மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும் வீடு தேடி வந்து வாழ்த்த இந்த 1 தீபத்தை உங்களுடைய வீட்டில் ஒரு நாள் ஏற்றினால் கூட போதும்.

pasu1
- Advertisement -

வாழ்க்கையில் முன்னேற, தொழிலில் வெற்றிபெற, உயர்ந்த பதவிகளை அடைய, மும்மூர்த்திகளின் ஆசீர்வாதமும், முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசீர்வாதமும், நமக்கு இருந்தால் போதும். இப்படியாக இவர்களுடைய ஆசிர்வாதத்தை நம் வீட்டில் இருந்தபடியே சுலபமாக எப்படி பெறுவது என்பதைப் பற்றிய சுலபமான ஒரு வழிபாட்டை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முடிந்தவரை நம்பிக்கையோடு ஒரே ஒருநாள் மட்டுமாவது இந்த தீபத்தை நம் எல்லோரது வீட்டிலும் ஏற்றி பயனடைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை தொடரலாம்.

komatha

எவ்வளவு தான் வேலை செய்தாலும், லாபம் கிடைப்பது கிடையாது. எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் வெற்றி என்பதை தொடமுடிய வில்லை. விடாமுயற்சி கூட வெற்றி தரவில்லை என்றால் ஒருவருக்கு என்ன பிரச்சினை இருக்கக்கூடும். அவருடைய ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய தோஷத்தின் மூலமாக ஏதோ ஒரு பிரச்சனை அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும். உங்களுக்கு எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் சரி, அது சரியாக இந்த ஒரு தீபம் ஏற்றினால் போதும்.

- Advertisement -

முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழும் ஒரு உயிரினம் தான் பசு. இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். எவரொருவர் அனுதினமும் தங்களுடைய வீட்டில் கோமாதாவையும், கன்றின் சிலையையும் வைத்து வழிபாடு செய்து வருகிறார்களோ அவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்படக்கூடிய இன்னல்கள் படிப்படியாக குறையும் என்பதும் ஐதீகம். பசுவுக்கும் இந்த தீபத்திற்கும் சம்பந்தம் உண்டு. பசு சாணத்தை வைத்து தான் இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது.

pasu

தடைகளைத் தகர்க்க விநாயகரின் வழிபாடு உடனடியாக நல்ல பலனை தரும். உங்களுடைய வீட்டு பூஜை அறையில் வெற்றிலையின் மேல் முதலில் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து, அதற்கு குங்குமப்பொட்டு வைத்து அருகம்புல் சூட்டி அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு முன்பாக ஒரு அகல் தீபத்தை ஏற்ற வேண்டும்.

- Advertisement -

கொஞ்சமாக பசும் சாணத்தை எடுத்து வந்து, மஞ்சள் பிள்ளையாருக்கு முன்பு வைத்து அதன்மேல் அகல் தீபத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரிபோட்டு, உங்கள் வாழ்க்கையில் இருக்கக் கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று சொல்லி, அந்த தீபத்தை முழு நம்பிக்கையோடு ஒளிர விட வேண்டும்.

dheepam

இந்த ஒரு தீபம் உங்களுடைய வாழ்க்கையில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே கிடையாது. தீபத்தை ஏற்றும்போது உங்களது குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை உச்சரித்து விட்டு, மும்மூர்த்திகளின் பெயரையும் எச்சரித்துவிட்டு அதன் பின்பு தீபம் ஏற்றப்பட வேண்டும்.

- Advertisement -

virati

பசுஞ்சாணமே கிடைக்காத சூழ்நிலையில் ஒரு சிறிய விராட்டியின் மேல் இந்த தீபத்தை ஏற்றலாம். முடிந்தவரை பசுஞ்சாணத்தில் மேல் உங்களுடைய வீட்டில் வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை அன்று மட்டுமாவது, ஒரு அகல் தீபம் ஏற்றும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். நல்ல முன்னேற்றம் அடைவதை விரைவில் கண்கூடாக காணமுடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இரவில் செய்யவே கூடாத முக்கியமான 3 விஷயங்கள்? இப்படி செய்தால் வீட்டில் இருக்கும் பணம் விரையமாகி கொண்டே இருக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -