ஐயப்பன் கோவில் விவகாரத்தில் பந்தள ராஜ குடும்பம் அதிரடி அறிவிப்பு

Aiyappan
- Advertisement -

கடந்த வாரத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதாவது பிரம்மச்சாரி தெய்வமான ஐயப்பன் வீற்றிருக்கும் சபரி மலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் எல்லா காலங்களிலும் செல்லலாம் என்று பெண்களுக்கான கோவில் வழிபாட்டு உரிமை சார்ந்த வழக்கில் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் அடங்கிய நீதிபதி குழு தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சபரி மலை கோவில் நிர்வாகத்தினரையும், கேரளா மாநில மக்களையும் இந்தியா முழுவதிலிருந்தும் வருடந்தோறும் விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க செல்லும் ஐயப்ப பக்தர்களையும் வருத்தமடையச் செய்திருக்கிறது. ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இது குறித்து பல வகையான செய்திகள், கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டு வருகின்றன.

- Advertisement -

சமீபத்தில் சுவாமி ஐயப்பன் தோன்றிய அரச குலமாக கருதப்படும் “பந்தள அரச” குடும்பத்தின் சார்பாக ஒரு அறிவிப்பு கடிதம் வெளியானதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது சபரிமலை ஐயப்பன் கோவிலின் பதினெட்டு படிகளை தண்டி அக்கோவிலுக்குள் ஒரு பருவ வயது பெண் சென்றாலும், தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐயப்பனின் ஆபரண பெட்டி சபரிமலை கோவிலுக்கு வராது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஐயப்பனின் கோவிலை தான் அரசாங்கம் கட்டுப்படுத்த முடியுமே தவிர, தங்கள் பரம்பரையினர் ஐயப்பனுக்கு செய்து அலங்கரித்து வரும் திருவாபரணங்களின் மீது அரசாங்கம் உரிமை கோர முடியாது என்றும், பல நூற்றாண்டு பாரம்பரியத்தை மீறி ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வர தொடங்கினால், தங்கள் பரம்பரையினர் எவரும் இனி எக்காலத்திலும் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல மாட்டார்கள் என அக்கடிதத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.

- Advertisement -

ayyapan

இத்தோடு உச்சநீதி மன்ற தீர்ப்பை கேரள அரசு கட்டாயமாக கடைபிடிக்க முயற்சித்தால் ஐயப்பன் கோவிலில் அர்ச்சகர்களாக தாந்த்ரீகளும் கூட்டாக பதவி விலக போவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இப்படி பகிரப்படும் கருத்துக்களில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை. ஏன் என்றால் இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஐயப்பனின் அருளால் இப்பிரச்சினைகள் எல்லாம் கூடிய விரைவில் தீரும் என்பதே ஐயப்ப பக்தர்கள் அனைவரின் நம்பிக்கையாகவும், பிரார்த்தனையாகவும் இருக்கிறது.

ஐயப்பன் கதை பற்றி படிக்க இங்கு கிளிக் செய்யவும்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்களை அறிய தெய்வீகம் மொபைல் ஆப்-ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

- Advertisement -