வழக்குகளில் வெற்றி பெற பரிகாரம்

முற்காலங்களில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதை பேச்சுவார்த்தையின் மூலமே தீர்த்துக்கொண்டார்கள். ஆனால் இன்றோ எந்த சிறு விடயங்களுக்கு கூட நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து தீர்வு காண முயல்கிறார்கள். கடுமையான குற்றங்களை தெரிந்தே செய்தவர்கள் நீதிமன்ற வழக்குகளில் தப்பித்தாலும், இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. ஆனால் சிலர் எந்த தவறும் செய்யாமல் குற்ற வழக்குகளில் சிக்கி கொள்கின்றனர். இன்னும் சிலர் தங்களின் சொத்துக்கள் மற்றும் இதர விடயங்கள் சம்பந்தமான வழக்குகளுக்கு நீதி மன்ற படிகள் ஏறி இறங்குகின்றனர். இத்தகைய நபர்களுக்கு நீதிமன்ற வழக்குகளில் நியாமான தீர்ப்பு கிடைக்கவும், வழக்கில் வெற்றியை பெறவும் செய்யும் சில பரிகாரங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

sani bagavaan

வழக்குகளில் வெற்றி பெற பரிகாரம்:

நவகிரகங்களில் “நீதிதேவன்” என அழைக்கப்படுபவர் “சனி பகவான்” ஆவார். நீதிமன்றங்களில் உங்களின் வழக்கு நடைபெறும் காலம் முழுவதும் சனிக்கிழமைகளில் நவகிரக சந்நிதியில், சனிபகவானுக்கு கருப்பு எள் கலந்த விளக்கெண்ணெய் தீபத்தை ஏற்றி, சனி பகவானுக்குரிய மந்திரங்களை கூறி வழிபட்டு வரவேண்டும். மேலும் சனிபகவானின் வாகனமான காகங்களுக்கு தினந்தோறும் உணவு வைத்து, சனி பகவானை வணங்கினால் நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமைய அருள்புரிவார் சனீஸ்வரர்.

உங்கள் வழக்கு சம்பந்தமாக முதல் முறையாக நீதி மன்றம் செல்வதற்கு முன்பு “ஆஞ்சநேயர்” கோவிலுக்கு சென்று இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி, தூபங்கள் கொளுத்தி லட்டுகளை நிவேதனம் செய்து ஆஞ்சநேயரை போற்றும் “அனுமன் சாலீஸாவை” படித்து அவரை வழிபட்ட பின்பு, அந்த லட்டுகளை கோவிலில் இருப்பவர்களுக்கு பிரசாதமாக அளித்து விட்டு நீதி மன்றம் சென்றால், தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும் நிலை உண்டாகும்.

court

நீங்கள் உங்கள் வழக்கு சம்பந்தமாக நீதிமன்றம் செல்லும் போது சிறிது அரிசியை உங்களுடன் எடுத்துச்சென்று, நீதிமன்ற வாயிலிலோ அல்லது உங்கள் வழக்கு நடைபெறும் நீதிமன்ற அறையின் முன்போ, யாரும் பார்க்காத வகையில் அரிசியை தூவி விட வேண்டும். மேலும் உங்கள் வழக்கு தொடர்பாக நீங்கள் நீதிமன்றம் செல்லும் போது கருப்பு நிற ஆடைகளையும், இன்ன பிற நிறங்களின் அடர்வண்ண ஆடைகளை அணிந்து செல்வது நீதிமன்ற வழக்குகளில் வெற்றியடைய சிறந்த பரிகாரங்களாகும்.

இதையும் படிக்கலாமே:
நவகிரக தோஷ பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரசியமான ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pariharam for Court cases in Tamil.