டார்கெட் இவர்தான். கடைசி 4 ஓவர்களை வீசுபவர்கள் பற்றி அம்பயரிடம் சோதனை செய்த தல தோனி – வீடியோ

dhoni-jadhav

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று (18-01-2019) நடந்து முடிந்தது. இந்திய அணி இந்தப்போட்டியை வெற்றிகரமாக முடித்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது.

chahal

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை குவித்தது. ஆஸ்திரேலியா அணி 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக ஹாண்ட்ஸ்காம்ப் 58 ரன்களை குவித்தார். இந்திய அணி சார்பாக சாஹல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் ஆட்டநாயகன் விருதினையும் தட்டிச்சென்றார்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக இலக்கினை துரத்த ஆரம்பித்தது. தவான், ரோஹித் மற்றும் கோலி விரைவில் ஆட்டமிழந்தாலும் தோனி மற்றும் ஜாதவ் ஆகியோர் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் கடைசி 4 ஓவர்கள் இருக்கும் போது யார் யார் வீசப்போகிறார்கள்? எத்தனை ஓவர்கள் யாருக்கு இருக்கிறது என்பதை தோனி அம்பயரிடம் கேட்டு அறிந்து கொண்டார். இது இப்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ இணைப்பு :

பிறகு, 4 ஓவர்களில் 33 ரன்களை அடிக்கவேண்டும் என்பதை அறிந்து கொண்ட தோனி சிறப்பாக பவுலர்களை எதிர்கொண்டு அணியை தனது அதிரடி ஸ்டைலில் வெற்றி பெறவைத்தார். மேலும், தொடர் நாயகன் விருதினையும் தட்டிச்சென்றார்.

இதையும் படிக்கலாமே :

மீண்டும் பினிஷிங் கிங் என்பதை நிரூபித்த தல தோனி. இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார் – தொடரை கைப்பற்றியது

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்