கிரைண்டர் தேவையில்லை, புளிக்க வைக்க வேண்டிய நேரமும் தேவையில்லை இன்ஸ்டன்டாக ஆரோக்கியம் நிறைந்த இந்த பாசிப்பருப்பு தோசை மாவு எப்படி செய்வது? மொறுமொறு ஹெல்தி தோசை!

dosai-pasi-paruppu
- Advertisement -

கிரைண்டரில் வாரம் ஒரு முறை உட்கார்ந்து இட்லிக்கும், தோசைக்கும் மாவு அரைக்கும் பெண்கள் திடீரென தோசை மாவு இல்லாத சமயங்களில் இது போல ஆரோக்கியமான தோசை மாவு இன்ஸ்டன்டாக எப்படி செய்யலாம்? வெறும் பாசிப் பருப்பை கொண்டு செய்யப்படும் இந்த தோசை மாவு ரொம்ப சூப்பராக ஓட்டலில் கொடுப்பது போலவே மொறுமொறுவென்று, நல்ல பொன்னிறமான தோசையை கொடுக்கும். சத்துள்ள பாசிப்பருப்பு தோசை மாவு எப்படி தயாரிப்பது? என்பதை தான் இனி பார்க்க இருக்கிறோம்.

பாசிப்பருப்பு தோசை மாவு செய்ய தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – 2 கப், அரிசி மாவு – அரை கப், தண்ணீர் – முக்கால் கப், சோடா உப்பு – கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, மிளகாய் தூள் – இரண்டு ஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு.

- Advertisement -

பாசிப்பருப்பு தோசை மாவு செய்முறை விளக்கம்:
முதலில் பாசிப்பருப்பை நன்கு களைந்து சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஓரிரு முறை அலசி பின்னர் ஒரு மணிநேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் நீங்கள் ஊற வைத்தால் உடனடியாக பிரேக்ஃபாஸ்ட் தயாரித்து சாப்பிடலாம். இந்த மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நன்கு ஊறிய பின்பு தண்ணீரை வடிகட்டி விட்டு, வெறும் பருப்பில் முக்கால் கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். அதனுடன் அரை கப் அளவிற்கு அரிசி மாவு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த பாசிப்பருப்பு மாவு தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். அந்த அளவிற்கு நீங்கள் தண்ணீர் சேர்த்தால் போதும், அதற்கு மேல் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. பிறகு மாவு நன்கு மொறுமொறுவென்று வருவதற்கு சோடா உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவு நல்ல சத்துள்ள மாவு என்பதால் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.

- Advertisement -

தோசை மாவு நல்ல காரசாரமாக இருப்பதற்கு 2 ஸ்பூன் அளவிற்கு மிளகாய் தூளை தேவையான அளவிற்கு எண்ணெயுடன் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு நான்ஸ்டிக் தவா அல்லது தோசை கல் வைத்து அடுப்பை பற்ற வையுங்கள். தோசைக் கல் சூடானதும் ஒரு கரண்டி மாவை எடுத்து நன்கு மெல்லியதாக எல்லா இடங்களிலும் பரவும்படி பரப்பிவிட்டு கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் மிளகாய்த் தூளுடன் கலந்து வைத்த எண்ணெயை ஆயில் பிரைஸ் அல்லது ஸ்பூன் கொண்டு தோசையின் மீது நன்கு பரவலாக தடவி விடுங்கள்.

5 நிமிடம் அப்படியே விட்டு விட்டால் தோசை நன்கு முறுகலாக பொன்னிறமாக ஹோட்டலில் கொடுப்பது போலவே மொறுமொறுவென்று வரும். பிறகு அதை திருப்பி போட அவசியம் இல்லை, அப்படியே சுருட்டி எடுத்து தட்டில் வைத்து பரிமாற வேண்டியது தான். ரொம்பவே ஆரோக்கியமான இந்த பாசிப்பருப்பு மொறுமொறு தோசை செய்வது சுலபம் ஆனால் சாப்பிடுவதற்கு அவ்வளவு டேஸ்டியானதாக இருக்கும், நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -