தாங்க முடியாத பொடுகு தொல்லையால் அவதிப்பட்டு வருகிறீர்களா? இதோ வெறும் 10 ரூபாய் செலவில், உங்களுக்கான தீர்வு சமையலறையிலேயே இருக்கிறது.

podugu
- Advertisement -

தலையில் இருக்கும் தாங்க முடியாத பொடுகு பிரச்சனைக்கு தீர்வைத் தேடி ஆயிரம் ஆயிரமாக செலவு செய்து எத்தனையோ ஷாம்பு, எத்தனையோ எண்ணெயை வாங்கி பயன்படுத்தி இருப்பார்கள். சில பேர் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு ட்ரீட்மென்ட் எடுத்தும், இந்த பொடுகு தொல்லைக்கு விமோசனமே கிடைத்திருக்காது. எவ்வளவு பெரிய பொடுகு தொல்லையாக இருந்தாலும், அதை சரி செய்ய உங்கள் வீட்டு சமையல் அறையில் இருக்கும் இந்த ஒரு பொருள் போதுமே. அது எந்த பொருள் என்று தெரியாதா உங்களுக்கு. அது என்ன பொருள். அதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றிய விரிவான அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.

பொடுகு தொல்லையில் இருந்து விடுபட கடுகு ஹேர் பேக்:
நம்முடைய எல்லார் வீட்டு சமய அறையிலும் இருக்கக்கூடிய மிக மிக மலிவாக கிடைக்கக்கூடிய பொருள்தான் கடுகு. அந்த கடுகு போதும். தலைமுடியில் இருக்கக்கூடிய தீர்க்க முடியாத பொடுகு பிரச்சனையை சுலபமாக சரி செய்வதற்கு. இந்த பேக்கை எப்படி தயார் செய்வது? உங்கள் தலைமுடிக்கு ஏற்ப கடுகின் அளவை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

உதாரணத்திற்கு உங்களுடைய முடி மீடியம் சைஸில் இருக்கிறது என்றால், 1/4 கப் அளவு கடுகை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அதை முதலில் தண்ணீர் ஊற்றாமல் பொடி செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை பேக் போல அரைத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் தண்ணீர் ஊற்றி அரைக்க கூடாது. இந்த பேக் ஒரு பேஸ்ட் பக்குவத்திற்கு நமக்கு கிடைக்க வேண்டும்.

இப்போது நமக்கு தேவையான கடுகு ஹேர் பேக் தயார். இதை தலையில் போடுவதற்கு முன்பு நீங்கள் ஒரு சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த பேக்கை தலையில் போட்டால் நிச்சயமாக ரொம்ப ரொம்ப எரிச்சல் இருக்கும். ஆகையால் இதை ஒரு பேட்ச் டெஸ்ட் எடுத்து பிறகு உங்களுடைய தலையில் போட்டுக் கொள்வது நல்லது. உங்களுடைய ஸ்கேல்ப் ரொம்பவும் டிரை ஆக இருக்கிறது. அரிப்பு இருக்கிறது. இதனால் பொடுகு வருகிறது என்றால் நீங்கள் இந்த பேக்கை தாராளமாக பயன்படுத்தலாம். (பேக் போட்டு தலைக்கு குளித்த பின்பு எரிச்சல் எல்லாம் முழுமையாக அடங்கிவிடும் பயப்படாதீங்க.)

- Advertisement -

ஸ்கேல்பில் இருக்கக்கூடிய வறட்சித் தன்மையை முழுமையாக போக்கக்கூடிய சக்தி இந்த பேக்குக்கு உண்டு. ஒரு முறை இந்த பேக் போடும்போது பொடுகு எந்த அளவுக்கு நீங்கி இருக்கிறது என்று உங்களால் நிச்சயம் உணர முடியும். 99.9% ரிசல்ட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 10 நிமிடத்திற்கு மேலாக இந்த பேக் உங்கள் தலையில் இருக்கக் கூடாது. பத்து நிமிடத்திற்கு குறைவாக ஐந்து நிமிடம், ஏழு நிமிடம் கூட பேக்கை தலையில் வைத்துக் கொள்ளுங்கள். பத்து நிமிடத்திற்கு மேல் பேக்கை தலையில் விடவே கூடாது.

உங்களுடைய தலையில் ரொம்பவும் பொடுகு அதிகமாகி அரிப்பு ஏற்பட்டு ரத்தம் வரும் என்றால், அந்த நேரத்தில் இந்த பேக்கை பயன்படுத்தாதீங்க. இன்னும் அதிகமான எரிச்சலை கொடுத்து விடும். அந்த காயங்கள் ஆறிய பின்பு இந்த பேக்கை போடலாம். ‘மிக மிக முக்கியமான ஒரு விஷயம் மாதத்தில் 1 நாள் மட்டும் தான் இந்த பேக்கை பயன்படுத்த வேண்டும்’.

- Advertisement -

உங்களுக்கு இந்த பேக்கை போட்ட பிறகு இடையிடையே உங்களுக்கு பொடுகு வந்தால் கூட, அடிக்கடி இந்த பேக்கை போடக்கூடாது. ரொம்பவும் தாங்க முடியாத பொடுகு தொல்லை என்றால் 15 நாட்களுக்கு ஒரு முறை போல் இந்த கடுகு ஹேர் பேக் போட்டுக் கொள்ளுங்கள். (இந்த கடுகு ஹேர் பேக் போட்டாலும், பத்திலிருந்து பதினைந்து நாள் கழித்து தலையில் திரும்பவும் பொடுகு வரும். ஆனால் படிப்படியாக நாளடைவில் குறைய தொடங்கி விடும்.)

இதையும் படிக்கலாமே: பாதங்களில் உள்ள வெடிப்பை இனி நீங்கள் மறைக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரே வாரத்தில் செலவே இல்லாமல் பாத வெடிப்புகள் நீங்கி, பாதங்கள் மென்மையாக இதோ சூப்பர் டிப்ஸ்.

தலையில் இருக்கக்கூடிய சிக்கை எல்லாம் எடுத்துவிட்டு அதன் பின்பு இந்த ஹேர் பேக்கை வெறும் ஸ்கேல்பில் மட்டும் போட்டால் போதும். நுனி முடிக்கு எல்லாம் போட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நீங்களே இந்த பேக்கை தலையில் போட்டுக் கொள்வதை விட, அம்மா அக்கா யாராவது இதை உங்களுடைய ஸ்கேல்பில் படும்பொடி போட்டு விட்டால் இன்னும் சௌகரியமாக இருக்கும். என்னுடைய தலையில் எந்த பிரச்சனையும் இல்லை. அரிப்பு இல்லை. பொடுகு இல்லை. ட்ரைனஸ் இல்லை, என்றால் இந்த பேக்கை நீங்க பயன்படுத்தாதீங்க.

- Advertisement -