மறந்தும் கூட இந்தப் பொருட்களை அன்பளிப்பாக கூட கொடுத்தோ வாங்கியோ வாங்கி விடாதீர்கள். இது வரை நீங்கள் சேர்த்து அதிஷ்டம் தான, தர்மம் அனைத்தும் உங்களை விட்டு போய் விடும்..

Gift Vasthu Fish Clock
- Advertisement -

ஒரு உறவுக்குள் இருக்கும் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தும் விதமாக வழங்குவது தான் இந்த அன்பளிப்பு. இந்த அன்பளிப்பானது கொடுக்கப்படும் இடத்திற்கு ஏற்றவாறு மாறும். திருமணங்களில் கொடுக்கும் போது மொய்யாகவும் பிடித்தவர்களுக்கு கொடுக்கும் போது அன்பளிப்பாகவும் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் போது தானமாகவும் இப்படி இதற்கு பல பரிணாமங்கள் உண்டு. ஆனால் ஒரு சில பொருட்களை கொடுப்பதாலும் வாங்குவதாலும் நம்முடைய செல்வம் புண்ணிய பலன் அனைத்தும் இழக்க கூடிய வாய்ப்பு உள்ளது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்னவென்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பரிசாக வாங்க கூடாத பொருட்கள்
அன்பளிப்பாக வாங்க கூடாத பொருள்களில் முதலில் இருப்பது இரும்பு. இரும்பை யாராவது அன்பளிப்பாக கொடுப்பார்களா என்று உங்களுக்கு தோன்றலாம். இரும்பை யாரும் நேரடியாக தருவதில்லை தான். ஆனால் இரும்பு சேர்த்த பொருள்களை அன்பளிப்பாக கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் முக்கியமாக சில்வர் பாத்திரங்கள் எடுத்துக் கொள்ளலாம். இப்போது பெரும்பாலான நிகழ்வுகளில் பாத்திரங்களை மொய்யாக எழுதுவது நடைமுறையில் இருக்கிறது. இதை கொடுப்பதால் கொடுப்பவருக்கு எந்த பாதிப்பும் இல்லை ஆனால் வாங்குபவர் துன்பத்திற்கு ஆளாக கூடும். இரும்பு சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் நிறைந்த பொருள்.

- Advertisement -

கைக்குட்டையை எந்த காரணத்திற்காகவும் நாம் அன்பளிப்பாகவும் கொடுக்கக் கூடாது. அதே நேரத்தில் மற்றவருக்கு ஏதோ ஒரு அவசரத்திற்கென்று கூட கொடுக்கக் கூடாது. இப்படி கொடுப்பதன் மூலம் நம்முடைய கர்மாக்கள் அனைத்தும் அவருக்கு போய் சேர்வதுடன், அது ஒரு நல்ல இருந்தால் அந்த உறவு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு விடும் என்று சாஸ்திரம் சொல்லப்பட்டிருக்கிறது.

அதே போல் வாஸ்து பொருட்களில் முக்கியமானதாக கருதப்படும் யானை பொம்மையில் ஒற்றை யானையாக இருப்பதை அன்பளிப்பாக கொடுக்கக் கூடாது. இரண்டு யானைகள் ஜோடியாக இருப்பதை பரிசாக கொடுக்கலாம். அதே போல் மீன் தொட்டி போல தண்ணீரை நிரப்பி இருப்பது போன்ற பரிசுப் பொருட்களை நாம் மற்றவருக்கு கொடுப்பது நம்முடைய அதிர்ஷ்டத்தை அவர்களுக்கு தானமாக கொடுப்பது போன்றதாகும்.இன்றைய பெரும்பாலான விழாக்களில் கடிகாரங்களை பரிசாக தரப்படுகிறது இந்த கடிகாரத்தையும் அன்பளிப்பாக தருவதும் பெறுவதும் நம்முடைய செல்வ செழிப்பை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அதே போல் நீங்கள் ஒரு தொழில் செய்து கொண்டு இருக்கிறீர்கள் அதே தொழிலில் உங்கள் நண்பர் இருக்கிறார் என்றால் உங்கள் தொழில் சம்பந்தமான பொருட்களை பரிசாக கொடுக்கக் கூடாது. இதனால் உங்களுக்கு தொழிலில் முன்னேற்றம் தடைப்படும் என்று சாஸ்திரம் சொல்கிறது. இன்றைய நாகரீக காலத்தில் காலணிகளை கூட ஒருவருக்கு ஒருவர் அன்பளிப்பாக பரிமாறிக் கொள்கிறார்கள். இந்த அன்பளிப்பானது அந்த நட்புக்குள் இருக்கும் மகிழ்ச்சியை குறைத்து விடும்.

இன்னொரு பெரிய தவறை பெரும்பாலானோர் செய்து கொண்டிருக்கிறோம். அதாவது ஒருவர் வீட்டுக்கு சென்றால் அங்கு நமக்கு ஏதாவது ஒரு பொருள் பிடித்திருந்தால் அவர்களிடம் அதை கேட்டு வாங்கி கொள்வது அல்லது நமக்கு பிடித்திருக்கிறது என்று சொன்னவுடன் அவர்களாலே முன் வந்து தருவது. இப்படி அந்த பொருளை நாம் வாங்கி வரவும் கூடாது. ஏனெனில் அந்த பொருள் அவர்கள் மனம் திருப்தியுடன் தந்திருக்க மாட்டார்கள்.

- Advertisement -

எப்போதும் அன்பளிப்பாக மண்ணால், ஆன பொருட்களை கொடுப்பதால் கொடுப்பவர் வாங்குபவர் இருவருக்குமே அது நன்மையை தரக்கூடியதாகவும் ஐஸ்வரியத்தை பெருக்குவதாகவும் அமையும்.அதே போல மங்களகாரமான பொருட்களில் எதை வேண்டும்னாலும் அன்பளிப்பாக தரலாம்.

இதையும் படிக்கலாமே: திருஷ்டி கழிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள் என்ன? எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் நீங்க இப்படி செய்யுங்கள்!

பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் அன்பளிப்பு என்ற பெயரில் நம் ஒருவருக்கு மகிழ்ச்சியை கொடுப்பதற்கு பதிலாக பெரும்பாலும் துன்பத்தை கொடுத்து கொண்டிருக்கிறோம். நமக்கு உரிமை இல்லாத எந்த ஒரு பொருளையும் பிறரிடம் இருந்து வாங்கும் போது நமக்கான புண்ணிய பலன்களை அதை குறைத்து விடும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

- Advertisement -