சாம்பார் வச்சா இப்படித் தான் வைக்கணும்னு எல்லாரும் பாராட்டுற மாதிரி மணக்க மணக்க சூப்பரா சாம்பார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாமா?

- Advertisement -

நம்முடைய உணவு கலாச்சாரத்திலே குழம்பு வகைகளில் இந்த சாம்பாருக்கு இருக்கும் முக்கியத்துவம் வேறு எந்த குழம்பிற்கும் கிடையாது. வீட்டில் எந்த ஒரு விசேஷம் என்றாலும் துவரம் பருப்பை வைத்து செய்யப்படும் இந்த சாம்பார் தான் பிரதானமாக இருக்கும். அப்படியான இந்த சாம்பாரை ரொம்பவே சுவையாகவும் அதே நேரத்தில் சுலபமாகவும் எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்போது தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செய்முறை

இந்த சாம்பார் செய்வதற்கு முதலில் அரை கப் துவரம் பருப்பை தண்ணீர் ஊற்றி நன்றாக சுத்தம் செய்த பிறகு குக்கரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அரை கப் பருப்பிற்கு ஒன்றரைக் கப் தண்ணீர் ஊற்றி கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மூன்று விசில் வரும் வரை விட்டு அடுப்பை விடுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக 10 சின்ன வெங்காயம் இத்துடன் ஒரு பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதே போல் மீடியம் சைஸில் உள்ள இரண்டு தக்காளி பழத்தை நறுக்கி கொள்ளுங்கள். இரண்டு பச்சை மிளகாய் கீறி வைத்துக் கொள்ளுங்கள். இந்த சாம்பாருக்கு கத்திரிக்காய் முருங்கைக்காய் கேரட் மாங்காய் என உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை தேர்வு செய்து ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் கடாய் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் ஒரு டீஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் வெந்தயம், கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கிய பிறகு தக்காளி அரிந்து வைத்த பச்சை மிளகாய் ஐந்து பல் பூண்டு ஒரு கொத்து கறிவேப்பிலை என அனைத்தையும் சேர்த்த பிறகு கால் டீஸ்பூன் உப்பையும் சேர்த்த பின் தக்காளி குழைந்து வரும் வரை வதக்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

வெங்காயம் தக்காளி எல்லாம் வதங்கிய பிறகு நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்த்து ஒரு முறை நன்றாக வதக்கிய பிறகு இரண்டு டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி அரை ஸ்பூன் உப்பு கால் டீஸ்பூன் பெருங்காயம் சேர்த்து சேர்த்து அடுப்பை மீடியம் பிளேமில் வைத்து ஒரு முறை வதக்குங்கள். அதன் பிறகு நான்கு கப் தண்ணீர் ஊற்றி இந்த காய்கள் வேகம் வரை ஒரு 5 நிமிடம் மூடி போட்டு வேக விடவும். ஐந்து நிமிடம் கழித்து மூடியை திறந்து மாங்காய் சேர்ப்பதாக இருந்தால் இப்போது சேர்த்து மேலும் ஒரு இரண்டு நிமிடம் கொதிக்க விடுங்கள்.

காய்கறிகள் எல்லாம் கொதித்து வந்த பிறகு ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளியை நன்றாக கரைத்து வடிகட்டி அந்த தண்ணீரையும் சேர்த்து ஒரு முறை கொதித்த பிறகு கால் டீஸ்பூன் வெல்லம் சேர்த்து மீண்டும் ஒரு முறை கொதிக்க விடுங்கள். அதன் பிறகு நாம் முன்னமே வேகவைத்த பருப்பை நன்றாக மத்து வைத்து கடைந்த பிறகு அந்த பருப்பை கொதிக்கும் சாம்பாரில் சேர்த்து ஒரு முறை கலந்து மூடி போட்டு ஒரு கொதி வரும் வரை மட்டும் விட்டு மேலே கொத்தமல்லி தழைகளை தூவி அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: புதினா துவையல் செய்முறை விளக்கம் (Mint Leaves chutney recipe in Tamil) :

ரொம்பவே சுவையாக அதே நேரத்தில் சுலபமாக செய்யக் கூடிய இந்த சாம்பார் டிபன் சாப்பாடு என அனைத்திற்கும் நன்றாக இருக்கும். இதில் சேர்க்கும் காய்கறிகள் மட்டும் உங்கள் விருப்பத்திற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படி சாம்பார் வைத்துப் பாருங்கள் சாம்பார் செய்வதில் நீங்கள் தான் எக்ஸ்பெக்டாக இருப்பீர்கள்.

- Advertisement -