முடி கொத்து கொத்தாக கொட்டுவதை தடுத்து நிறுத்த, இந்த 5 குறிப்புகளும் கூட உங்களுக்கு கை கொடுக்கும்.

hair10
- Advertisement -

அதிகமாக முடி உதிர்வு இருக்கிறது. என்ன செய்வது. நிறைய ஹேர் பேக் முயற்சி செய்து பார்த்து விட்டோம். நிறைய ஹேர் ஆயில், நிறைய ஷாம்பூவும் மாற்றி மாற்றி போட்டாச்சு. நிறைய ஹெல்த் ட்ரிங்க் கூட ட்ரை பண்ணியாச்சு. ஆனால் முடி உதிர்வு நிற்கவில்லை. இந்த பிரச்சனைக்கு சுலபமான எளிமையான ஒரு ஐந்து தீர்வைதான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த குறிப்புகளை பின்பற்றினால் இன்று முடி உதிர்வு நிற்கும். நாளை முடி உதிர்வு நிற்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஆறு மாதங்கள் தொடர்ந்து இதை பின்பற்றும்போது நல்ல வித்தியாசம் தெரியும்.

hand

குறிப்பு 1:
இரண்டு கைகளையும், அதாவது இரண்டு கைகளில் இருக்கும் நகங்களையும் ஒன்றாக இப்படி மேலேயுள்ள படத்தில் காட்டியவாறு வைத்து மேலும் கீழுமாக தேய்க்க வேண்டும். சும்மா டிவி பார்க்கும்போது ஒரு ஐந்து நிமிடம் இந்த மாதிரி விரல்களை தேய்த்துக் கொடுத்தால், உங்களுடைய உடம்பில் ரத்த ஓட்டம் சீராகி, ரத்த ஓட்டம் அதிகரித்து தலைமுடி உதிர்வை தடுத்து நிறுத்துவதற்கு இந்த பயிற்சி உதவியாக இருக்கும். (ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை கூட இந்த மாதிரி செய்யலாம் தவறு கிடையாது.)

- Advertisement -

குறிப்பு 2:
இரண்டாவதாக உங்களுடைய தலையை கீழே கவிழ்த்தபடி, அதாவது முடியின் வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டம் செல்வது போல, உங்களால் முடிந்த ஏதாவது ஒரு உடற்பயிற்சி. தலைகீழே தான் நிற்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. தலையை கவிழ்த்து போட்டு ஐந்து நிமிடம் நின்றாலும் கூட போதும். தினமும் ஐந்து நிமிடம் இப்படி ஏதாவது ஒரு யோகா செய்யணும். இரவு தூங்க செல்லும் போது முடியை அப்படியே கட்டிலுக்கு கீழே போட்டு விட்டு கூட ஐந்து நிமிடம் கழித்து நீங்கள் தூங்க செல்லலாம்.

hair9

குறிப்பு 3:
மூன்றாவதாக இந்த கண்டிஷனர் முயற்சி செய்து பாருங்கள். தலைக்கு குளித்து ரொம்பவும் தண்ணீர் சொட்ட சொட்ட இருக்கும்போது கண்டிஷனரை அப்ளை செய்யக்கூடாது. கூடுமானவரை தலையில் இருக்கும் தண்ணீரை அனைத்தையும் பிழிந்து விட்டு, ஒரு காட்டன் துணியில் தலையை இரண்டு நிமிடம் கட்டி விடுங்கள். அதிகமாக இருக்கும் தண்ணீரை அந்த டவல் உறிஞ்சி கொள்ளும். அதன் பின்பு லேசாக ஈரம் இருக்கும் முடியில் கண்டிஷனர் அப்ளை செய்ய வேண்டும்.

- Advertisement -

ஒரு டம்ளர் தண்ணீரில், 1 டேபிள்ஸ்பூன் அலோவேரா ஜெல், விட்டமின் ஈ ஆயிலுக்கு உள்ளே இருக்கும் ஜெல் 1, நீங்கள் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன், ஊற்றி நன்றாக அடித்து கலந்தால் சூப்பரான ஹேர் கண்டிஷனர் தயார். இதை முடியின் மேல் பகுதியிலிருந்து கீழ் பகுதி வரை லேசாக தடவி விட வேண்டும்.

hair-pack-tamil

குறிப்பு 4:
அடுத்து எல்லோருக்கும் இருக்க கூடிய சந்தேகம் எந்த ஷாம்பு பயன்படுத்துவது. எந்த ஹேர் ஆயில் பயன்படுத்துவது. அதிகமாக கெமிக்கல் சேர்க்காமல், இயற்கையான முடி வளர்ச்சியை கொடுக்கும் நெல்லிக்காய், செம்பருத்தி, வெந்தயம், வெங்காயம், இப்படி இயற்கையான பொருட்கள் ஏதாவது 3, இங்கிரடியன்ட் லிஸ்டில் இருந்தால் அந்த பிராண்டை நீங்கள் பயப்படாமல் பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: முல்தானி மட்டி முகத்திற்கு மட்டுமல்ல, தலைமுடிக்கு கூட போடலாமாம் தெரியுமா? எண்ணெய் பிசுக்கு, பொடுகு தொல்லையை முற்றிலுமாக போக்கி அபரிமிதமான முடி வளர்ச்சியை கொடுக்குமாம்! இதை எப்படி பயன்படுத்துவது?

குறிப்பு 5:
100 கிராம் கருவேப்பிலைப்படி, 100 கிராம் முருங்கைக்கீரை பொடி இரண்டையும் வாங்கி ஒன்றாக கலந்து ஒரு கண்டெய்னரில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் இதிலிருந்து ஒரு ஸ்பூன் பொடியை போட்டு கலந்து அப்படியே குடிச்சுருங்க. கொஞ்ச நேரம் விட்டு ஒரு டம்ளர் நீர் மோர் குடிங்க. ஆறு மாதங்கள் தினமும் இந்த ட்ரிங்க் குடித்து வந்தாலும் தலைமுடி உதிர்வதில் வித்தியாசம் தெரியும்.

- Advertisement -