உங்கள் தொழில், வியாபார போட்டிகள் ஒழிந்து லாபங்கள் பெருக இம்மந்திரம் துதியுங்கள்

parameshwari

பெண் சக்தியே உலகில் உயிர்களை தோன்ற செய்வதோடு, அண்ட சராசரங்களையும் இயங்க செய்கிறது. அந்த சக்தியை அம்மன் தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர். உண்மையான பக்தர்களுக்கு நன்மைகளையும், தீய எண்ணங்கள் மற்றும் செயல்களை அழிக்கும் பராசக்தியாக இருக்கிறார் அம்மன். அதிலும் சாந்த குணம் கொண்ட ஸ்ரீ பரமேஸ்வரி தன்னை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளையும் அருளும் தெய்வமாக இருக்கிறாள். அந்த பரமேஸ்வரி தேவிக்குரிய மூல மந்திரம் இதோ.

mariyamman

பரமேஸ்வரி மூல மந்திரம்

ஓம் ஐம் க்லீம் சௌம் ஹ்ரீம்
ஸ்ரீம் பரமேஸ்வர்யை நமஹ

பரமேஸ்வரி அம்மனுக்குரிய மிகவும் சக்தி வாய்ந்த இந்த மூல மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் பரமேஸ்வரி தேவியை மனதில் நினைத்தவாறே 27 முறை உரு துதித்து வழிபடுவது நல்லது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் படத்திற்கு முன்பு நெய் தீபம் ஏற்றி, இம்மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை துதித்து வணங்குவதால் உங்கள் வாழ்வில் துரதிஷ்டங்கள் நீங்கி அதிர்ஷ்டங்கள் ஏற்படும். உங்கள் வாழ்வில் அனைத்து வளங்களும் ஒவ்வொன்றாக கிடைக்க பெறுவீர்கள். தொழில், வியாபாரங்களில் சக வியாபாரிகளின் நேரடி மற்றும் மறைமுக சதிகளை தவிடுபொடியாக்கும். மேலும் அந்த தொழில், வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். வீட்டில் தெய்வ கடாட்சம் உண்டாகும்.

amman

- Advertisement -

அம்மனை அனைத்து தினங்களிலும் வழிபடலாம் என்றாலும் வாரந்தோறும் வருகின்ற செவ்வாய்க்கிழமை காளிதேவியை வழிபடுவதற்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது. அந்த தினத்தில் ராகு கால நேரத்தில் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று நெய் அல்லது விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் உங்கள் வாழ்வில் ஏற்படுகின்ற எத்தகைய பிரச்சினைகளும் சுலபத்தில் கூர்ந்து நிம்மதி பெறலாம். பொதுவாக ஆடி மாதம் என்பதே அம்மன் தெய்வங்களுக்கு விரதம் இருந்து வழிபடுவதற்குரிய ஒரு சிறந்த காலமாக இருக்கிறது. அந்த மாதம் முழுவதும் காளிதேவிக்கு விரதமிருந்து வழிபாடு செய்வதால் வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள் அனைத்தும் நீங்கி, இன்பங்கள் பெருகும்.

இதையும் படிக்கலாமே:
குடும்ப வறுமையை போக்கும் மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Parameshwari moola mantra in Tamil. It is also called as Parameswari amman mantra in Tamil or Amman mantras in Tamil or Moola mantras in Tamil or Amman manthirangal in Tamil.