அந்த காலத்து பயிறு பொடி இப்படி செஞ்சு வச்சுக்கோங்க, இனி ஒரு முடி கூட வேரோட கொட்டவே கொட்டாது! நல்லா புசுபுசுன்னு கொத்தா முடி வளரும்.

hair-pack-venthayam-payaru
- Advertisement -

முடி கொத்து கொத்தாக கொட்டும் பொழுது, நமக்கு இரத்த கண்ணீரே வரும். இப்படி வேரோடு கொட்டும் முடியை சட்டுன்னு தடுத்து நிறுத்தி, மீண்டும் விழுந்த இடத்திலிருந்து புதிய முடியை முளைக்க செய்யக்கூடிய அற்புதமான சத்துக்கள் இந்த பயறு பொடியில் இருக்கிறது. இதில் சில பொருட்களை சேர்த்து, அரைக்கும் பொழுது நல்ல ஒரு போஷாக்கான ஹேர் பேக்காக இருந்து வருகிறது. அப்படியான ஒரு ஹேர் பேக் எப்படி ரொம்ப எளிதாக தயாரிக்கப் போகிறோம்? என்பதை தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் இனி நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வேரோடு முடி கொட்டுவதற்கு நிறையவே காரணங்கள் உண்டு. முடியின் ஸ்கேல்ப் பகுதியில் சரியான ரத்த ஓட்டம் இல்லாமல் இருந்தாலும், போதிய ஊட்டச்சத்துக்கள் குறைவதாலும், பல்வேறு நோய்களுக்கு உட்படுவதாலும், முடியை ஈரப்பதம் இல்லாமல் வறண்டதாக வைத்திருப்பதாலும் கூட இது போல வேருடன் முடி கொத்து கொத்தாக கொட்டுகிறது. எப்பொழுதும் தலை முடியை வாரும் பொழுது சிறிதளவு முடி கொட்டுவது இயல்பான ஒன்றுதான், ஆனால் அளவுக்கு அதிகமாக முடி கொட்டுகிறது என்றாலே, நீங்கள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரமாக இருக்கிறது, ஆனால் அதை அலட்சியம் செய்பவர்கள் பின்னாடி அதிகமாக முடியை இழந்த பிறகு பாதிக்கப்பட்டு வருந்துகிறார்கள்.

- Advertisement -

ஆண், பெண், குழந்தைகள் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவருக்கும் முடி போஷாக்காக புசுபுசுவென்று கொத்தாக வளர்வதற்கு, இந்த ஒரு பாசி பயறு பொடி நல்ல ஒரு பலனை கொடுக்கும். இதில் எந்த விதமான ரசாயன பொருட்களும் சேர்ப்பதில்லை! ரொம்பவே இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை தான் சேர்க்கப் போகிறோம் எனவே இயற்கையாகவே முடி இழந்த நிலையிலிருந்து மீண்டு புதிதாக வரும்.

முதலில் கால் கிலோ அளவிற்கு பாசிப்பயறு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 150 கிராம் வெந்தயம் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். லேசான சூட்டில் பாசிப்பயறு மற்றும் வெந்தயத்தை சேர்த்து நிறம் மாறி வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். இவை கருகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது நல்லது. பின்னர் இவற்றை ஒரு தட்டில் ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே வாணலியில் ரெண்டு கொத்து கறிவேப்பிலையை, இரண்டு கைப்பிடி அளவிற்கு முழுதாக பிரஷ்ஷாக எடுத்து வாணலியில் போட்டு மொரமொறவென்று லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். வறுத்து எடுத்த பிறகு அதையும் ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இவை நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக பவுடர் போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது மெஷினில் கொடுத்தும் நீங்கள் அரைக்கலாம்.

இதையும் படிக்கலாமே:
எவ்வளவு வெய்யில் அடித்தாலும் உங்க உடம்பிலிருந்து வியர்வை துர்நாற்றம் வீசவே வீசாது. இந்த 2 பொருட்களை போட்டு குளித்து பாருங்க.

மிக்ஸியில் அரைப்பவர்கள் மொத்தமாக போடாமல் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு டப்பாவில் போட்டு அடைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை அல்லது இரு முறை தாராளமாக நீங்கள் உங்கள் கூந்தலுக்கு தேவையான அளவிற்கு இந்த பவுடரை எடுத்து, இதனுடன் தேங்காய் பால் சேர்த்து ஹேர் பேக் போட்டு அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம். வறண்ட கூந்தல் உடையவர்கள் தயிர் மற்றும் தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம். தொடர்ந்து செய்து வர, இரண்டு மாதத்தில் முடி கொட்டுவது நின்று சரசரவென வளர துவங்கும்.

- Advertisement -