உங்கள் பாதங்களும் சினிமா நடிகைகளின் பாதங்கள் போலவே நாள் முழுவதும் அழகாக இருக்க, நகங்களில் சொத்தைகள் விழாமல் இருக்க, இந்த தண்ணீரில் தினமும் பாதங்களை கழுவினாலே போதும்.

foot
- Advertisement -

ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அவரவர் பாதங்களை அவரவர்கள் சுத்தமாகத்தான் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், ஆண்களை ஒப்பிடும்போது பெண்கள் தங்களுடைய பாத அழகின் மீது அதிகமாக கவனம் செலுத்துவார்கள். பியூட்டி பார்லருக்கு சென்று பெடிக்யூர் செய்து பாதங்களை அழகாக மாற்ற வேண்டுமென்றால் அதற்காகும் செலவுகள் அதிகம். அப்படியெல்லாம் நிறைய பணத்தை வீணாக்காமல் பாதங்களை அழகாக வைத்துக் கொள்ள எளிமையான ஒரு அழகு குறிப்பு தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பாதங்களின் அழகு கெட்டுப்போவதற்கு முதல் காரணம் என்ன தெரியுமா. பாதங்களில் தங்கி இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களும் இறந்த செல்களும் தான். நீங்கள் குளிக்கும் போது வழக்கம் போல சோப்பு போட்டு குளிப்பதன் மூலம் இந்த பாக்டீரியாக்கள் அழியப்போவது கிடையாது. சொல்லப் போனால் உங்களுடைய காலில் நகசுத்தி, நகம் சொத்தை ஏதாவது இருந்தால் அதில் இந்த சோப்பு நுரை போய் படிந்து இன்பெக்சன் இன்னும் கொஞ்சம் அதிகமாகத்தான் செய்யும். இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க, உங்களுடைய கால்களில் இருக்கும் இறந்த செல்களை நீக்க, துர்நாற்றம் வீசாமல் பாதங்களை பாதுகாக்க இதோ உங்களுக்கான எளிய வழிமுறைகள்.

- Advertisement -

குறிப்பு 1:
உங்களுடைய கால் பாதங்களை சுத்தம் செய்வதற்கு முதலில் நீங்கள் வாங்க வேண்டிய பொருள் வினிகர். இந்த வினிகருக்கு தான் காலில் இருக்கும் இறந்த செல்களை, கண்ணுக்குத் தெரியாத கெட்ட பூஜ்ஜைகளை அழிக்கக்கூடிய தன்மை இருக்கிறது. அதிலும் ஹெர்பல் வினிகர், ஃப்ரூட் வினிகர் என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். இந்த இரண்டு வினிகர்களை பயன்படுத்தி உங்கள் கால் பாதங்களை சுத்தம் செய்வது மிக மிக நல்லது.

ஒரு அகலமான டப்பில் பாதங்கள் மூழ்கும் அளவிற்கு வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 மூடி வினிகரை ஊற்றி உங்களுடைய கால் பாதங்களை 10 லிருந்து 15 நிமிடம் அந்த தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, ஒரு பல் தேய்க்கும் பிரஷ் கொண்டு காலை தேய்த்து கழுவி விட்டால் போதும். கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா எல்லாம் அழிந்து விடும். இறந்த செல்கள் வெளியேற்றப்படும். இப்படி வாரத்தில் இரண்டு நாள் அல்லது மூன்று நாள் செய்யலாம்.

- Advertisement -

குறிப்பு 2:
இது நாம் எல்லோருக்கும் தெரிந்த குறிப்பு தான். ஆனால் ஏனோ தெரியவில்லை நம்முடைய பாதங்களின் மீது அக்கறை வைத்து இதை நாம் தொடர்ந்து பின்பற்றுவதே கிடையாது. தூங்க செல்வதற்கு முன்பு உங்களுடைய கால் பாதங்கள் மூழ்கும் அளவிற்கு வெந்நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வெந்நீரில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு போட்டு அதில் உங்களுடைய கால் பாதங்களை 10 நிமிடம் வைத்துவிட்டு அதன் பின்பு கால் பாதங்களை சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு தூங்கச் செல்வது ரொம்ப ரொம்ப நல்லது. இப்படி தினமும் செய்யலாம்.

குறிப்பு 3:
பேக்கிங் சோடா, எலுமிச்சை பழச்சாறு, வெதுவெதுப்பான தண்ணீர் இந்த மூன்று பொருட்களும் இந்த குறிப்புக்கு தேவை. ஒரு அகலமான டப்பில் தண்ணீரை எடுத்துக்கொண்டு பேக்கிங் சோடா, எலுமிச்சம் பழச்சாறை அதில் போட்டு உங்களுடைய கால் பாதங்களை அதில் வைத்து விட்டு, அதன் பின்பு ஒரு பிரஷ்சை கொண்டோ, அல்லது அந்த எலுமிச்சம் பழ தோலை வைத்து கால்களை தேய்த்து கழுவி விட வேண்டும். 10 நிமிடம் உங்கள் கால்கள் இந்த தண்ணீரில் ஊறினால் போதும்.

இதையும் படிக்கலாமே: வெறும் 5 ரூபாய் செலவு செய்தால் போதுமே. எவ்வளவு பெரிய ஓட்டை காதில் இருந்தாலும், வெறும் 5 செகண்டில் அதை சரி செய்து விடலாம்.

இப்படி செய்தாலும் உங்களுடைய கால் எப்போதும் சுத்தமாக பாதுகாக்கப்படும். மேலே சொன்ன குறிப்புகளில் உங்களுக்கு எது எளிமையாக இருக்கிறது. உங்களுடைய வீட்டில் எந்த பொருட்கள் இருக்கிறதோ அதை பயன்படுத்தி பாதங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்திற்கும் நல்லது.

- Advertisement -