பூர்வ ஜென்மத்தில் நாம் செய்த பாவ கணக்குகள் கூட, இந்த ஜென்மத்தில் புண்ணியமாக மாறும். பறவைகளுக்கு இப்படி உணவு வைத்தால்!

Paavam neenga

பிரபஞ்சத்தில் இருக்கின்ற ஒரு சிறிய கோளான பூமியில் வாழ்கின்ற அனைத்து உயிர்களும் சமமானவை என்பது இயற்கையின் நியதியாகும். கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகள் முதல் கடலில் வாழ்கின்ற உலகின் மிகப்பெரிய விலங்கினமான நீலத்திமிங்கலம் வரை அனைத்தும் இறையம்சம் பொருந்தியவை என நமது நாட்டின் கலாச்சாரம் போதிக்கிறது. இத்தகைய விலங்குகளில் பல மனிதனாய் சாராமல் காட்டில் அதன் விருப்பம்போல வாழ்கின்றன. ஒரு சில விலங்குகள் மனிதர்களின் உதவியை பெற்றே வாழவேண்டிய நிலையில் இருக்கின்றன. இதில் பறவை இனங்கள் ஒரு சிறப்புத்தன்மை வாய்ந்த உயிரின வகையாக இருக்கின்றன. பறவைகளில் சில மனிதனை சார்ந்தும், சில மனிதனைச் சாராமலும் வாழ்க்கை வாழ்கின்றன. இந்த பறவை இனங்களுக்கு நமது ஆன்மீகத்தில் இருக்கின்ற முக்கியத்துவமும், அவற்றால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆன்மீக ரீதியிலான நன்மைகள் என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

amavasai1

வானில் சிறகடித்து பறக்கின்ற பறவைகள் அனைத்துமே சுதந்திர தன்மைக்கு ஒரு அடையாளமாக விளங்குகின்றன. மனித உடலில் இருக்கின்ற ஆன்மாவின் தன்மையை பறவைகள் குறிப்பதாக ஞானிகள் கூறுகின்றனர். காஷ்மீர் மாநிலத்தில் இருக்கின்ற அமர்நாத் குகை பனிலிங்க கோவிலின் மீது பாறை இடுக்குகளில் பல தலைமுறைகளாக ஒரே ஒரு ஜோடி புறாக்கள் மட்டும் வசிப்பதாகவும், அந்தப் புறாக்களின் வடிவில் சிவபெருமான் மற்றும் பார்வதி தான் என்றும், அவர்கள் அங்கு வந்து வழிபடும் பக்தர்களின் துயரங்கள் தீர ஆசிர்வதிப்பதாகவும் அங்கிருப்பவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

நமது வாழ்விலும் ஒவ்வொரு நாளும் காலை எழுந்தது முதல் இரவு உறங்க செல்வது வரை பலவிதமான பிரச்சனைகளையும், துன்பங்களையும், துயரங்களையும் நாம் அனுபவிக்கின்றோம். இத்தகைய வாழ்வியல் சிக்கல்கள் அனைத்தும் சுலபமாக தீருவதற்கு அனுபவம் வாய்ந்தவர்கள் கூறுகின்ற ஒரு சூட்சம பரிகாரமாக பறவைகளுக்கு உணவிடும் முறை இருக்கிறது.

peacock

தெய்வீக அம்சம் பொருந்திய பறவைகளான மயில்கள், அன்னப்பறவைகள், கிளிகள், வெள்ளை நிறப் புறாக்கள் மற்றும் வண்ணங்களில் இருக்கின்ற காட்டுப் பறவைகள் போன்றவைகளுக்கு பிரச்சனைகளால் அவதியுறுபவர்கள் அவர்களின் வசதிக்கேற்ப தினமும் காலையில் அப்பறவைகளுக்கு உணவு தானியங்கள் மற்றும் தண்ணீரை வைத்து அவற்றை அந்தப் பறவைகள் வந்து உண்ணும் பட்சத்தில் உங்களின் ஒரு தலைமுறை பாவங்கள் நீங்குவதாக கூறப்படுகிறது. பல வண்ணங்களில் இருக்கின்ற பறவைகள் ஒரு நபரின் வீட்டில் இருக்கும் மரங்களில் கூடு கட்டி வசித்தாலோ அல்லது அவ்வப்போது உணவு, நீர் அருந்த அவ்வீட்டிற்கு வந்து சென்றாலோ அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் இருப்பதற்கு சான்று என சீன நாட்டு வாஸ்து சாஸ்திரமான “பெங் சுயி” கூறுகின்றது.

கிராமப்புறப் பகுதிகளில் காடு, வயல், வரப்பு, மரம், செடிகள் இருப்பதால் பலவிதமான பறவைகள் அங்கு வசிக்கும் மக்களின் வீடுகள் சுற்றியுள்ள பகுதிகளில் வந்து செல்வது சகஜமான ஒன்றாகும். ஆனால் நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு இத்தகைய பறவைகளை பார்க்கவோ அல்லது அவற்றிற்கு உணவளிக்கும் வாய்ப்போ கிடைப்பதில்லை. ஆனால் நகரங்களில் பல இடங்களில் பரவலாக வாழ்கின்ற பறவையினங்களாக காகங்கள்,புறாக்கள் மற்றும் வீட்டுகுருவிகள் இருக்கின்றன.

birds

எனவே இத்தகைய பறவையினங்களுக்கு நகரங்களில் வசிப்பவர்கள் கோடைகாலங்களில் தங்கள் வீட்டு மாடிப் பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீரை வைப்பது சாலச் சிறந்தது. அப்படி வைக்கப்பட்ட அந்த உணவு மற்றும் நீரினை அந்த பறவையினங்கள் வந்து அருந்துவதால் உங்களின் பூர்வ ஜென்ம கர்ம வினைகள், அன்றாட வாழ்க்கையில் உங்களை அறியாமல் செய்கின்ற பாவங்கள் போன்றவை நீங்கி, பல புதிய வாய்ப்புகள், பலவகையான அதிர்ஷ்டங்கள் உங்களை தேடி வருவதற்கும் இந்த பரிகாரம் வழிவகை செய்யும்.