இந்த மழைக்காலத்தில் நிறைய பேருக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஹேர் பேக்குகளை பயன்படுத்தினால் சைனஸ் பிரச்சனை வரும். சளி பிடிக்கும். தலை பாரம் ஏற்படும். அப்படிப்பட்ட எந்த பிரச்சனையும் வராமல் இருக்க இந்த ஹேர் பேக் ட்ரை பண்ணி பாருங்க. இந்த ஹேர் பேக்கை தலைமுடியில் போட்டால் தலைமுடி சில்கியாக, ஷைனிங்காக ஸ்மூத்தாக அழகாக மாறிவிடும். அதேசமயம் தலைமுடி உதிர்வு உடனடியாக கட்டுப்படும். இந்த ஹேர் பேக்கை நாம் பழ வகைகளை வைத்து தான் தயார் செய்யப் போகின்றோம். எந்தெந்த பழங்களை சேர்த்து எப்படி ஹேர் பேக் தயார் செய்வது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
இந்த ஹேர் பேக் தயார் செய்ய நமக்கு பப்பாளி பழம், வாழைப்பழம், ஆரஞ்சு பழம் இந்த மூன்று பழங்கள் தேவை. வாழைப்பழத்தில் செவ்வாழையாக கிடைத்தால் மிகவும் நல்லது. பழுத்த செவ்வாழை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். ஆரஞ்சு பழம் கூட, கமலா பழமாக கிடைத்தால் மிகவும் நல்லது.
ஒரு மிக்ஸி ஜார் எடுத்துக்கோங்க. அதில் தோல் சீவி நறுக்கிய பழுத்த பப்பாளி பழம் 1/2 கப் அளவு, தோல் உரித்து வட்ட வட்டமாக வெட்டிய வாழைப்பழம் 1, சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு இதை விழுது போல அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதோடு ஆரஞ்சு பழச்சாறை கலக்க வேண்டும். ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி ஜூஸரில் பிழிந்தாலே சாரு நமக்கு கிடைக்கும். அப்படி இல்லை என்றால் எலுமிச்சம் பழம் பிழிவது போல உங்களுடைய கையைக் கொண்டு ஆரஞ்சு பழத்திலிருந்து சாறு சுலபமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு 4 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறு இருந்தால் கூட போதும். அதை இந்த பேக்கோடு நன்றாக கலந்து விட்டால் சூப்பரான ஹேர்பேக் தயாராகிவிடும். இந்த ஹேர் பேக்கை உங்களுடைய தலைமுடியில் வேர்க்கால்களில் படும்படி அப்ளை செய்யுங்கள். அதன் பின்பு தலைக்கு மேல் பக்கத்திலும் இந்த ஹேர் பைக்கை அப்ளை செய்யுங்கள். மீதம் இருக்கும் ஹேர் பேக்கை தலை முடி நுனி வரை அப்ளை செய்து விட்டு, ஒரு கொண்டை கட்டிக்கொண்டு மேலே ஒரு கவர் போட்டு கட்டிக் கொள்ளுங்கள். அப்போதுதான் ஹேர்பேக் ட்ரை ஆகாமல் இருக்கும். 20 நிமிடங்கள் கழித்து எப்போதும் போல மயில்டான ஷாம்பு போட்டு உங்களுடைய தலையை அலசி பாருங்கள். உங்க தலை முடி வேற லெவல் லுக்கு கொடுக்கும்.
ரொம்பவும் ட்ரை யாக வறண்டு போய் இருக்கக்கூடிய உங்களுடைய தலைமுடி கூட சாஃப்டாக சில்க்கியாக மாறும். பொடுகு தொல்லை படிப்படியாக குறையும். மாதத்தில் இரண்டு நாள் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தி வந்தாலும் சரிதான். தலையில் எண்ணெய் வைத்து விட்டு, ஆயில் ஹேர்ல இந்த ஹேர் பேக் அப்ளை பண்ணுங்க. ரிசல்ட் இரண்டு மடங்கு கிடைக்கும்.
வெந்தயம், பச்சை பயிறு போன்ற பொருட்களை தலையில் பயன்படுத்தும் போது இந்த மழைக்காலத்துக்கு அவ்வளவாக செட்டாகாது. செம்பருத்தி பூ இலை கூட குளிர்ச்சி தான். அதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு இப்படிப்பட்ட பழ வகைகளை ஹேர் பேக்காக போடும்போது நமக்கு தலைமுடிக்கு தேவையான போஷாக்கும் கிடைக்கும். முடி உதிர்வும் குறையும். முயற்சி செய்து பாருங்கள்.