பாசிப்பருப்பை வெச்சு ஒரு முறை இந்த குழம்பை வச்சு பாருங்க. இதை சாப்பிட்ட பிறகு எல்லாரும் உங்களை புகழ்ந்து தள்ளிடுவாங்க. அந்தளவுக்கு டேஸ்ட் செமையா இருக்கும். டிபன் சாப்பாடு எல்லாத்துக்கும் இது ஒன்னே போதும்

pasi paruppu pakkoda kuzhambhu
- Advertisement -

குழம்பு வகைகள் எத்தனை இருந்தாலும் கூட, தினமுமே நாளைக்கு என்ன குழம்பு வைப்பது என்ற ஒரு கேள்வி குடும்ப தலைவிகளுக்கு வருவது இயல்பு தான். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஏதாவது ஒரு குழம்பு வைத்தால் வீட்டில் ஒருவருக்கு பிடிக்கும் இன்னொருத்தருக்கு பிடிக்காது இப்படியான சிக்கலும் சில நேரம் வரும். இது போல சிக்கல் வராமல் இருக்க வேண்டும் என்றால் நாம் வைத்து குழம்பு அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்க வேண்டும். அப்படி ஒரு ருசியான குழம்பு ரெசிபியை பற்றி தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த குழம்பு வைப்பதற்கு முதலில் அரைக்க பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் இல்லாமல் வடித்து கொள்ளுங்கள். அடுத்து மிக்ஸி ஜாரில் மூன்று காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து ஒரே ஒரு சுற்று மட்டும் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு பாசிப்பருப்பும், கால் டீஸ்பூன் உப்பையும் சேர்த்து லேசான கொரகொரப்பு தன்மையுடன் அரைத்து ஒரு பவுலில் போட்டு கொள்ளுங்கள். இதில் ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை கொஞ்சம் பொடியாக நறுக்கி சேர்த்து இந்த மாவை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் கடாய் வைத்து இதை பொரிக்க தேவையான எண்ணெய் ஊற்றி சூடுப்படுத்தி கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை மிதமான சூட்டுக்கு மாற்றி இந்த மாவை சின்ன சின்னதாக கிள்ளி போட்டு பக்கோடா போல பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு பெரிய சைஸ் வெங்காயத்தை அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அதே ஜாரில் இரண்டு பழுத்த தக்காளியை சேர்த்து அதையும் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான சூடான பிறகு இரண்டு லவங்கம், ஒரு பட்டை, ஒரு நட்சத்தர பூ, இந்த மசாலாக்களை எல்லாம் சேர்த்து பொரித்த பிறகு அரைத்து வைத்து வெங்காய பேஸ்ட்டை இதில் சேர்த்தவுடன் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை அடிப்பை மிதமான தீயில் வைத்து வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு அரைத்து வைத்த தக்காளி விழுதையும் சேர்த்து முறை கலந்து வதங்க விடுங்கள்.

- Advertisement -

இது எல்லாம் பச்சை வாடை போக வதங்கிய பிறகு ஒரு டீஸ்பூன் மிளகாய்த் தூள், ஒன்றரை டீஸ்பூன் தனியாத் தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் அனைத்தையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை பச்சை வாடை போகும் வரை வதக்கிய பிறகு இரண்டு டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடுங்கள். இதற்கு தண்ணீர் கொஞ்சம் தாராளமாகவே ஊற்றிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: ரோட்டு கடையில் பாட்டி அரைக்கும் தண்ணீர் சட்னியின் ரகசியம் இது தான். இட்லியோட இந்த சட்னியை பிசைஞ்சு பிசைஞ்சு சாப்பிட்டாலும் ருசி அடங்கவே அடங்காது.

குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது நாம் ஏற்கனவே பொரித்து வைத்த பகோடாவை இதில் சேர்த்து நன்றாக கலந்து மீண்டும் ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்கள். இப்போது குழம்பு நன்றாக வற்றி எண்ணெய் பிரிந்து கெட்டியாக மாறி இருக்கும். இந்த சமயத்தில் கொத்தமல்லி தழைகளை மேலே தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். சுவையான பாசிப்பருப்பு பக்கோடா குழம்பு தயார். இந்த குழம்பு ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -