ஆரோக்கியம் நிறைந்துள்ள பாசிப்பயறு! சருமத்தை எப்படி எல்லாம் பராமரிக்கும் தெரியுமா? பாசிபயறு ஃபேஸ் பேக் போடுவது எப்படி? யாரெல்லாம் எதற்காக போடலாம்?

- Advertisement -

நம் சருமத்தைப் பராமரிக்க கூடிய அத்தனை சத்துக்களும் பாசிப் பயறு மாவில் இருக்கிறது. கடலைமாவை போலவே பாசிப் பயறு மாவு சரும ஆரோக்கியத்திற்கு நல்ல ஒரு பொருளாக இருக்கிறது. பாசிப்பயறு உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சருமத்தையும் எப்படி பராமரிக்கும்? எந்த பிரச்சனைகளுக்கு? பாசிப்பயறு பேக் போடுவது நல்லது? பாசிப்பயிறு ஃபேஸ் பேக் எப்படி போடுவது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

குறிப்பு 1:
அடிக்கடி வெளியில் செல்பவர்களுக்கு மாசு, தூசு போன்றவை முகத்தில் படிவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. இத்தகையவர்கள் 2 டீஸ்பூன் பாசிப்பயறு மாவுடன், அரை டீஸ்பூன் சுத்தமான தேன் மற்றும் தேவையான அளவிற்கு பசும்பால் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதை ஒரு பேஸ்ட் போல செய்து முகம் முழுவதும் தடவி 20 நிமிடம் உலரவிட்டு குளிர்ந்த நீரில் அலசினால் முகம் பளபளவென வழுக்கிக் கொண்டு செல்லும் அளவிற்கு ஆரோக்கியமானதாக மாறும்.

- Advertisement -

குறிப்பு 2:
கருப்பான தேகம் உடையவர்கள், வெயிலில் சுற்றித் திரிபவர்கள், வெயிலினால் கறுத்த சருமத்தை கொண்டவர்கள் 2 டீஸ்பூன் பாசிப்பயறு மாவுடன், அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். இதனை முகம் முழுவதும் தடவி 15 நிமிடம் நன்கு உலர விட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் அலசினால் இழந்த நிறத்தை மீண்டும் அடையலாம்.

குறிப்பு 3:
வறண்ட சருமம் கொண்டவர்கள், மெலனின் குறைபாடு இருப்பவர்கள், பொலிவிழந்த சருமம் மற்றும் முகப்பரு அதிகம் இருக்கும் சருமம் கொண்டவர்கள் ஒரு டீஸ்பூன் பாசிப்பயறு மாவுடன், ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் தயிர் மற்றும் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து முகம் முழுவதும் தடவி இருபது நிமிடம் உலரவிட்டு வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீரில் அலசினால், முகத்தில் இருக்கும் முகப்பரு நீங்கி ஈரப்பதத்துடன், நல்ல பொலிவுடன் தோற்றமளிக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
முதிர்ந்த தோற்றம் கொண்டவர்கள், முக சுருக்கங்கள் அதிகம் இருப்பவர்கள், இளம்வயதிலேயே வயதானது போல தெரியக்கூடிய சரும பாதிப்புகளை கொண்டவர்கள் ஒரு டீஸ்பூன் பாசிப்பயறு மாவுடன், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை முகம் முழுவதும் தடவி நன்கு உலர விட்டு பின்பு குளிர்ந்த நீரில் அலசினால் முகம் பட்டுப் போல இளமையான தோற்றத்தை திரும்பப் பெறும்.

குறிப்பு 5:
வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு, வலி நிறைந்த முகப்பருக்களை கொண்டவர்களும், முகத்தில் கரும்புள்ளி, வெண்புள்ளி போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களும் ஒரு டீஸ்பூன் பாசிப்பயறு மாவுடன், தேவையான அளவிற்கு பசும்பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு முகம் முழுவதும் தடவி உலர விட்டு கழுவினால் இந்த பிரச்சனைகள் விரைவில் தீரும். எண்ணெய் பசையுள்ள சருமம் கொண்டவர்களுக்கு பருக்கள் அதிகம் இருந்தால், அரை டீஸ்பூன் பாசிப்பயறு மாவுடன், அரை மூடி எலுமிச்சை பழச் சாறு பிழிந்து கலந்து பருக்கள் இருக்கும் இடங்களில் தடவி பத்து நிமிடம் உலரவிட்டு கழுவி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

- Advertisement -