மாற்றுத்திறனாளிகளுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க பரிகாரம்

nandi

திருமணம் என்பது வயது வந்த ஆணும், பெண்ணும் இல்லற வாழ்வில் இணைந்து செயல்பட்டு, எதிர்கால சமுதாயத்திற்கு நன்மையை உண்டாக்கும் நன்மக்கள் பேற்றை, பெற்று அனைத்து உயிர்களுக்கும் அறம் செய்வதே ஆகும். இக்காலத்தில் பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு சரியான வரன் பார்த்து திருமணம் செய்வதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். இதிலும் உடலில் குறைபாடு அடைந்த நபர்களும், அவர்களின் பெற்றோர்கள் அவர்களுக்கு திருமணம் செய்ய முடியாமல் அடையும் வேதனை வெளியில் சொல்ல முடியாதது. இப்படிப்பட்ட நபர்களும் வெகு விரைவில் இல்லற வாழ்க்கை அமைய பெறுவதற்கான பரிகாரங்கள் இதோ.

Hindu Marriage

தற்காலத்தில் உள்ள வாழ்க்கை முறை மற்றும் பொருளாதார நிலை காரணமாக திருமண வயது வந்த ஆண்களும், பெண்களும் மிகுந்த காலங்கடந்தே திருமணம் செய்கின்றனர். மேலும் பலருக்கு கல்வி, பொருளாதார காரணங்களால் சரியான வரன் கிடைக்காமல் திருமணம் தாமதமாகிறது. இதில் பிறவியிலேயோ அல்லது விபத்திலேயோ உடல் குறைபாடு அடைந்த மாற்றுத்திறனாளி ஆண்கள், பெண்கள் கல்வி, பொருளாதார தகுதி போன்றவை இருந்தும் பலர் திருமணம் ஆகாமலே வாழும் பரிதாப நிலை பரவலாக காணப்படுகிறது.

இப்படி உடல்ரீதியாக குறைபாடு அடைந்த நபர்கள் கவலை கொள்ளாமல் இறைவனின் மீது முழு நம்பிக்கை வைத்து சில எளிய பரிகார வழிபட்டு முறைகளை செய்தால் சீக்கிரம் சிறந்த வாழ்க்கை துணை அமைய பெறுவார்கள். மாற்றுத்திறனாளி திருமணமாக ஆண்கள் மற்றும் பெண்கள் 9 சனிக்கிழமைகள் சனீஸ்வரர் சந்நிதியில் கருப்பு எள் கலந்த விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, உங்களின் திருமண தடை நீங்க வேண்டும் என மனதார நினைத்து சனி பகவானை வழிபட்டு வர திருமண வரன் சீக்கிரம் அமையும் வாய்ப்பை சனி பகவான் வழங்குவார்.

nandi

வாரத்தின் எந்த ஒரு கிழமையிலும் எம கண்ட நேரத்தில் சிவன் கோயிலுக்கு சென்று, சிவனை வழிபட்டு சிவனின் பிரகாரத்தை மூன்று முறை சுற்றி வந்து வணங்க வேண்டும். பின்பு கோயிலில் உள்ள கொடிமரத்தை வணங்க வேண்டும், பிறகு சிவபெருமானுக்கு எதிராக அமர்திருக்கும் நந்தி பகவானின் வாலை தொட்டவாறு ” “ஓம் நமசிவாய நமக” என்று 9 முறை சொல்ல வேண்டும். பின்பு நந்தியின் காதில் எனக்கு திருமணம் நடக்க வேண்டும் என 9 முறை கூறி வணங்க வேண்டும். மேற்கண்ட முறையில் தொடர்ந்து ஒன்பது கிழமைகள் அன்று எமகண்ட நேரத்தில் வழிபடும் நபர்களுக்கு 90 நாட்கள் காலத்திற்குள் திருமணம் வரன் அமைந்து, திருமணம் இனிதே நடக்கும்.

இதையும் படிக்கலாமே:
துஷ்ட சக்திகள் தொல்லை நீங்க பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pariharam for wedding in Tamil. It is also called as Marriage pariharam in Tamil or Thirumanam nadaka in Tamil or Nandhi valipadu in Tamil or Udal oonamutror thirumanam in Tamil.