முகம் வெள்ளையாக இருந்தாலும் உங்களுடைய பாதம் வெயிலில் சுற்றி கருப்பாக மாறி விட்டதா? 10 நிமிடத்தில் உங்களுடைய காலை பளிச்சென வெள்ளையாக்க இதை தான் செய்யனும் தெரிஞ்சுக்கோங்க!

leg-patham-pappali
- Advertisement -

சிலர் என்ன தான் முகத்திற்கு பராமரிப்பு செய்து கொண்டாலும், தங்களுடைய பாதம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் பாதத்திற்கு கொடுக்காவிட்டால் நாளடைவில் உங்களுடைய பாதம் தன்னுடைய உண்மையான நிறத்தை இழந்து மிகவும் கருப்பாக, அழுக்குகளாக அசிங்கமாக தோற்றமளிக்கும். பாதத்தின் நிறத்தை பளிச்சென வெள்ளை வெளேரென மாற்றுவதற்கு செய்யக்கூடிய எளிய குறிப்பு தான் இது! அது என்னவென்று இந்த பதிவின் மூலம் இனி பார்ப்போம்.

எப்பொழுதும் நம்முடைய சருமத்தின் இயற்கை நிறத்தை ஒருமுறை இழந்துவிட்டால் அதை மீட்டு எடுப்பதற்கு நிறையவே நேரம் எடுக்கும். ஆனால் நீங்கள் இந்த முறையில் செய்யும் பொழுது முதல் தடவையிலேயே நல்ல ஒரு மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். அதன் பிறகு மீண்டும் மீண்டும் இதை பயன்படுத்தும் பொழுது உங்களுடைய இயற்கையான நிறத்தை நீங்கள் விரைவில் அடைவீர்கள். பதத்தை சுத்தம் செய்வதற்கு பார்லர் போய் செலவு செய்யணும் என்கிற அவசியமெல்லாம் இல்லை. நம் வீட்டில் இருக்கும் சாதாரணமான பொருட்களைக் கொண்டே நம்முடைய பாதத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை ஊக்குவித்து இழந்த பழைய நிறத்தை அடைய செய்து விடலாம். இதனால் உங்களுடைய பாதம் பார்ப்பதற்கு ரொம்பவும் அழகாகவும், மென்மையாகவும் தோற்றமளிக்க ஆரம்பிக்கும்.

- Advertisement -

வெளியில் எங்காவது நாம் செல்லும் பொழுது மற்றவர்களுடைய கால்களுக்கும், நம்முடைய கால்களுக்கும் வித்தியாசத்தை பார்க்கும் பொழுது ஒரு விதமான அசௌகரியம் உண்டாவது இயல்பாகி போய்விட்டது. சில பெண்கள் பாதத்தை ரொம்பவும் அக்கறையாக பராமரிப்பது உண்டு. அவர்களுடைய பாதத்தை பார்க்கும் பொழுதே நமக்கு அவ்வளவு அழகாக தோன்றும். ஆனால் நம்முடைய பாதம் முகத்தைப் போல அவ்வளவு பொலிவாக இருப்பதில்லை! இது போன்றவர்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி தங்களுடைய பாதத்தையும் அழகாக மாற்றுவது?

பப்பாளி பழத்தில் இருக்கும் என்சைம்கள் இறந்த செல்களை முற்றிலும் நீக்க கூடிய அற்புதமான ஆற்றல் படைத்தது எனவே பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பப்பாளிப்பழத்தை காயாக இருக்கும் இடங்களை விட்டு விட்டு மேற்பகுதியில் இருக்கும் நல்ல பழுத்த பழமாக 2 லிருந்து 3 ஸ்பூன் அளவிற்கு வழித்து எடுங்கள். இதை ஒரு டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேனுடன் சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த கலவையை முதலில் உங்களுடைய கால்களில் பூசி நன்கு மசாஜ் செய்யுங்கள். பப்பாளி பழத்தில் இருக்கும் சத்துக்கள் உங்களுடைய கால்களில் இருக்கும் இறந்த செல்களை வெளியில் கொண்டு வந்து விடும். பிறகு கால்களை நன்கு தண்ணீரால் கழுவி கொள்ளுங்கள். அதன் பிறகு கால்களுக்கு இது போல ஒரு பேக் போட்டுக் கொள்ளுங்கள். மேற்புறப் பகுதியில் ஆரம்பித்து பாதம் முழுக்க எல்லா இடங்களிலும் இந்த பேக் போட்டு கொள்ள வேண்டும்.

- Advertisement -

முதலில் 2 ஸ்பூன் அளவிற்கு முல்தானிமட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரை மூடி எலுமிச்சை சாற்றை விதைகள் இல்லாமல் பிழிந்து சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல பேக் போடும் அளவிற்கு உருளைக்கிழங்கு ஜூஸை எவ்வளவு தேவையோ அவ்வளவு சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு தோல் நீக்கிய உருளைக்கிழங்கை துருவி பிழிந்து எடுத்தால் கிடைக்கக்கூடிய ஜூஸ் உருளைக்கிழங்கு ஜூஸ் ஆகும்.

உருளைக்கிழங்கு ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் மற்றும் மூல்தானி மெட்டி ஆகியவற்றை நன்கு ஒன்றுடன் ஒன்று கலந்து கால் முழுவதும் பேக் போல போட்டு 15 நிமிடம் கழித்து லேசாக கைகளை தண்ணீர் தொட்டு மசாஜ் செய்தபடி மேலும் கீழுமாக நன்கு அழுத்தம் கொடுத்து தேயுங்கள். அதன் பிறகு கால்களை கழுவி பாருங்கள், உங்களுடைய இந்த காலை போல, அந்த கால் நிச்சயம் இருக்காது. நல்ல ஒரு மாற்றம் தெரியும். பளபளன்னு இருக்கும். தொடர்ந்து இதை வாரம் ஒருமுறை செய்து வர பொலிவான பாதத்தை நீங்களும் விரைவில் அடைந்து விடலாம்.

- Advertisement -