தோனியை தூக்கா விட்டாலும் சரி. இவரை இந்திய அணியில் சேருங்கள் அப்போது தான் இந்தியா பலமடையும் – வாஹன் ட்வீட்

vaughan

இன்று (12-01-2019) சிட்னியில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. இந்த வித்தியாசத்தில் மூலம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரை (1-0) என்ற கணக்கில் வெற்றியுடன் துவங்கி இருக்கிறது ஆஸ்திரேலிய அணி.

lose

இந்திய போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தது அணியின் தோல்விக்கு வழிவகுத்தது. ரோஹித் மட்டும் சிறப்பாக சதமடித்து 133 ரன்களை குவித்தாரர். தோனி 96 பந்துகளை சந்தித்து 51 ரன்களை அடித்தார். இவரது மெதுவான ஆட்டம் அணியை பாதித்தது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாஹன் ட்வீட் செய்திருந்தார்.

மேலும், இந்திய அணியில் தோனியை தூக்கா விட்டாலும் அணியில் இளம் வீரரான பண்ட் -க்கு பேட்ஸ்மேனாக வாய்ப்பு கொடுங்கள். அப்போது அது இந்திய அணிக்கு நடுவரிசையில் பலம் சேர்க்கும் என்று தனது அதிகார பூர்வ டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ உங்களுக்காக அந்த ட்வீட் :

இளம் வீரரான ரிஷப் பண்ட் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருவதாலும், உலககோப்பை போட்டிகள் நெருங்குவதாலும் அவரது வருகை இந்திய அணிக்கு முக்கியம் என்றும் இந்திய ரசிகர்களும் வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

எனது வேகத்திற்கும் ஆட்டத்தின் திருப்புமுனைக்கும் காரணம் இந்த இந்திய வீரர் தான் – ஆஸி ஆட்டநாயகன் வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்