சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆக பருப்பு தால் இப்படி செஞ்சு பாருங்க. கமகமன்னு வாசத்தோட சூப்பரான டேஸ்ல இருக்கும்.

paruppu-dal
- Advertisement -

சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள நிறைய சைடிஸ் வகைகள் உள்ளது. ஆனால் வடநாட்டில் இந்த பருப்பு டால் மிகவும் பிரபலமானது. ஒருமுறை உங்க வீட்டில சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இந்த பருப்பு தால் செஞ்சு பாருங்க. இப்படி பார்ப்பு தால் செஞ்சா இதனுடைய சுவை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். சப்பாத்திக்கு மட்டும் அல்ல. வெள்ளையாக செய்யக்கூடிய புலாவ் ரெசிபி, சூடான வெள்ளை சாதத்திக்கும் கூட, சுட சுட தால் போட்டு சாப்பிட்டால் அருமையான ருசி கிடைக்கும். இதோடு மட்டுமல்லாமல் புரோட்டின் நிறைந்த சத்துள்ள ரெசிபியும் கூட இது. நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை தெரிஞ்சிக்கலாம் வாங்க.

toor-dal

முதலில் 1/2 கப் துவரம்பருப்பு, 1/2 கப் பாசிப் பருப்பை எடுத்து குக்கரில் போட்டு 3 முறை நன்றாகக் கழுவி பருப்பு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி 3 அல்லது 4 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். 1/2 கப் துவரம்பருப்பு, 1/2 கப் பாசிப்பருப்பு, என்றால் மொத்தம் 1 கப் அளவு தண்ணீர் விட்டுக் கொண்டால் சரியான அளவாக இருக்கும்.

- Advertisement -

வெந்த பருப்பு அப்படியே தனியாக இருக்கட்டும். இந்த பருப்பை எப்படி தாளித்து விடலாம் என்று பார்ப்போம். அடுப்பில் அடி கனமான ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். இந்த பருப்பை நெய்யில் தாளிப்பது ஸ்பெஷல். நெய் வாசம் பிடிக்காதவர்கள் எண்ணெய் ஊற்றி தாளித்து கொள்ளலாம்.

paruppu

காய்ந்த நெய்யில் சீரகம் – 1 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், பிரியாணி இலை – 1, மிகப் பொடியாக நறுக்கிய பூண்டு பல் – 6, மிகப் பொடியாக நறுக்கிய – இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன், இவைகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பூண்டு நெய்யில் நன்றாக வதக்கி விட வேண்டும்.

- Advertisement -

அதன் பின்பு நீளவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம் – 1 சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். அடுத்தபடியாக நீளவாக்கில் வெட்டிய பச்சை மிளகாய் – 2, வரமிளகாய் – 3, மிளகாய் தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 ஸ்பூன், மிகப் பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1, இந்த பொருட்களை சேர்த்து கலந்துவிட்டு குழம்புக்கு தேவையான அளவு உப்பு, மஞ்சள் பொடி – 1/2 ஸ்பூன், சேர்த்து நன்றாக கலந்து விட்டால் தக்காளி கொழகொழவென வதங்கி வரும்.

paruppu-dal1

தக்காளி பச்சை வாடை நீங்கி வதக்கிய பின்பு குக்கரில் வேக வைத்திருக்கும் பருப்பை கடாயில் ஊற்றிக்கொள்ளுங்கள். குழம்புக்கு தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி கொள்ள வேண்டும். பாசிப்பருப்பு சேர்த்து இருப்பதால் குழம்பு கொதிக்கும் போது கெட்டியாக வரும். ஆக தண்ணீரை ஊற்றும் போது சரியான அளவில் பார்த்து ஊற்றிக் கொள்ளவேண்டும். பருப்பு வேகும் போது ரொம்பவும் கட்டியாக இருந்தால் கொஞ்சம் நிறைய தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

paruppu-dal2

குழம்பை ஒரு மூடி போட்டு, மூடி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைத்தால் போதும். அதிகமாக குழம்பு கொதித்தால் குழம்பு ரொம்பவும் கட்டியாக வந்துவிடும். இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். சுட சுட இந்த பருப்பு தாலை சப்பாத்திக்கு பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும். அதேசமயம் நிறைவான சாப்பாடு கூட. உங்களுக்கு இந்த ரெசிபி பிடித்திருந்தால் ஒரு முறை உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -