சுக்கிரனின் அஸ்தமனத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

sukura astrology
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிர பகவான் பொதுவாக நற்பலன்களையே தருவார். ஒரு ராசியில் அவரின் சஞ்சாரம் இருக்கும் போது அந்த ராசிக்காரர்கள் பொன் பொருள் சொத்து சேர்க்க என ராஜபோக வாழ்க்கை வாழ்வார்கள். இது அந்த ராசிக்காரர்களுக்கு மட்டுமல்லாமல் இவரின் பெயர்ச்சி பல ராசிகளுக்கு நற்பலன்களை கொடுக்கும்.

அப்படியான சுக்கிர பகவான் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி மேஷ ராசியில் அஸ்தமனம் ஆக உள்ள இதன் காரணமாக பல ராசிகள் அசுப பலன்களை பெற உள்ளார்கள் எப்படி சுக்கிரனின் சஞ்சாரம் இருந்தால் சொத்து சுகம் சேர்க்க என சேர்கிறதோ அது போல இந்த அஸ்தமனம் அதில் நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பை உண்டாக்கும். எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சுக்கிரனின் அஸ்தமனத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

ரிஷபம்

சுக்கிர பகவானின் சொந்த ராசியான ரிஷப காரர்களுக்கும் சுக்கிரனின் இந்த அஸ்தமனம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த ராசிக்காரர்கள் நிதி பற்றாக்குறையை அதிக அளவில் சந்திக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்படும். அதே போல் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். வருமானம் நிலையாக இருக்காது. ஆகையால் பணத்தை கையாளும் போது கவனமாக இருப்பது நல்லது.

கடகம்

மேசத்தில் அஸ்தமனமாகும் சுக்கிரனால் கடக ராசிக்காரர்களும் எதிர்மறையான விளைவுகளை தான் சந்திக்கப் போகிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். வருமானம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். பணவரவு பற்றாக்குறையாக இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். இது பெரும் பிரச்சனையும் ஏற்படுத்தும் கவனமாக செயல்படுங்கள்.

- Advertisement -

துலாம்

சுக்கிரனின் அஸ்தமனத்தால் துலாம் ராசிக்காரர்களும் கடும் விளைவை சந்திக்க உள்ளார்கள். இந்த ராசிக்காரர்கள் நிதி விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணம் விஷயத்தில் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எத்தனை கடினமாக உழைத்தாலும் அதற்கேற்ற ஊதியம் குறைவாகவே இருக்கும். நம்பிக்கையை கை விடாமல் விடாமல் தொடர்ந்து முயற்சி செய்யும் போது நிச்சயம் நல்ல பலனை பெறலாம்.

விருச்சகம்

மேஷ ராசியில் சுக்கிரன் அஸ்தமனம் ஆகுவதால் பாதிப்பை சந்திக்கக் கூடிய ராசிகளின் விருச்சிகம் உண்டு. இந்த நேரத்தில் எத்தனை முயற்சி செய்தாலும் சேமிப்பது கொஞ்சம் சிரமம் தான். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும். பணத்தேவை பூர்த்தி செய்ய கொஞ்சம் சிரமப்பட வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படும் எதிலும் நிதானமாக செயல்பட்டால் இழப்புகளை தவிர்க்கலாம்.

- Advertisement -

மீனம்

மீனம் ராசிக்காரர்களும் சுக்கிரனின் இந்த அஸ்தமனத்தால் பெரும் அவதிக்குள்ளாக உள்ளார்கள். மீன ராசிக்காரர்களுக்கு வருமானம் பெருமளவு குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. செலவுகள் அதிகரிக்கும் வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடிந்த வரை முயற்சிகள் செய்வார்கள் இருந்தாலும் அவர்கள் நினைத்த வருமானத்தை ஈட்டுவது சிரமம் தான் திடீர் பணயிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே: குருவால் யோகம் பெறும் ராசிகள்

இது ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை தான் இதிலும் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்படும். எப்போதும் முயற்சிக்கான பலன் என்றுஒன்று நிச்சயமாக உண்டு. ஆகையால் நம்பிக்கையை கை விடாமல் உழைக்கும் போது விரயங்களை நிச்சயம் தடுக்கலாம் என்ற கருத்தினை கொண்டு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -