ரோட்டு கடையில் பாட்டி அரைக்கும் தண்ணீர் சட்னியின் ரகசியம் இது தான். இட்லியோட இந்த சட்னியை பிசைஞ்சு பிசைஞ்சு சாப்பிட்டாலும் ருசி அடங்கவே அடங்காது.

chutney
- Advertisement -

பொதுவாகவே ரோட்டு கடையில் பாட்டி விற்கும் இட்லிக்கு மேலே ஊற்றி தரும் சட்னி ருசிக்கு ஈடு இணை வேறு எதுவுமே இருக்காது. ஒவ்வொரு ரோட்டு கடையிலும் ஒவ்வொரு ருசியில் சட்னி கிடைக்கும். இன்று நாம் பார்க்க கூடிய சட்னி ரெசிபியும் ஒரு தனி சுவையை தரக்கூடிய சட்னி ரெசிபி தான். வேர்கடலை சட்னி. தேங்காய் சேர்க்காமல் பச்சை நிறத்தில் இந்த வேர்க்கடலை சட்னியை மணக்க மணக்க ருசிக்க ருசிக்க எப்படி செய்வது என்பதை பற்றிய ரெசிபி தான் இன்று உங்களுக்காக இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்னியை செய்யுங்க. சுடச்சுட நான்கு இட்லி மேல தண்ணியா ஊற்றி, இட்லிய சட்னியோட பிசைஞ்சி சாப்பிட்டீங்கன்னா வேற லெவல் ருசிங்க.

செய்முறை

இந்த சட்னி அரைப்பதற்கு அடுப்பில் முதலில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் 1/2 ஸ்பூன், போட்டு பொரிந்து வந்தவுடன், தோல் உரித்த பூண்டு பல் 6 லிருந்து 7 போட்டு லேசாக வதக்கவும். பிறகு இதோடு நறுக்கிய பச்சை மிளகாய் 4 போட்டு வதக்கிக் கொள்ளுங்கள். இறுதியாக கருவாப்பிலை இலசாக இருப்பது 2 கொத்து போட்டு வறுத்து அடுப்பை அணைத்து இதை அப்படியே மிக்ஸி ஜாரில் மாற்றிக் கொள்ளுங்கள். இந்த இடத்தில் தேவைப்பட்டால் சின்னதுண்டு இஞ்சியை இதில் சேர்க்கலாம். அது அவரவர் ருசியை பொறுத்தது.

- Advertisement -

அடுத்தபடியாக அதே கடாயில் 1/2 கப் அளவு வேர்க்கடலையை போட்டு லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். வறுத்த வேர்க்கடலையாக இருந்தாலும், அந்த கடாயில் சூடு செய்யுங்கள். அடுத்து பொட்டுக்கடலை 1/4 கப் போட்டு இந்த இரண்டு பொருட்களையும் லேசாக சூடு செய்து ஆற வைத்து இதையும் மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.

இப்போது அரைப்பதற்கு முன்பு இதில் தேவையான அளவு உப்பு, சின்ன கோலிகுண்டு அளவு புளியை போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இறுதியாக கொஞ்சமாக கொத்தமல்லி தழை 4 இனுக்கு போட்டு மிக்ஸி ஜாரை ஓட விடுங்கள். விழுதாக சட்னி அரை பட்டுவிடும். இதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இந்த சட்னி கொஞ்சம் தண்ணீர் பதத்தில் இருக்க வேண்டும். ஆகவே தண்ணீர் ஊற்றி சட்னியை கரைத்து விடவும்.

- Advertisement -

இறுதியாக மணக்க மணக்க இதற்கு தாளிப்பு தர வேண்டும். இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெயில், கடுகு, உளுந்து, வர மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம், போட்டு தாளித்துக் கொட்டி ருசித்து பாருங்கள். வேற என்ன வேணும். வாழ்க்கையில். இது அல்லவா ருசி என்ற சுவை இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த கரம் மசாலா தூள் ஒன்று போதும். சைவ குருமா, அசைவ குருமா, வறுவல் வகைகளை எல்லாம் வீட்டில் மணக்க மணக்க சுவைக்க சுவைக்க ஈஸியாக செய்யலாம்.

உங்கள் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாயை கூட்டியோ குறைத்து வைத்துக் கொள்ளலாம். சில பேருக்கு பச்சை மிளகாய் ருசி பிடிக்காது அப்படிப்பட்டவர்கள் இதில் வர மிளகாய் சேர்த்து சட்னி அரைத்தாலும் சுவையாக தான் இருக்கும். சுவை நிறைந்த இந்த சட்னி ரெசிபி யாரும் மிஸ் பண்ணாதீங்க.

- Advertisement -