கிருத்திகை நட்சத்திரகாரர்கள் இதை செய்தால் மிகுந்த பலன்களை பெறலாம்

kiruthigai

உலகிற்கு மட்டுமல்ல மனிதர்களின் அக வாழ்வுக்கும் ஒளியாக இருக்கக் கூடிய கிரகமாக சூரிய பகவான் இருக்கிறார். சூரிய பகவானுக்குரிய நட்சத்திரங்களாக “கிருத்திகை, உத்திரம், உத்திராடம்” வருகின்றன. இதில் கிருத்திகை நட்சத்திரதத்தின் தரிசனத்தை மார்கழி மாதத்தில் வானில் அனைவரும் காண முடியும். அந்த கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திர தோஷங்கள் நீங்கவும், வாழ்வில் பல மேன்மையான பலன்களை பெறவும் செய்ய வேண்டிய எளிய பரிகார முறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

surya-viratham

27 நட்சத்திர வரிசையில் மூன்றாவதாக வருவது கிருத்திகை நட்சத்திரமாகும். நவகிரகங்களில் சூரிய பகவானின் மிகுதியான ஆதிக்கத்திற்கு உட்பட்ட நட்சத்திரமாக இருந்தாலும் செவ்வாய் மற்றும் சுக்கிர கிரகங்களின் ஆதிக்கம் ஒரு சேர கொண்ட ஒரு வித்தியாச நட்சத்திரமாக இருக்கிறது கிருத்திகை நட்சத்திரம். இந்நட்சத்திரத்தின் தேவதையாக அக்னி பகவான் இருக்கிறார். கிருத்திகை நட்சத்திரம் தமிழர்களின் கடவுளான முருக பெருமானுக்குரிய நட்சத்திரமாகவும் இருக்கிறது.

கிருத்திகை நட்சத்திரக்காரர்களின் தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடக்க ஒவ்வொரு மாதமும் வருகின்ற கிருத்திகை நட்சத்திர தினத்தன்று முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது. கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தல விருட்சமாக அத்தி மரம் இருக்கிறது. அத்தி மரம் தல விருட்சமாக இருக்கும் கோவில்களுக்கு சென்று அத்தி மரத்தையும், அங்குள்ள இறைவனையும் வழிபடுவது உங்களுக்கு வாழ்வில் அதிர்ஷ்டங்களை பெருகச்செய்யும் சிறந்த பரிகாரமாகும்.

Sivanmalai Murugan

எந்த ஒரு மாதத்திலும் வரும் கிருத்திகை நட்சத்திர தினத்திலோ அல்லது ஆடிக்கிருத்திகை தினத்திலோ உங்கள் சக்திக்கு ஏற்ப வேதமறிந்த பிராமணர்களுக்கு அரிசி, வஸ்திரம் போன்றவற்றை தானம் செய்யலாம். மற்ற எந்த பரிகாரம் செய்யவில்லை என்றாலும் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும், சூரிய நமஸ்காரம் செய்வதால் வாழ்வில் எப்போதும் நன்மைகள் ஏற்படும். கோயில்களில் நடைபெறும் யாகங்களுக்கு தேவையான பூஜைப் பொருட்களை வாங்கித் தருவதும் கிருத்திகை நட்சத்திரக்காரர்களின் தோஷங்களை போக்குவதற்கான சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
சதயம் நட்சத்திரக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Karthigai nakshatra dosha pariharam in Tamil. It is also called as Karthigai natchathiram in Tamil or Karthigai natchathira athipathi in Tamil or Surya bhagavan nakshatras in Tamil or Kiruthigai natchathiram in Tamil.