வத்தின் அருள் எங்களுக்கு இருக்கிறதா? அவர்களின் அனுகிரகம் எங்களுக்கு பரிபூரணமாக உள்ளதா? குலதெய்வம் எங்கள் வீட்டில் வாசம் செய்கிறார்களா? என்பது தான். இந்த ஒரு ஐயப்பாடு உங்களுக்கும் தோன்றினால் இந்த ஒரு எளிய முறையை பின்பற்றி பாருங்கள்.

- Advertisement -

குலதெய்வத்தின் அருள் இருக்கிறதா என்பதை அறிய:
குலதெய்வத்தின் அருள் இருக்கிறதா என்பதற்கான இந்த முறையை வழிபாடாகவும் எடுத்துக் கொள்ளலாம், விரத முறையாகவும் எடுத்துக் கொள்ளலாம், பரிகாரமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இதற்கு 48 நாட்கள் தொடர்ந்து உங்கள் வீட்டில் குலதெய்வத்தை நினைத்து அகல் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் மேற்கு நோக்கி எரிய வேண்டும். குலதெய்வத்தின் படம் இருந்தால் படத்திற்கு கீழாக இந்த தீபம் ஏற்றுங்கள் இல்லை என்றால் தீபத்தையே குலதெய்வமாக மனதிற்குள் பாவித்து வணங்கி வாருங்கள். இப்படி தீபம் ஏற்றி வணங்கும் போது வெற்றிலை பாக்கு பழம் வைக்க வேண்டும். அதில் வைக்கும் பாக்கு கொட்டை பாக்காக இருக்க வேண்டும். கொட்டைப்பாக்கு வைத்து வணங்கும் போது பொதுவாகவே அந்த இடத்தில் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

- Advertisement -

இப்போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய இந்த முறை தான் மிகவும் முக்கியம். இந்த தீபம் ஏற்றும் 48 நாட்களும் மூன்று வேளையும் பாக்கு மட்டையில் தான் நாம் உணவு அருந்த வேண்டும். ஒரு வேளை பயன்படுத்திய பாக்கு மட்டையை அடுத்த வேளைக்கு பயன்படுத்தக் கூடாது. அது மட்டும் இன்றி இந்த 48 நாட்களும் அசைவம் சாப்பிடக் கூடாது. நீங்கள் வெளியில் எங்கு செல்வதாக இருந்தாலும் அல்லது இடையில் வெளியூர் சென்று வேலை பார்ப்பதாக இருந்தாலும் இந்த பாக்கு மட்டையில் சாப்பிடுவதை தொடர்ந்து செய்ய வேண்டும்.

48 நாட்கள் கழித்து உங்கள் குலதெய்வத்தின் ஆலயத்திற்கு சென்று அங்கு குலதெய்வத்திற்கு படையல் போடும் போது பலா இலையில் பால்கோவா வாங்கி வைத்து வணங்க வேண்டும். இது குலதெய்வம் தெரிந்து குலதெய்வ ஆலயத்திற்கு செல்ல முடிந்தவர்கள் இப்படி செய்யலாம். குலதெய்வம் தெரியாது குலதெய்வம் கோவில் வெகு தொலைவில் இருக்கிறது செல்ல முடியாது என்பவர்கள் வீட்டின் பூஜையறையில் கூட குலதெய்வத்தை நினைத்து இந்த வழிபாட்டை செய்து 48 நாட்கள் விரதத்தை முடித்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: அனுபவித்த துயர்கள் நீங்க, நினைத்தது நடக்க, ஆசைகள் நிறைவேற மகாலட்சுமிக்கு ஏற்ற வேண்டிய தீபம் என்ன தெரியுமா? இந்த தீபம் ஏற்றினால் இவ்வளவு பலன்களா!

இதன் பிறகு உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களிலும் உங்கள் குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு கிடைத்திருப்பதை உணரலாம். நீங்கள் எடுத்து நடத்தும் எந்த தொழிலோ அல்லது நீங்கள் தொடங்கும் எந்த காரியமும் தடையில்லாமல் வெற்றியில் முடியும். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலவும். இவையெல்லாம் தொடர்ந்தாலே உங்கள் இல்லத்தில் குலதெய்வத்தின் பரிபூரண அருள் கிடைத்து விட்டது என்று அர்த்தம்.

- Advertisement -