கணவன் மனைவி இணைபிரியாமல் வாழ்வதற்கான பரிகாரம்

thirumana-thambadhigal
- Advertisement -

நமது நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தில் திருமணத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. திருமணம் செய்வதன் பிரதான நோக்கமே ஒரு ஆண் மற்றும் பெண் இல்லற வாழ்வில் கணவன், மனைவியாக இணைந்து தாங்களும் சிறப்புற வாழ்ந்து, சமூகத்திற்கு அறம் செய்வது தான் என நமது தமிழ் இலக்கியங்களும், இந்து மத சாஸ்திரங்கள் அனைத்தும் வலுயுறுத்துகின்றன. தற்காலங்களில் திருமணம் ஆன தம்பதிகளில் கணவன் – மனைவி இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்வது, விவாகரத்து செய்வது போன்றவை அதிகரித்து வருகிறது. தம்பதிகளுக்கிடையே இருக்கும் மேற்கூறிய பிரச்சனைகளை போக்குவதற்கான ஒரு எளிமையான, ஆற்றல் வாய்ந்த பரிகாரத்தை இங்கு காண்போம்.

Marriage

இக்காலங்களில் பலரும் திருமணம் என்பது ஆணும், பெண்ணும் இல்லற வாழ்வில் இணைந்து குழந்தைகளை பெற்று வாழ்வது தான் என்கிற எண்ணம் அனைவரிடமும் உள்ளது. ஆனால் நமது பலம் தமிழ் இலக்கியங்களில் ஆணும், பெண்ணும் திருமண பந்தத்தில் இணைந்து ஒருவருக்கொருவர் அன்பாக இருந்து , தங்களுக்குகான வாரிசுகளை பெற்றெடுத்து வாழ்ந்தாலும், சமுதாயத்திற்கு அறம் அல்லது தர்மம் செய்வது மட்டுமே முக்கியமான நோக்கமாக கொண்டு வாழ வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இல்லற வாழ்வில் இருக்கும் ஆண் – பெண் மட்டுமே துறவி, சக இல்லறவாசி, ஒட்டுமொத்த சமுதாயம், பிற உயிர்கள் ஆகிய அனைத்திற்கும் வாழ்வளிக்கும் பேறு பெற்றவர்கள் என பழங்கால இலக்கியங்கள் அனைத்தும் போற்றுகின்றன.

- Advertisement -

நமது முந்தைய தலைமுறை முன்னோர்கள் காலத்தில் கணவன் மனைவி பிரிவு விவாகரத்து போன்றவை மிக மிக அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று இருக்கும் தலைமுறையில் திருமணம் ஆனவர்கள் மிக அற்பமான காரணங்களுக்காக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்வது விவாகரத்து கேட்டு நீதிமன்றம் செல்வது போன்றவை நடக்கிறது. இதில் ஆணோ அல்லது பெண்ணோ தங்கள் வாழ்க்கை துணை தங்களிடம் இணக்கமாக இருக்கவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் கீழ்கண்ட எளிய பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து வந்தால் தம்பதிகள் ஒற்றுமை குறையாமல் வாழலாம்.

marriage

இரண்டு நாகங்கள் பிணைந்து இருக்கும் நிலையில் இருக்கும் நாகராஜர் சிலைக்கு, வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில், பால் அபிஷேகம் செய்து, மஞ்சள், குங்குமம் போன்றவற்றை நாகராஜர் சிலைக்கு வைத்து, செவ்வரளி பூக்களை சாற்றி, நெய் தீபங்கள் ஏற்றி கோவிலில் தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் தம்பதிகள் ஒற்றுமையாக வாழ்வார்கள். பிரிந்து வாழும் கணவன் – மனைவி யாராவது ஒருவர் இந்த பரிகாரத்தை செய்தால் விரைவில் உங்கள் வாழ்க்கை துணை உங்களுடன் இணைந்து வாழ வருவார். இப்பரிகாரத்தை 11 வாரம் வரை செய்வது சிறப்பான பலனை தரும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
ஐப்பசி மாத சிறப்பு வழிபாடு

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pariharam for separated couple in Tamil. It is also called as Kanavan manaivi prachanai theera pariharam or kanavan manaivi otrumai pariharam or Husband wife problem pariharam in Tamil

- Advertisement -