பாரம்பரிய உணவான இந்த புடலங்காய் கூட்டை ஒருமுறை இப்படி செய்து அனைவரையும் அசத்துங்கள்

pudalangai-koottu
- Advertisement -

தமிழகத்தின் பாரம்பரியமான பொரியல், கூட்டு வகைகளில் ஒன்றுதான் இந்த புடலங்காய் கூட்டு. புடலங்காயில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், புடலங்காய் உடம்பிற்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே இதனை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. கல்யாண வீடாக இருந்தாலும் சரி, ஹோட்டலாக இருந்தாலும் சரி அதில் புடலங்காய் கூட்டு இல்லாமல் இருக்காது. காரக்குழம்பு, வத்த குழம்பு, புளி குழம்பு, ரசம், தயிர் போன்ற அனைத்து விதமான குழம்புவகைகளுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட இந்த புடலங்காய் கூட்டு மிகவும் அருமையாக இருக்கும். ஒருமுறை இப்படி புடலங்காய் கூட்டை செய்து பழகி விட்டீர்கள் என்றால் அடிக்கடி இதனை செய்து கொண்டிருப்பீர்கள். அந்த அளவிற்கு இது எந்த வகை உணவுடன் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிட அவ்வளவு அசத்தலாக இருக்கும். வாருங்கள் புடலங்காய் கூட்டை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
புடலங்காய் – இரண்டு, தேங்காய் – கால் மூடி, கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், பாசிப்பருப்பு – கால் கப், அரிசி மாவு – ஒரு ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – 3, சீரகம் – ஒரு ஸ்பூன், சீரக தூள் – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் புடலங்காய், சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கால் மூடி தேங்காயை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் கடலைப்பருப்பு மற்றும் பாசிப்பருப்பை ஒரு கிண்ணத்தில் சேர்த்து இரண்டு முறை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி கொள்ள வேண்டும்.

பிறகு இவற்றுடன் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊற வைத்துள்ள கடலைப் பருப்பு, பாசிப் பருப்பை சுத்தம் செய்து, ஒரு குக்கரில் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு அதில் கடலைப் பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும் .பின்னர் இவற்றுடன் சீரகத்தூள், மஞ்சள்தூள் உப்பு மற்றும் நறுக்கி வைத்துள்ள புடலங்காய் சேர்த்து கலந்து விட்டு, மூடி போட்டு அடுப்பின் மீது வைத்து, ஒரு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

- Advertisement -

அதே சமயம் ஒரு மிக்ஸி ஜாரில் துருவி வைத்துள்ள தேங்காய் துருவல், சிறிதளவு வெங்காயம், ஒரு ஸ்பூன் அரிசி மாவு, பச்சை மிளகாய் ,சீரகம் மற்றும் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அனைத்தையும் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு குக்கரை திறந்து அதனுடன் இந்த அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்க வேண்டும்.

பின்னர் இவற்றை ஐந்து நிமிடத்திற்கு நன்றாக கொதிக்கவிட வேண்டும். பிறகு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, எண்ணெய் ஊற்றி, கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து, அதனுடன் சிறிதளவு வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இந்த கலவையை புடலங்காய் கூட்டுடன் சேர்த்து கலந்துவிட்டு, இறுதியாக கொத்தமல்லி தழை சேர்க்க வேண்டும்.

- Advertisement -