உங்களை பீடிக்கும் துஷ்ட சக்திகள் தொல்லை நீங்க எளிய பரிகாரம் இதோ

bairavar

மனிதர்களின் மனம் மிகவும் விசித்திரமானது. ஒரு சமயம் நமது மனம் அனைவருக்கும் நன்மை நடக்க வேண்டும் என விரும்புகிறது. மற்றொரு சமயம் பிறருக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பொறாமை கொள்கிறது. அதிலும் ஒரு சிலர் மற்றவர்கள் நன்றாக இருப்பதை பொறுக்காமல் நேரடியாகவும், மறைமுகமாகவும் அந்நபர்களுக்கு பல வகையான தீங்குகளை செய்கின்றனர். அதில் மாந்திரீக கலையை பயன்படுத்தி செய்யப்படும் செய்வினை, ஏவல் போன்றவையும் ஒன்று இதிலிருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரு வழிமுறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Seivinai

பொறாமை என்கிற ஒரு குணம் மனித இனத்திற்கு இருக்கும் ஒரு சாபக்கேடு. இக்குணத்தை நம்மிடமிருந்து நீக்கிவிட்டால் கோடிக்கணக்கான பணம் நமக்கு இல்லாவிட்டாலும் நாம் பணக்காரராகவே இருப்போம், உணர்வோம். ஆனால் பலருக்கும் இதை பற்றி ஆராயும் சிந்தனை திறனோ, உன்னத குணமோ கிடையாது. உறவினர்கள், நண்பர்கள் என வெளியில் கூறிகொண்டலும் மறைமுகமாக நமது அழிவிற்கான முயற்சிகளில் இக்காலங்களில் பலர் ஈடுபடுகின்றனர். அதில் அவர்களுக்கு தெரிந்த சுலபமான வழி தீய மாந்த்ரீகர்கள் மூலம் செய்வினை, தீய ஆவி, தீய தேவதைகளை பிறர் மீது ஏவுவது. இதிலிருந்து நம்மையும், நம்மை சார்ந்தவர்களையும் காக்கும் வழிமுறை தான் இது.

செய்வினை, தீய ஆவிகள், துர்தேவதைகளின் பிடியில் சிக்கி தவிக்கும் நபர்களை, அத்தகைய துஷ்ட மாந்திரீக பாதிப்பிலிருந்து விடுவிக்கவும், இதற்கு மேலும் எதிராளிகள் உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ மாந்திரீக ஏவல்களை செய்வதை தடுக்கவும் ஒரு தேய்பிறை வியாழக்கிழமை தினம் அல்லது தேய்பிறை அஷ்டமி தினத்தில் ஒரு தேங்காயை உங்கள் இருக்கைகளில் எடுத்து கொண்டு, அந்த தேங்காயில் இருக்கும் 3 கண் அமைப்பை பார்த்தவாறு “ஓம் சகஸ்ராரா கூபன் ஸ்வாஹா” என்கிற மந்திரத்தை 18 தடவை ஜெபிக்க வேண்டும். எதிரிகள் உங்களுக்கோ அல்லது பாதிக்கப்பட்ட நபர்களுக்கோ மேற்கொண்டு தீங்கு விளைவிக்க செய்யும் அத்தனை முயற்சிகளும் தோற்க்க கடவது என்று நினைத்தவாறே இம்மந்திரம் துதிக்க வேண்டும்.

coconut

பிறகு அந்த தேங்காயை உடைத்து, அதில் இருக்கும் நீரை உங்கள் வலது கையில் சிறிதளவு எடுத்து பாதிக்கப்பட்ட நபர்களின் தலையிலும், முகத்திலும் தெளிக்க வேண்டும். இப்படி செய்வதால் எதிராளிகள் உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ செய்து ஏவல் மாந்திரீக கட்டு நீங்கும். இதன் பிறகு துஷ்ட மாந்திரீக பாதிப்பு முழுமையாக நீங்க “பைரவர், ஆஞ்சநேயர்” போன்ற தெய்வங்களின் கோயில்களுக்கு சென்று முறையான பூஜை, அர்ச்சனை செய்து வழிபடுவதால் முழுமையான நிவாரணம் பெறலாம்.

இதையும் படிக்கலாமே:
இந்த வேர் வீட்டில் இருந்தால் செல்வம் குவியும்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Remedies for enemies in Tamil. It is also called as Ethirigal thollai neenga in Tamil or Seivinai removal in Tamil or Manthriga valimurai in Tamil or Dhusta sakthigal vilaga in Tamil.