ஐம்பொன் மோதிரம் எந்த விரலில் அணிந்தால் அதிர்ஷ்டம் வரும் தெரியுமா? ஐம்பொன் மோதிரத்தை ஆண்கள் அணியலாமா? கூடாதா?

impon-ring-cash
- Advertisement -

ஐந்து உலோகங்களை உள்ளடக்கியுள்ள இந்த ஐம்பொன் ஆபரணங்கள் பொன்னை போலவே தகதகவென மின்னும் அற்புதம் கொண்டது. தங்கத்தை விட விலை குறைவாக இருக்கும் இந்த ஐம்பொன் நகைகள் நீண்ட நாட்கள் உழைக்க கூடியது எனவே தங்கம் வாங்க முடியாதவர்கள் ஐம்பொன் நகைகளை வாங்கி குவிப்பது உண்டு. அந்த வகையில் ஐம்பொன் மோதிரத்தை ஆண்கள் அணியலாமா? கூடாதா? ஐம்பொன் மோதிரம் எந்த விரலில் அணிந்தால் அதிர்ஷ்டம் வரும்? என்பது போன்ற தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தங்கம், வெள்ளி, இரும்பு, செம்பு, ஈயம் ஆகிய ஐந்து உலோகங்களின் கலவையை தான் ஐம்பொன் என்கிறோம். ஐந்து உலோகங்கள் கொண்டுள்ளதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டுள்ளது. சுத்தமான ஐம்பொன் எப்பொழுதும் கறுத்து போவதில்லை. எனவே ஐம்பொன் நகைகளை வாங்குபவர்கள் எச்சரிக்கையாக வாங்க வேண்டும். ஐம்பொன் நகைகள் வாங்கிய முதலில் பளிச்சென இல்லாவிட்டாலும், நீங்கள் உங்கள் உடம்பில் போட்டுக் கொண்டதும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கம் போல ஜொலிக்க ஆரம்பிக்கும். குறிப்பாக ஐம்பொன் மோதிரங்கள் இவ்வகையில் ஜொலிக்கும். தெய்வீக சக்தியை வெளிப்படுத்த கூடிய இந்த பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட கவசம் ஒன்றை ஸ்ரீகிருஷ்ணர் மகாபாரதப் போரில் அர்ஜுனனுக்கு பரிசளித்ததாக புராணங்கள் குறிப்பிடுகிறது. பஞ்சலோக கவசம் உடல், உயிர், மனம் என்று எல்லா விதங்களிலும் ஒருவருக்கு பாதுகாப்பை கொடுக்கிறது.

- Advertisement -

ஐம்பொன் மோதிரத்தை அணிந்தால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஆண், பெண் என்கிற எந்த பாகுபாடும் இன்றி இந்த பஞ்ச உலோகத்தை யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். ஆண், பெண் யாராக இருந்தாலும் உங்களுடைய இடதுகை நடுவிரல், ஆள்காட்டி விரலில் அணிவது சிறப்பு. மணிக்கட்டில் ஐம்பொன் காப்பு அணிந்து கொண்டாலும் நரம்புகளில் மீன் தூண்டுதல்கள் ஏற்பட்டு மனோபலம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

பெண்கள் மோதிர விரலில் ஐம்பொன் மோதிரத்தை அணிந்து கொண்டால் அங்கு இருக்கும் நரம்பு தூண்டப்பட்டு உடல் உள்ளுறுப்புகள் புத்துணர்வை பெறுகின்றன. உங்கள் ராசிக்கு ஏற்ப ஐம்பொன்னில் ராசிக் கற்கள் பதித்தும் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு ஆற்றல்களை வெளியிடக் கூடியது. எனவே இந்த அனைத்து உலகங்களும் ஒன்றாக சேரும் பஞ்சலோக ஐம்பொன் நகைகளில் நிறையவே சக்தி உண்டு.

- Advertisement -

அதனால் தான் பஞ்சலோக சுவாமி சிலைகளுக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தத்தை பிரசாதமாக பக்தர்களுக்கு இன்றும் பல்வேறு கோவில்களில் வழங்கப்பட்டு வருகிறது. ஐம்பொன் சிலைகளில் இருந்து பெறப்படும் இந்த தீர்த்தம் உடலில் பிராண சக்தியை அதிகரிக்க செய்து பல்வேறு நோய்களை குணப்படுத்துகிறது என்று நம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர். ஐம்பொன் நகைகளில் இருக்கும் ஐந்து உலோகங்களும் ஐந்து கிரகங்களில் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது.

இதில் குரு பகவான் தங்கத்திலும், சுக்கிர பகவான் வெள்ளியிலும், சூரிய பகவான் செம்பிலும், சனி பகவான் இரும்பிலும், கேது பகவான் ஈயத்திலும் நின்று ஆட்சி செய்வதாக நம்பப்படுகிறது. இதனால் பஞ்சலோக நகைகள் அணிவதால் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், மன ஆரோக்கியமும் பெருகுகிறது. குறிப்பாக உங்களை பிடித்திருக்கும் தோஷங்கள் அனைத்தும் விலகி ஓடிவிடும். உங்களுடைய உஷ்ணத்தை குறைத்து உங்களுக்குள் இருக்கும் மகா சக்தியை வெளியிடுகிறது. இதனால் ஐம்பொன் மோதிரத்தை நீங்களும் அணிந்து பயன் பெறலாமே!

- Advertisement -