உலகக்கோப்பை அணியில் ரஹானே மற்றும் விஜய் ஷங்கருக்கு இடம். ரிஷப் பண்டின் இடம் தான் தலைவலி – உ.கோ தேர்வுக்குழு தலைவர்

msk

இந்த வருடம் 2019ஆம் ஆண்டு மே மாதம் இறுதியில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் தொடரான உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெற உள்ளன. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து நாடுகளும் இந்த தொடருக்காக தயாராகி வருகின்றனர்.

worldcup

இந்நிலையில், இந்திய அணியின் தேர்வுக்குழுவின் தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ள இந்திய அணி குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

பிரசாத் கூறியதாவது : உலகக்கோப்பை தொடருக்கான 15பேர் கொண்ட இந்திய அணி கிட்டத்தட்ட தயாராகி விட்டது. அதில், இந்தியா ஏ அணியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ரஹானே மற்றும் விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு ஒரு ஆரோக்கியமான தலைவலியாக உள்ளார்.

Pant

அவரை அணியில் சேர்க்கவில்லை என்றால் பெரும் எதிர்ப்பு வரும் அதுமட்டுமின்றி அவரது ஆட்டம் இப்போது முதிர்ச்சி அடைந்துள்ளது. இளம் வீரரான அவர் இன்னும் பல ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாட உள்ளதால் அவருக்கு இதுபோன்ற தொடர் சிறந்த அனுபவத்தை தரும். எனவே அவரும் அணியில் இடம்பெறுவார். இதுகுறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று பிரசாத் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

ஹார்டிக் பாண்டியா நேற்று கைத்தவறி பேட்டை இழந்து அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் – தோனி வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்