உடனே இவரை அணியில் இணையுங்கள். இவரே ஆஸ்திரேலிய தொடர் மற்றும் உலகக்கோப்பை தொடரின் துருப்புச்சீட்டு – கங்குலி

ganguly

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அதில் முதல் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய போட்டியில் ஆஸ்ட்ரேலிய அணி வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் தொடரின் அடுத்த போட்டி நாளை மெல்போர்ன் நகரில் துவங்கவுள்ளது.

lose 2

இந்திய அணியின் நடுவரிசை வீரர்கள் சென்ற ஆட்டத்தில் சரியாக விளையாடவில்லை மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மெதுவான ஆட்டமும் விமர்சிக்க பட்டது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தனது கருத்தினை அறிவித்துள்ளார். அதன் படி அவர் கூறியது பின்வருமாறு :

இந்திய அணியின் பலம் குறித்து கண்டிப்பாக உணரவேண்டிய தருணம் இது இன்னும் சில மாதங்களில் உலகக்கோப்பை தொடர் துவங்கவுள்ளது எனவே அணியில் நிச்சயம் ஆட்டத்தை எந்த நேரத்திலும் மாற்றக்கூடிய ஒரு அதிரடி வீரர் வேண்டும். அப்போது தான் நடுவரிசையில் அவரால் தாக்கத்தினை ஏற்படுத்த முடியும். மேலும் அணியின் ரன் குவிப்பிற்கு இது உதவும்.

pant

எனவே, இந்திய அணியில் ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்டினை விளையாட வைக்க சரியான தருணம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறன். எனவே, அவரை உடனே அணியில் இணைத்தால் உலகக்கோப்பை தொடருக்கு அவர் பதட்டம் இல்லாமல் தயாராவார். கண்டிப்பாக இவர் இந்திய அணியின் துருப்புசீட்டாகவும் இருப்பார் என்று கங்குலி தெரிவித்தார் .

இதையும் படிக்கலாமே :

தோனியை போன்று என்னாலும் இதை செய்து காட்ட முடியும் – விஜய் ஷங்கர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்