10 நிமிடத்தில் பளபளன்னு பளிச்சிட வைக்கும் பப்பாளி பழம்! பல 100 ரூபாய் நோட்டுகளை மிச்சப்படுத்தும் எளிய வீட்டு ஃபேஸ் பேக்!

papaya-face-pack-tamil
- Advertisement -

ரொம்பவே எளிதான முறையில் பப்பாளி பழத்தை வைத்து இந்த ஃபேஸ் பேக் போட்டு வந்தால் பல நூறு ரூபாய் நோட்டுகளை கொடுத்து செய்யும் பேசியல் போன்ற பளபளப்பை கொடுக்கும். இதற்காக ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள்? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த பப்பாளி பழத்தை வைத்து சருமத்தை எப்படி பராமரிக்கலாம்? என்கிற அழகு குறிப்பு தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக வறண்ட சருமம் இருப்பவர்கள் பப்பாளி பழத்தை தாராளமாக பயன்படுத்தலாம். இது முற்றிலுமாக வறண்ட தன்மையை நீக்கி ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள உதவும் மேலும் சருமத்தை மாய்ஸ்ரைஸ் செய்து ஹைட்ரேட் ஆவதிலிருந்து பாதுகாக்கிறது. சருமத்தை மென்மையாகவும், மிருதுவான தன்மையுடனும் இருக்க வைக்கும் ஒரு அற்புதமான மருந்தாக செயல்படுகிறது.

- Advertisement -

இந்த பப்பாளி பழத்தை உடலுக்கு உள்ளே எடுத்துக் கொண்டாலும் சருமம் பளபளன்னு பளிங்கு போல ஜொலிக்கும். வெளியில் எடுத்துக் கொண்டாலும் சரும அழகு பேணி பாதுகாக்கப்படுகிறது. அது தான் இதில் இருக்கும் ஸ்பெஷாலிட்டி ஆகும். பப்பாளி பழத்தை தேவையான அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதை கைகளால் மசித்து வையுங்கள். இதனுடன் ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ், ஒரு ஸ்பூன் சுத்தமான தேன் சேர்த்து நன்கு பேஸ்ட் போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் மட்டும் தடவி 10 லிருந்து 20 நிமிடம் வரை நன்கு பேன் காற்றில் உலர விடுங்கள்.

உலர்ந்து முகம் இறுக ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் நீங்கள் முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்த காட்டன் துணியை வைத்து துடைத்து எடுங்கள். முகத்தை கழுவ வேண்டாம். இது போல வாரம் இரண்டு முறையில் இருந்து ஆரம்பித்து படிப்படியாக வாரம் ஒருமுறை என்று நீங்கள் குறைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து ஒருவர் இந்த பேக்கை போட்டு வந்தால் நாளடைவில் அவர்களுடைய முக சருமம் என்பது குழந்தையைப் போல ரொம்ப மென்மையாகவும், மிருதுவாகவும் மாறிவிடும். கொஞ்சம் கூட மேடு பள்ளங்கள் இல்லாமல், முகப்பருக்கள் தோன்றாமல் பளிங்கு போல ஜொலிக்க இதைவிட சிறந்த ஒரு பொருள் இருக்க முடியாது.

- Advertisement -

சென்சிடிவான சருமம் மற்றும் வெடிப்புள்ள சருமத்திற்கு முட்டையுடைய வெள்ளை கருவை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் பப்பாயா பழக் கூழை நன்கு அடித்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். பின்னர் முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 20 நிமிடம் உலர விட வேண்டும். பிறகு முகத்தை இதே போல ஈரத்துணியால் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது போல செய்து வந்தால் முகம் முழுவதும் ஒரே மாதிரியான ஈவன் டோனில் பளிச்சுன்னு இருக்கும். முகத்தில் இருக்கும் துளைகளை அடைத்து டைட்டன் செய்யும்.

இதையும் படிக்கலாமே:
தாங்க முடியாத பொடுகு தொல்லையால் அவதிப்பட்டு வருகிறீர்களா? இதோ வெறும் 10 ரூபாய் செலவில், உங்களுக்கான தீர்வு சமையலறையிலேயே இருக்கிறது.

சரும துளைகளை இருக செய்வதால் நம்முடைய சருமம் மென்மையாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். பிக்மென்ட்டேசன், பிரைட்னிங், டேனிங் செய்வதற்கு பப்பாயா சாறுடன், தக்காளிச் சாறையும் சேர்த்து முகத்திற்கு இதே போல அப்ளை செய்து உலர விட்டு பின் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவலாம். பப்பாயா பழக்கூழை நீங்கள் வேறு எந்த காய்கறி கூழ் அல்லது பழக் கூழுடன் சேர்த்து பயன்படுத்தினாலும் டபுள் மடங்கு ரிசல்ட் கிடைக்கும். அந்த அளவிற்கு எபக்ட்டிவாக செயல்படக்கூடிய இந்த பப்பாயா பேக் நீங்களும் இப்படி ட்ரை பண்ணி பல ரூபாய் நோட்டை மிச்சப்படுத்தலாமே!

- Advertisement -