ஹார்டிக் பாண்டியா நேற்று கைத்தவறி பேட்டை இழந்து அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் – தோனி வைரல் வீடியோ

Dhoni

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் செடன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

pandya

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 212 ரன்களை குவித்தது. நியூசிலாந்து சார்பாக அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் முன்ரோ 40 பந்தில் 72 ரன்கள் குவித்து அசத்தி ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்த இமாலய இலக்கினை துரத்திச்சென்ற இந்திய அணி அதிர்ஷ்ட வசமின்றி வெறும் 4 ரன் வித்தியாசத்தில் தோற்று தொடரை இழந்தது.

நேற்று நடந்த போட்டியில் 5ஆவது வீரராக களமிறங்கிய ஹார்டிக் பாண்டியா 11 பந்தில் 2 சிக்ஸர்கள் 1 பவுண்டரி என 21 ரன்களை குவித்தார். தான் சந்தித்த முதல் பந்தில் சிக்ஸர் அடித்த பாண்டியா அதிரடியாக விளையாடினார். எதிர்பாராத விதமாக அடித்த ஷாட்டில் அவரது பேட் கையிலிருந்து நழுவி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதோ அந்த வீடியோ இணைப்பு :

மறுமுனையில் தோனி இருந்தார். இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா மட்டும் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் விரைவாக ரன்களை குவித்து வெற்றியை பெற்று தந்து இருப்பார். மேலும்,நேற்று பண்ட் ஆட்டமும் சிறப்பாக இருந்தது. இருவரும் எதிர்பாராமல் தங்களது விக்கெட்டினை பறிகொடுத்தனர் என்று தோனி தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

கடந்த இரு போட்டிகளாக ரோஹித் அணிந்த ஜெர்ஸி யாருடையது தெரியுமா. அவர் ஏன் அவருடைய ஜெர்சியை அணியவில்லை தெரியுமா ?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்