Facebook : சமூகவலைதளமான பேஸ்புக்-க்கு நெறிமுறைகளை வகுத்த இந்திய நாடாளுமன்ற குழு – காரணம் தெரியுமா ?

Facebook
- Advertisement -

பேஸ்புக் நிறுவனம் விளம்பரங்கள், செய்திகள் மற்றும் வியாபாரம் என பலவற்றை பகிரப்படும் பொது சமூக வலைத்தளமாக பேஸ்புக் இயங்கி வருகிறது. இந்தியாவில் இன்னும் சில மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் இந்தியாவில் உள்ள அனைத்து கட்சி தலைமையும் சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் தங்களது பிரச்சாரத்தினை செய்து வருகிறது.

fb 1

இதனால் தேவையில்லாத பொய்யான தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற தவறான தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் சமூகவலை தளமான பேஸ்புக் மூலம் வைரலாக பரவ வாய்ப்புள்ளது. அதனை கண்டறிந்து தேவைஇல்லாத நபர்களின் பதிவுகள் மற்றும் தகவல்களை நீக்க நடவடிக்கை எடுக்கும்படி நாடாளுமன்ற குழு சார்பாக பேஸ்புக் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

- Advertisement -

இதனை தடுக்க நாடாளுமன்ற குழு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் சில நெறிமுறைகளை வகுக்க பேஸ்புக் நிர்வாகத்துடன் ஆலோசனையும் நடத்தியது. இதனால், பேஸ்புக் நிர்வாகமும் நாடாளுமன்ற குழுவின் இந்த நிபந்தனையை ஏற்று பொய்யான தகவல்களை பரப்பும் நபர்களின் கணக்குகளை நீக்க முடிவும் செய்துள்ளது.

fb

புல்வாமா தாக்குதலின் போது கூட பல பொய்யான தகவல்கள் பேஸ்புக் மூலம் பகிரப்பட்டன. மேலும் அபிநந்தன் பாகிஸ்தான் வசம் இருந்தபோது கூட அவரைப்பற்றிய சில பொய்யான தகவல்கள் மற்றும் விடீயோக்களும் பேஸ்புக் வழியாக பரவி வைரலானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -