பசுவிற்கு அகத்திக்கீரை கொடுக்கும்போது இந்த மந்திரத்தை சொன்னால் செய்த பாவங்கள் அனைத்தும் நொடியில் விலகிவிடும்.

pasu
- Advertisement -

பாவம் என்று தெரிந்தும் ஒரு பாவச் செயலை செய்துவிட்டு பின்பு மன்னிப்பு கேட்டால், ஒருபோதும் அறிந்து செய்த பாவத்திற்கு அந்த இறைவனால் மன்னிப்பு வழங்கப்படாது. தெரியாமல் செய்த குற்றத்திற்கு மன்னிப்பு கேட்டு பாவத்தை உணர்ந்தால், அதற்கான தண்டனை குறையும். செய்த பாவத்திலிருந்து முழுமையாக தப்பித்து விடலாம் என்று யாருமே நினைக்க கூடாது. பாவம் செய்வதற்கு முன்பு யோசித்து இருக்க வேண்டும். பாவம் செய்ததினால் வரக்கூடிய விளைவுகளை. சரி போகட்டும். அறிந்தோ அறியாமலோ பாவம் செய்து விட்டோம். பூர்வ புண்ணிய கடன் பின் தொடர்ந்து வருகிறது. பாவத்திற்கான தண்டைகளை குறைக்க சாஸ்திரம் ரீதியாக எப்படிப்பட்ட பரிகாரங்களை எல்லாம் செய்யலாம் என்பதை பற்றிய ஒரு சில குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பாவங்களை எல்லாம் தீர்க்க வேண்டும் என்றால் வாயில்லா ஜீவன்களை முதலில் நாம் வதைக்காமல் இருக்க வேண்டும். வாயில்லா ஜீவன்களுக்கு உதவி செய்கின்றோமோ இல்லையோ உபத்திரமாக இருக்கக் கூடாது. தெருவில் ஒரு நாய் சும்மாவே படுத்து இருந்தால், அதை கல் எடுத்து அடிப்பது, குச்சியால் அடிப்பது போன்ற தவறுகளை செய்யாதீங்க. வாயில்லாத பறவைகளைக் கூண்டில் அடைத்து கஷ்டப்படுத்தாதீங்க.

- Advertisement -

மாமிசம் சாப்பிடுவது என்பது அவரவர் சொந்த விருப்பம். ஆனால் ஒரு உயிரை துன்புறுத்துவது தவறு என்பது சாஸ்திரம் கூறும் உண்மை. முடிந்தால் இதையும் நீங்கள் பின்பற்றிக் கொள்ளலாம். மனதளவில் கூட ஒரு உயிரினத்திற்கு கெடுதல் நினைக்கக் கூடாது. இது தவிர பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வாழைப்பழம் போன்ற பொருட்களை வாங்கி கொடுப்பது நம் முன் ஜென்ம வினைகளை நீக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதை நம்மில் நிறைய பேர் பின்பற்றி வருகின்றோம். குறிப்பாக அமாவாசை தினத்தன்று அகத்திக்கீரையே பசு மாட்டிற்கு வாங்கி தருவோம். அது மிக மிக நல்லது.

அமாவாசை அன்று மட்டும் அல்லாமல் முடிந்தால் மற்ற நாட்களில் கூட அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு நீங்கள் வாங்கித் தரலாம். பசுவிற்கு நீங்கள் சாப்பிடுவதற்கு அகத்திக்கீரை கொடுத்தாலும் சரி, வாழைப்பழம் கொடுத்தாலும் சரி, அல்லது மற்ற எந்த பொருட்களை கொடுத்தாலும் சரி இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே கொடுங்கள். கைபேசியில் இந்த மந்திரத்தை பார்த்து படித்தாலும் தவறு கிடையாது. பசுவிற்கு உணவு அளிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம் இதோ.

- Advertisement -

ஸர்வ காமதுகே தேவி சர்வ தீர்த் தாபிஷேகினீ
பாவனே ஸுரபிச்ரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே

இந்த மந்திரத்தை பசுவை பார்க்கும் போதெல்லாம் சொல்லலாம். பசுவை வலம் வரும்போது சொல்லலாம். பசு மாட்டிற்கு சாப்பாடு கொடுக்கும் போதும் சொல்லலாம். ‘எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்பவனே. எல்லா தீர்த்தங்களினாலும் அபிஷேகம் செய்யப்பட்டு, மங்கல வடிவாக திகழ்பவனே, பெருமைக்குரிய காமதேனுவே, உன்னை வணங்குகின்றேன்.’ என்பதுதான் இதற்கு உண்டான அர்த்தம்.

இந்த மந்திரத்தை சொல்லி பசுவை வழிபாடு செய்து வந்தால் முன்னோர்கள் சாபம் நீங்கும். பித்ருகளின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். வீட்டில் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கத் தொடங்கும். அவ்வளவு அற்புதம் வாழ்ந்த சுலபமான மந்திரம் இது. சமஸ்கிருதத்தில் உங்களால் இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியவில்லை என்றாலும் தமிழில் சொல்லப்பட்டுள்ள மந்திரத்திற்கு உண்டான அர்த்தத்தை சொல்லிக் கூட பசுவை வழிபாடு செய்யலாம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -