தெரியாமல் கூட இந்த சில பொருட்களை எவருக்கும் பரிசளிக்காதீர்கள் உறவு முறியும் தெரியுமா?

clock-gift
- Advertisement -

சொந்தங்கள், பந்தங்கள், நண்பர்கள், உற்றார், உறவினர்கள் என்று நம்மை சுற்றி இருக்கும் நெருங்கியவர்களுக்கு நல்ல காரியம் ஏதாவது நடந்தால் நாம் அவர்களுக்கு பரிசளித்து மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த பரிசு பொருள் என்பது எவ்வளவு முக்கியம் தெரியுமா? கொடுக்கும் பொருளில் மட்டும் அல்ல, கொடுக்கும் மனதிலும் ஆயிரமாயிரம் ஆற்றல்கள் வெளிப்படுகின்றன. இவற்றில் குறைகள் இருந்தால், அந்த உறவு நிலைக்காது என்று கருதப்படுகிறது. அந்த வகையில் பரிசளிக்கக் கூடாவே கூடாத சில பொருட்கள் என்னென்ன? என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க.

நாம் அனைவரும் பொதுவாக திருமணம் அல்லது ஏதாவது ஒரு விசேஷங்களின் பொழுது எவர்சில்வர் பாத்திரங்களை பரிசளிக்கின்றோம். வெள்ளிப் பொருட்களை கூட பரிசளித்து மகிழ்கின்றோம். திருமணம், பிறந்த நாள், காது குத்து, மஞ்சள் நீராட்டு விழாவின் பொழுது பலரும் தங்கம் பரிசளிப்பது உண்டு. இந்த வகையில் எந்த விதத்திலும் இரும்பு என்கிற உலோகம் கலந்திருக்கக்கூடாது. இரும்பினால் ஆன பொருட்களை பரிசளிப்பது சனியின் ஆதிக்கம் பெற்றுள்ளதால் முறையானது அல்ல! இது பிரிவுகளை வகுக்கும்.

- Advertisement -

வாஸ்துவின்படி குதிரையில் லாடம் யானை பொம்மைகள் போன்றவை அதிர்ஷ்டம் நிறைந்தவையாக கருதப்படுகிறது. யாருக்காவது நீங்கள் யானையை பரிசளிக்க வேண்டும் என்றால் ஒற்றை யானையாக பரிசளிக்கக்கூடாது. இது உங்களிடம் இருக்கக்கூடிய அதிர்ஷ்டங்களை அவர்களுக்கு கொடுப்பதாக அர்த்தம் ஆகிவிடுகிறது. பரிசளிப்பதாக இருந்தால் இரண்டு யானை பொம்மைகளை ஜோடியாக சேர்த்து பரிசளிக்கலாம்.

குபேரன், மகாலட்சுமி போன்ற செல்வ கடவுள்களை படங்களாக பரிசளிப்பது உண்டு. இது நம்மிடம் இருக்கக்கூடிய லட்சுமி கடாட்சத்தை அவர்களுக்கு கொடுப்பதாக அர்த்தம் ஆகிறது எனவே இவற்றை கொடுப்பதில் எச்சரிக்கை வேண்டும்.

- Advertisement -

மின்சார மோட்டார்கள் பொருந்திய பொம்மைகள், ஹீட்டர்கள், கத்தி, கத்தரிக்கோல், வில் அம்பு, ஆயுதங்கள், ஊசி போன்ற விஷயங்களை எல்லாம் பரிசளிக்கக் கூடாவே கூடாத பொருட்களாக இருக்கிறது. இவை செவ்வாயின் ஆதிக்கம் பெற்றுள்ளதால் தோஷங்களை ஏற்படுத்தும். இது மற்றவர்களுக்கு கொடுப்பதால் அவர்களுக்குள் இருக்கும் உறவு முறியும் என்கிற நம்பிக்கை உண்டு.

அதிக அளவு பரிசளிக்க கூடிய பொருட்களில் ஒன்றாக இருப்பது கடிகாரம்! இந்த கடிகாரம் ஓடாத நிலையில் எப்பொழுதும் பரிசளிக்க கூடாது. அதற்கு முறையாக பேட்டரி போட்டு ஓட வைத்து பின் பரிசளிப்பது தான் முறையாகும். இல்லையேல் உங்களுக்குள் இருக்கக்கூடிய உறவு பிரிவுக்கு வழிவகுக்கும், இதுவும் நல்லதல்ல!

இரும்பு, ஈயம், உல்லன், செங்கல், எண்ணெய் இவை சனியின் காரகத்துவம் பெற்ற பொருட்களாக இருக்கிறது. எனவே இவற்றில் ஏதேனும் உங்களுடைய பரிசுப் பொருளில் இருந்தால் அவற்றை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும். உல்லன் துணிகள், ஸ்வெட்டர்கள் போன்றவற்றை எவருக்கும் பரிசளிக்க வேண்டாம். இதனால் பிரிவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

எந்த ஒரு பரிசுப் பொருளையும் மனதார அவர்களை வாழ்த்தி கொடுக்குமாறு பூரிப்புடன் ஆசை ஆசையாக பார்த்து பார்த்து வாங்கி கொடுக்க வேண்டும். கடமையே என்று சலித்துக் கொண்டு வாங்கி கொடுக்க கூடாது. கொடுக்கும் பொருட்களின் விலையை விட, அதை கொடுக்கும் உங்களின் மனதில் இருக்கும் எண்ணங்கள் தான் உங்களுக்குள் இருக்கும் உறவுக்கு அஸ்திவாரமாக இருக்கிறது.

- Advertisement -