எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் புதன்கிழமை பரிகாரம்.

puthan0

மாணவர்களுக்கு படிப்பதில் கஷ்டம். குடும்பத் தலைவருக்கு பண கஷ்டம். குடும்ப தலைவிக்கு மனக் கஷ்டம். வேலைக்கு செல்பவர்களுக்கும் வேலைச்சுமை கஷ்டமாக இருக்கும். இப்படி அவரவருக்கென்று தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு கஷ்டங்களை எதிர்கொண்டுதான் வாழ்கின்றனர். எப்படி பட்ட கஷ்டங்களாக இருந்தாலும் அதை கடந்தால் தான் மகிழ்ச்சியான வாழ்க்கையை நம்மால் அடைய முடியும். நமக்கு ஏற்படும் கஷ்டங்களை நம்மால் முழுமையாக தடுத்து நிறுத்த முடியுமா என்றால், அது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். ஆனால் அந்த கஷ்டங்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள நமக்காக கூறப்பட்ட சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், கஷ்டத்தில் நமக்கு ஏற்படும் தாக்கங்களை குறைத்துக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டு முறையைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

puthan

நமக்கு எப்படிப்பட்ட கஷ்டம் இருந்தாலும் ஒரு பசுமையான சூழ்நிலையை நாம் பார்த்தால் நம்மை அறியாமலேயே நம் மனதிற்கு ஒரு நிம்மதி வந்துவிடும். அந்த பச்சை நிறத்திற்கு மனதை சாந்தப்படுத்தும் சக்தியானது இயற்கையாகவே உள்ளது. இந்தப் பச்சை நிறத்தை அதிபதியாக கொண்டிருக்கும் புதன் பகவானை, புதன்கிழமை வழிபடுவதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கும் பல பிரச்சனைகளை நம்மால் தவிர்த்துக்கொள்ள முடியும். வீட்டில் பணவரவு இல்லை, தொழில் செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இல்லை, வீட்டில் இருக்கும் குழந்தைகள் நன்றாக படிக்கவில்லை. இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கெல்லாம் நாம் ஒரு சிறிய பரிகாரத்தின் மூலம் நல்ல தீர்வினை அடைய முடியும்.

இந்த பரிகாரத்தை புதன் கிழமை தோறும் மதியம் 1 மணிக்கு செய்ய வேண்டும். இதற்கு தேவையான பொருட்கள் 3 மட்டுமே. நுனியும், காம்புப் பகுதியும் கூறாக இருக்கும் ஐந்து வெற்றிலை, சிறிதளவு சுத்தமான பசு நெய், பச்சை பட்டுத்துணி சிறிதளவு. முதலில் ஒவ்வொரு வெற்றிலையாக எடுத்து பசு நெய்யை வெற்றிலையின் மேல் பகுதியில் முழுவதுமாக தடவிக்கொள்ள வேண்டும். இப்படி பரவலாக நெய் பூசப்பட்ட ஐந்து வெற்றிலையையும்  ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து கொள்ள வேண்டும். அடுக்கிய வெற்றிலைகளை எடுத்து பச்சைப்பட்டு துணியின் மேல் வைத்து, வெளியில் தெரியாதபடி நன்றாக மடித்துக் கொள்ள வேண்டும். மடித்த அந்த சிறிய அளவு மூட்டையை பச்சை கயிறு கொண்டு கட்டி கொள்ள வேண்டும். இப்படி தயார் செய்த வெற்றிலை மூட்டையை பூஜை அறையில் வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி குல தெய்வத்தையும், புதன் பகவானையும் மனதார நினைத்துக்கொண்டு அதை எடுத்து உங்களது பீரோவிலோ அல்லது நீங்கள் பணம் வைக்கும் பெட்டியிலோ வைக்க வேண்டும்.

puthan

இப்படி தொடர்ந்து 21 வாரம் செய்து வந்தால் உங்களின் பண கஷ்டமானது குறைந்து கொண்டே வரும். தொழில் செய்யும் இடத்தில் தொழில் சிறந்து விளங்க வேண்டுமென்றால் இந்த பரிகாரத்தை உங்களது கடையிலோ அல்லது தொழில் நடத்தும் இடத்திலோ செய்து இந்த முடிச்சினை கல்லா பெட்டியில் வைக்கலாம். உங்களது குழந்தை நன்றாக படிக்க வேண்டும் என்றால், நீங்கள் தயார் செய்த இந்த முடிச்சினை உங்கள் குழந்தை புத்தகங்கள் வைத்திருக்கும் இடத்தில் வைத்தால் படிப்பில் இருக்கும் தடைகள் நீங்கி குழந்தைகள் நல்ல ஆற்றலை பெறுவார்கள். உங்களால் முடிந்தால் புதன்கிழமை தோறும் பச்சைப்பயிறு சுண்டல் செய்து, புதன் பகவானுக்கு நெய் நைய்வேத்தியமாக படைத்து குழந்தைகளுக்கு தானமாக கொடுக்கலாம். ஒவ்வொரு புதன் கிழமை அன்றும் பழைய வெற்றிலையை மாற்றிவிட்டு, புதிய வெற்றிலை வைக்கப்படவேண்டும். பட்டுத்துணியை மட்டும் துவைத்து அந்த துணியை பயன்படுத்திக்கொள்ளலாம். மற்ற கிரகங்களின் சஞ்சாரம் சரியாக இல்லை என்றாலும், புதன் பகவான் வலிமையாக இருந்தால் நமக்கு ஏற்படும் துன்பங்கள் கூட இன்பமாக மாறிவிடும்.

இதையும் படிக்கலாமே
நஞ்சன்கூடு அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் கோவில் வரலாறு

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Puthan pariharam in Tamil. Puthan bhagavan in Tamil. Wednesday pariharam in Tamil. Puthan vazhipadu in Tamil.