உங்கள் தொழில், வியாபார கூட்டாளிகளால் லாபம் ஏற்பட இதை செய்யுங்கள்

money

ஒரு மனிதன் தனித்து வாழும் வாழ்க்கை என்பது அர்த்தமற்றதாகவே இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவோடு வாழும் வாழ்க்கை நமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், பல அனுகூலங்களையும் கொடுக்கிறது. ஆனால் இக்காலங்களில் இப்படிப்பட்ட நெருங்கிய உறவுகள் மற்றும் நட்புகளுக்கும் சிறு பிரச்சனை ஏற்பட்டு நிரந்தரமாக பிரிந்து விடும் சூழல் அதிகம் காணப்படுகிறது. இப்படி நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு பிரிவினை ஏற்படாமல் தடுப்பதற்கும் குடும்ப ஒற்றுமை மேம்படவும், பிறரின் நம்பிக்கையை பெறுவதற்கும் செய்யப்படும் சம்வாத சூக்த ஹோமம் பூஜை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Vinayagar

சம்வாத சூக்தம் ஹோமத்தை செய்வதற்கு ஹோம பூஜைகள் செய்வதில் அனுபவம் பெற்ற வேதியர்களிடம் ஒரு நல்ல நாளை குறித்து கொள்ள வேண்டும். உங்கள் பிறந்த நட்சத்திர தினத்திலோ அல்லது ஒரு சுப முகூர்த்த தினத்திலோ அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த ஹோம பூஜையை செய்யலாம். இந்த பூஜையில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் போன்றவர்கள் கலந்து கொள்வது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

அனுபவம் வாய்ந்த வேதியர்கள் விநாயகர் பூஜை செய்து, சக்தி வாய்ந்த மந்திரங்கள் துதித்து இந்த ஹோமத்தை செய்வதால் உங்களிடம் மற்றும் உங்கள் உறவினர்கள், நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் போன்றோர்களிடம் அண்டியிருக்கம் எதிர்மறை சக்திகள் அனைத்தும் நீங்கும். ஹோம பூஜை முடிந்த பிறகு ஹோம அஸ்தி மற்றும் பூஜையில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பிரசாதமாக தரப்படும். அதை உங்கள் பூஜையறையில் வைத்து வணங்கி தினமும் உங்கள் நெற்றியில் திலகமிட்டு வர உங்களை பீடித்திருக்கும் அத்தனை தோஷங்களும் நீங்கும்.

அரசியல் துறை மற்றும் பொது மக்களிடம் அதிகம் தொடர்பில் இருக்கும் பணிகளில் இருப்பவர்கள் தொழிலதிபர்கள், வியாபாரிகள் போன்றோர் இந்த சோம சூக்த ஹோமம் செய்து கொள்வதால் மக்களின் நம்பிக்கை, ஆதரவு ஆகியவற்றைப் பெற்று அதனால் உங்களுக்கு பல அனுகூலங்கள் ஏற்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பிணக்குகள் ஏற்படாமல் தடுக்கும். உங்கள் வியாபார, தொழில் கூட்டாளிகளுடன் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுத்து, அவர்களின் நட்பும், முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு எப்போதும் இருக்குமாறு செய்யும். கணவன் – மனைவிக்கிடையே பிரச்சனைகள், மனஸ்தாபங்கள் ஏற்படுவதையும் தடுத்து இல்வாழ்க்கை சிறக்க உதவுகிறது.

இதையும் படிக்கலாமே:
கண் திருஷ்டி நீங்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Samvada suktam homam in Tamil. It is also called as Homam poojas in Tamil or Uravugal membada in Tamil or Homangal in Tamil or Kudumba otrumaiku pariharam in Tamil.