பூஜை அறையில் இருக்கும் பஞ்ச பாத்திரத்தின் பின்னணி என்ன?

Panja pathiram
- Advertisement -

பூஜைக்கு பயன்படுத்தும் பூஜைப் பொருட்களில் பஞ்ச பத்ர பாத்திரமும் ஒன்று. பஞ்ச தெய்வங்களுக்கு உகந்த பஞ்ச மூலிகைப் பொருட்களை நீரில் கலந்து தீர்த்தமாக தருவதற்கு பயன்படுத்தும் ஒரு பொருள் தான் இந்த பஞ்ச பத்ர பாத்திரம். காலப்போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றாகிவிட்டது.

pooja-items

பஞ்ச மூலிகைப் பொருட்கள் என்றால் எவற்றை எல்லாம் குறிக்கிறது?
துளசி இலை, அருகம்புல், வேப்பிலை, வில்வ இலை, வன்னி இலை ஆகிய ஐந்தும் பஞ்ச பத்ர பாத்திரத்தில் சேர்க்கப்படும் பஞ்ச மூலிகைகளாகும்.

- Advertisement -

பஞ்ச தெய்வங்கள் என்றால் எந்த தெய்வங்களை குறிக்கிறது?
அவை முறையே விஷ்ணு, ஈஸ்வரன், அம்மன், விநாயகர், பிரம்மன் ஆகியோரை குறிப்பன ஆகும்.

thulasi theertham

மகாவிஷ்ணுவுக்கு உகந்ததாக துளசி இலை கருதப்படுகிறது.
ஈஸ்வரனுக்கு உகந்ததாக வில்வ இலை கருதப்படுகிறது.
அம்பாளுக்கு உகந்ததாக வேப்பிலை கருதப்படுகிறது.
விநாயகருக்கு உகந்ததாக அருகம்புல், வன்னி கருதப்படுகிறது.
பிரம்ம தேவருக்கு உகந்ததாக அத்தி இலை கருதப்படுகிறது.

- Advertisement -

இவ்வாறாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஆராதனைக்கு அவரவர்க்கு உகந்த மூலிகைகளை இந்த பாத்திரத்தில் உபயோகப்படுத்துவதால் இதற்கு பஞ்ச பத்ர பாத்திரம் என்று பெயர் வந்தது. இவை ஒவ்வொன்றிலும் அளப்பரிய சக்திவாய்ந்த குணங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றது.

thulasi-theertham

நாம் வீட்டில் வழிபடும் போது விஷ்ணுவுக்கு உகந்த நாட்களில் துளசி இலைகளை நீரில் போட்டு பஞ்ச பத்திர பாத்திரத்தில் தீர்த்தம் வைப்பது லட்சுமி கடாட்சத்தை பெற்றுத்தரும். ஆலயங்களில் விஷ்ணுவிற்கு உபயோகப்படுத்தும் தீர்த்தத்தில் பச்சை கற்பூரம் சேர்ப்பது குறிப்பிடதக்கது. இந்த துளசி தீர்த்தம் ரத்தத்தை சுத்திகரித்து, நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கி புற்று நோயை அண்டவிடாமல் உடலை காக்கிறது. சிவாலயங்களில் தரப்படும் வில்வ தீர்த்தம் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணமாக்க வல்லது. குடல் புண்ணையும் ஆற்றும்.

- Advertisement -

ஆலயங்களில் தரப்படும் புனித தீர்த்ததை தினமும் உட்கொண்டால் நோய்கள் அண்டாது. அதனால் தான் தினமும் கோவிலுக்கு செல்ல அறிவுறுத்துகின்றனர். நாம் வீட்டில் வால் மிளகு, லவங்கம், ஏலக்காய், ஜாதிபத்திரி இவற்றை சம அளவுகளில் பொடித்து கால் பங்கு பச்சை கற்பூரம் சேர்த்து கண்ணாடி குடுவையில் பத்திரபடுத்தி வைத்து கொண்டால் பூஜை செய்யும் முந்தைய நாளில் பஞ்ச பத்ர பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நீரில் கலந்து வைத்து மறுநாள் பூஜை நிறைவு பெற்றதும் அருந்தினால் எந்த விதமான நோய்களும் நம்மை அண்டாது. மூலிகை சக்தி மற்றும் இறை சக்தி இரண்டும் கலந்தால் அதுவே புனிதமாகிறது.

theertham

ஆலய வழிபாடு என்பது இறைவனை நினைந்து ஆன்மீகத்தில் திளைக்க மட்டுமல்ல. நமது உடலும், உள்ளமும் தூய்மை பெற்று புத்துணர்ச்சி அடையவும் மனம் ஒருநிலை பெற்று ஆரோக்கியம் சிறக்கவும் தான் ஆலயம் செல்கின்றோம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற பழமொழி இதனை மெய்ப்பிப்பதை உணர முடிகிறது. ஆலயத்தில் கொடுக்கப்படும் திருநீறு, குங்குமம், சந்தனம், அனைத்திற்கும் ஒரு சக்தி உண்டு. ஒவ்வொன்றும் அதன் பலனை மனிதர்களுக்கு பிரதிபலிக்கும். அதில் வேண்டப்படும் வேண்டுதல்களும் கூட ஒரு வகையில் நன்மையை அளிக்க கூடியது. அடிப்ரதக்ஷணம் செய்தல், அங்கப்ரதக்ஷணம் செய்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என்ற பலதரப்பட்ட பிரார்த்தனைகளும் உடலை, உள்ளத்தை தூய்மைப்படுத்தும். பஞ்ச பத்ர பாத்திரத்தில் கொடுக்கப்படும் தீர்த்ததை தவறாமல் பெற்று நலம் பெற வேண்டுகிறோம்.

இதையும் படிக்கலாமே
எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் புதன்கிழமை பரிகாரம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Panja pathiram in tamil. Panja pathiram meaning. How to make theertham at home. Thulasi theertham benefits.

- Advertisement -