பப்பாளி பழத்துடன் இந்த 1 பொருளை மட்டும் சேர்த்து உங்களுடைய முகத்தில் போடுங்கள். ஃபேஷியல் செய்தது போல முகம் உடனடியாக பளிச்சென்று மாறும்.

face20
- Advertisement -

முகத்தை உடனடியாக பளிச்சென்று மாற்றுவதற்கு செயற்கையாக எத்தனையோ கிரீம்கள் நமக்கு கிடைக்கின்றது. ஆனால் அது அனைத்தும் நமக்கு நிரந்தர அழகை கொடுக்காது. பக்கவிளைவுகளையும் உண்டாக்கிவிடும். நம்முடைய சரும அழகை மேம்படுத்திக் கொள்ள வயதான தோற்றத்தை தள்ளிப் போட, பப்பாளிப்பழம் நமக்கு மிகவும் நல்லது. இந்த பப்பாளி பழத்தை ஃபேஸ் பேக்காக போடுவதோடு சேர்த்து கொஞ்சம் உள்ளுக்கும் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் சேர்த்து நன்மையை தரும். பப்பாளி பழத்தை வைத்து ஃபேசியல் எப்படி செய்யலாம்.

Step 1:
முதலில் ஒரு மீடியம் சைஸ் பப்பாளி பழத்தை எடுத்து தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டி அந்த பப்பாளி பழத்தை ஒரு உரலில் போட்டு நசுக்கி ஒரு வடிகட்டியில் வடிகட்டி, திப்பி இல்லாமல் விழுதை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பப்பாளிப்பழ விழுதை வைத்து தான் ஃபேசியல் செய்யப் போகின்றோம்.

- Advertisement -

Step 2:
ஒரு அகலமான பாத்திரத்தில் இந்த பப்பாளி பழ விழுதை தேவையான அளவு போட்டுக்கொள்ள வேண்டும். கூடவே ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து இந்த கலவையை முகம் முழுவதும் தேய்த்து 2 நிமிடங்கள் வரை நன்றாக மசாஜ் செய்து முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் வெளியேறி விடும்.

Step 3:
அடுத்தபடியாக ஒரு அகலமான பாத்திரத்தில் 2 ஸ்பூன் பப்பாளி விழுது, 2 ஸ்பூன் அரிசி மாவு போட்டு பேஸ்டாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை வைத்து முகம் முழுவதும் ஸ்கரப் செய்து ஐந்து நிமிடங்கள் வட்ட வடிவில் ஜென்டில் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்பு குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி விடுங்கள்.

- Advertisement -

Step 4:
அடுத்தபடியாக 1 ஸ்பூன் பப்பாளி பழ விழுது, 1 ஸ்பூன் தேன் போட்டு கலந்து இதையும் முகத்தில் அப்ளை செய்து 2 நிமிடம் மசாஜ் செய்து அப்படியே விட்டு விடுங்கள். 5 நிமிடம் இந்த பேஸ்ட் உங்களுடைய முகத்திலேயே காயட்டும். அதன் பின்பு தண்ணீரை கையில் நனைத்துக் கொண்டு முகத்தை வட்ட வடிவில் மசாஜ் செய்து மீண்டும் முகத்தை கழுவி விடுங்கள்.

Step 5:
இறுதியாக ஒரு ஃபேஸ் பேக். கோதுமை மாவில் தேவையான அளவு பப்பாளி விழுதை ஊற்றி நன்றாக கலந்து ஃபேஸ் பேக் தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். இந்த ஃபேசியல் செய்த உடனேயே உங்களுடைய முகம் இன்ஸ்டன்ட் ஆக பளிச்சென்று மாறிவிடும். வாரத்தில் ஒரு முறை இப்படி செய்து வர இளமையும் அழகும் உங்களோடு இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -