நீங்கள் விரும்பிய வேலை கிடைக்கப்பெற இதை செய்யுங்கள்

pasupatha-homam

மனிதன் உழைக்க வேண்டும் என்று அனைத்து சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன. மிகப்பெரிய ஞானிகளும், மகான்களும் கூட ஏதாவது ஒரு தொழில் அல்லது வேலையை செய்து வந்திருக்கின்றனர். ஆனால் இக்காலத்தில் மக்கள்தொகை அதிகமானதாலும், இன்ன பிற காரணங்களாலும் பலருக்கும் வேலை கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. நமக்கு வேலை கிடைப்பதற்கு திறமை மட்டும் போதாது. இறைவனின் அனுக்கிரகமும் வேண்டும். அப்படி தெய்வத்தின் அருளைப் பெறுவதற்கும், நாம் விரும்பிய வண்ணம் வேலை கிடைப்பதற்கும் செய்யப்படும் “பசுபத ஹோமம்” பற்றி இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Govt job

அரசாங்கப் பணி மற்றும் விருப்பமான தனியார் தொழில் நிறுவனங்களில் உள்ள வேலையில் சேரவும், அதிகமாக ஊதியம் தரக்கூடிய வேலை உங்களுக்கு கிடைக்க செய்யவும், விரும்பிய இடத்தில் விரும்பிய பணிகள் கிடைப்பதற்கும், இந்த உத்யோக பசுபத ஹோமம் செய்வதால் நிச்சயமான பலன்கள் ஏற்படுகிறது. உத்யோக பசுபத ஹோமம் செய்வதற்கு அனுபவம் வாய்ந்த வேதியர்களிடம் நல்ல நாள், நட்சத்திரம், நேரம் பார்த்து குறித்துக் கொள்ள வேண்டும்.

இந்த உத்யோக பசுபத ஹோமத்தை வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ செய்துகொள்ளலாம். கோயில்களில்செய்வது பலன்களை விரைவாக தர வல்லதாகும். யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களை துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது. ஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்களை போக்குகிறது.

உத்யோக பசுபத ஹோமத்தை செய்வதால் வேலை கிடைப்பதில் உள்ள தடைகள் தாமதங்கள் போன்றவற்றை நீக்குகிறது. ஹோமம் செய்து கொள்ளும் நபர்கள் வேலையில் சிறப்பதற்கான தன்னம்பிக்கை, தைரியம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. ஜாதகத்தில் வேலை கிடைப்பதற்கு தடையாக இருக்கும் கிரக தோஷங்கள் போன்றவற்றை போக்கி வேலை சீக்கிரம் கிடைப்பதை உறுதி செய்கிறது. உங்களின் விருப்பத்திற்கு உரிய வேலையில் சேரவும் இந்த ஹோமத்தால் கிடைக்கின்ற தெய்வீக சக்தி உங்களுக்கு உதவுகிறது.

இதையும் படிக்கலாமே:
கண் திருஷ்டி நீங்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pasupata homam in Tamil. It is also called as Velai kidaika in Tamil or Homangal in Tamil or Homam pooja in Tamil or Homangal palangal in Tamil.