உங்கள் குலதெய்வ சக்தியை வீட்டிற்குள் அழைக்க இதை நிலவாசல் படியில் கட்டி வையுங்கள் போதும்! 1 வாரத்தில் குலதெய்வம் வீட்டிற்குள் வரும்.

- Advertisement -

குலதெய்வ அருள் எல்லா குடும்பத்திற்கும் மிகவும் அவசியமான ஒன்று. நீங்கள் எந்த தெய்வத்தை வணங்கும் முன்னரும் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு அதன் பின் தான் வணங்க வேண்டும் என்பது நியதி. குலதெய்வம் துணையாக உங்கள் வீட்டில் இருந்து விட்டால், எந்த சக்தியும் உங்களை எதிர்க்க முடியாது. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த குல தெய்வ சக்தியை நம் வீட்டிற்குள் எப்படி வரவழைப்பது? அதற்கான எளிய பரிகாரம் என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்..

kula-dheivam

குலதெய்வம் மிகவும் உக்கிரமானது. அதே அளவிற்கு நம் குடும்பத்தின் மேல் அதிக அளவு பாசமும் கொண்டது. அதற்கு என்ன காரணம் தெரியுமா? குலதெய்வம் என்பது நம்மை மீறிய இறைசக்தி போன்ற தெய்வீக சக்தி அல்ல. குலதெய்வம் என்பது நம் குலத்தை காக்க, நம் வம்சத்தை செழிக்க வைக்க நம்முடைய பல தலைமுறைகளைக் கடந்த ஆத்மாக்களுடைய சங்கமம் தான் குலதெய்வம். பல தலைமுறைகளைக் கடந்து நாம் இன்று இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

- Advertisement -

அதுபோல் ஒவ்வொரு குடும்பத்திலும் எண்ணிக்கையே இல்லாத அளவிற்கு முன்னோர்கள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்களுடைய ஒட்டுமொத்த ஆசிர்வாதமும், அருளும் ஒருசேர குலதெய்வத்தின் வாயிலாக நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக இறைவனால் உருவாக்கப்பட்ட ஒரு சக்தி தான் குலதெய்வம் என்பது. ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் குலதெய்வ அருள் இருக்க வேண்டும். குலதெய்வ சக்தியை நம் வீட்டிற்குள் எப்போதும் இருக்க செய்ய வேண்டும். அதை எப்படி செய்வது?

kula dheivam

குலதெய்வத்தை மறந்தவர்கள், குலதெய்வம் என்னவென்றே தெரியாதவர்கள், பூஜைகள் செய்வதை தவிர்ப்பவர்கள், வேண்டுதல்கள், பிரார்த்தனைகளை நிறைவேற்றாமல் விட்டு விடுதல் போன்ற காரணத்தினால் குலதெய்வ சாபம் அல்லது கோபம் நம் குடும்பத்திற்கு இருக்கும். அதனால் உங்கள் குடும்பத்தை விட்டு உங்கள் குலதெய்வம் விலகியே நிற்கும். அதற்கு பரிகாரமாக குலதெய்வத்தை மன்னித்தருள வேண்டி நம் வீட்டிற்குள் மனதார அழைக்க வேண்டும். அதற்குரிய பரிகாரத்தை இப்போது பார்ப்போம்.

- Advertisement -

மிக எளிமையான முறையில் இந்த பரிகாரத்தை நாம் செய்துவிடலாம். ஒரு சிகப்பு காட்டன் அல்லது பட்டு துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சதுரமாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு மஞ்சள், சந்தனம், குங்குமம், விபூதி, சாம்பிராணி, அடுப்புக்கரி இவைகளை போட்டுக் கொள்ள வேண்டும். இதை அதிகமாக கூட போட தேவையில்லை. சாஸ்திரத்திற்கு சிறிதளவு சிறிதளவு போட்டால் போதும். இதை முடித்து வைத்து ஒரு கருப்புநிற கயிற்றால் கட்டிக் கொள்ளுங்கள். உங்கள் குல தெய்வத்திற்கு கருப்பு நிறம் ஆகாது என்றால் நீங்கள் மஞ்சள் நிற கயிறு கட்டிக் கொள்ளுங்கள்.

kuladheivam 1

மந்திரம்:
ரோகாச் சோகாச் ச தாரித்ர்யம் தெளர்பல்யம் சித்தவிக்ரியா!
நச்யந்து குலதேவஸ்ய சக்தி மந்த்ரேண தாடிதா!!

- Advertisement -

vasal-kathavu

இந்த முடிச்சை வலது கையில் வைத்துக் கொண்டு மேற்கூறிய மந்திரத்தை கண்களை மூடிக்கொண்டு மூன்று முறை உச்சரிக்கவும். அதன்பின் உங்கள் வீட்டின் நில வாசல்படியில் மேல் பகுதியில் நடுவில் இருக்கும் ஆணியில் மாட்டி வைத்து விடுங்கள். அதன்பின் தொடர்ந்து ஒரு வாரம் வரை அதற்கு ஊதுபத்தி காண்பித்து, கற்பூர ஆரத்தி எடுங்கள். ஒருவாரம் இதேபோல் செய்தால் அதற்குள் உங்கள் வீட்டு குலதெய்வம் மனமிறங்கி வீட்டிற்குள் வந்து விடும் என்பது ஐதீகம்.

இதையும் படிக்கலாமே
குடும்ப பிரச்சனை, தம்பதியர் கருத்து வேற்றுமை நிரந்தரமாக தீர இந்த எளிய பரிகாரத்தை நீங்களும் செய்து பார்க்கலாமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -