- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்அடடே! பாத்திரம் தேய்க்க இப்படியும் ஒரு ஐடியா இருப்பது இத்தனை நாட்களாக தெரியாமல் போச்சே. இனி...

அடடே! பாத்திரம் தேய்க்க இப்படியும் ஒரு ஐடியா இருப்பது இத்தனை நாட்களாக தெரியாமல் போச்சே. இனி இல்லத்தரசிகளின் கைகளுக்கு பாத்திரம் தேய்த்து தேய்த்து பிரச்சனையே வராது.

- Advertisement -

இல்லத்தரசிகளின் கைகள் சொரசொரப்பாக மாறுவதற்கு காரணம் பாத்திரம் தேய்க்க கூடிய சோப்பும் ஒன்று. அந்த சோப்பு நகக்கணுகளில் போய் சிக்கிக் கொண்டால், நகத்தில் தண்ணீர் கோர்த்துக்கொண்டு, செப்டிக் போன்ற பிரச்சனைகள் வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. சோப்பு நம்முடைய நகங்களை அரித்து எடுத்து விடும். இப்படி சோப்பு நகத்திற்குள் போகாமல் இருக்கவும், அதேசமயம் 1/2 மணி நேரம் தேய்க்கக்கூடிய பாத்திரத்தை ஐந்தே நிமிடத்தில் தேய்த்து முடிக்கவும், எளிமையான அழகான ஒரு பயனுள்ள வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக. பாத்திரம் தேய்க்க கஷ்டப்படும் இல்லத்தரசிகள் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க.

சில பேர் பாத்திரம் கழுவ, பாத்திரம் தேய்க்கும் சோப்பு பயன்படுத்துவார்கள். சில பேர் பாத்திரம் தேய்க்க லிக்விட் பயன்படுத்துவார்கள். நீங்கள் எதை பயன்படுத்தினாலும் சரி, இந்த ஐடியாவை தெரிஞ்சுக்கணும். முதலில் பாத்திரம் தேய்க்க சோப்பு பயன்படுத்துபவர்களுக்கு ஒரு ஐடியா. பாத்திரம் தேய்க்கும் சோப்பை ஒரு கிரேட்டரில் நன்றாக துருவிக் கொள்ளுங்கள். கேரட் பீட்ரூட் துருவம் துருவலில் நன்றாக இதைத் துருவி, ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு இந்த துருவலை ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இரண்டு நாளைக்கு தேவையான இந்த சோப்பு துருவலை எடுத்துக்கோங்க. இரண்டு ஸ்பூனோ அல்லது மூன்று ஸ்பூன் உங்கள் தேவைக்கு ஏற்ப. துருவிய பாத்திரம் தேய்க்கும் சோப்புத்தூளை, ஒரு பாத்திரத்தில் போட்டு வெதுவெதுப்பான நீரை ஊற்றி கரைத்தால் துருவிய சோப்பு லிக்விட் ஆக மாறிவிடும். தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். இது தண்ணீராக ஆக தான் இருக்க வேண்டும். இந்த லிக்விடை ஒரு வாட்டர் கேனில் ஊற்றி அந்த வாட்டர் கேனில் மூடி போட்டு சின்ன சின்ன ஓட்டைகள் போட்டுக் கொள்ளுங்கள். ஸ்பிரே தயார்.

எப்போதுமே சிங்கிள் பாத்திரத்தை போடும்போது, அதில் மிச்சம் மீதி இருக்கும் உணவுப்பொருட்கள் கருவாப்பிலை கொத்தமல்லி, மிளகாய் இவைகளை அப்படியே போடக்கூடாது. அதை வழித்து குப்பை டப்பாவில் போட்டு விட்டு தான் பாத்திரங்களை மட்டும் சிங்கிள் போட வேண்டும். இப்படி எந்த ஒரு ஒரு உணவுப் பொருட்களும் இல்லாத பாத்திரம் சிங்கில் இருக்கிறது. அதன் மேலே நன்றாக தண்ணீரை தெளித்துவிட்டு, பிறகு சிங்க் முழுவதும் இருக்கக்கூடிய பாத்திரத்தில் இந்த ஸ்பிரேவை லேசாக அப்படியே ஸ்பிரே செய்து விட்டு விடுங்கள்.

- Advertisement -

பிறகு ஒரு ஸ்பாஞ்ச் நாரை வைத்து கடகடகடகடவென இந்த பாத்திரங்களை தேய்த்து முடிக்கலாம். பாத்திரத்தில் ஏற்கனவே தெளித்திருக்கும் தண்ணீர், நாம் தயார் செய்து வைத்திருக்கும் லிக்விட் ஒன்றாக சேர்ந்து பாத்திரம் தேய்க்க அவ்வளவு சுலபமாக இருக்கும். சட்டென பாத்திரத்தை தேய்த்து முடித்துவிட்டு கிச்சனை விட்டு வெளியே வந்து விடுவீங்க. மிஸ் பண்ணாம இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க. ரொம்ப ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். படிக்கும்போது பெரியதாக இருக்கலாம். செய்யக்கூடிய வேலைக்காக நேரம் மிக மிகக் குறைவு.

இப்படி நாம் தயார் செய்த லிக்விட் வாட்டர் கேனில் மீதம் இருந்தால் கூட பரவாயில்லை. அடுத்த வேலை பாத்திரம் தேய்க்க, அடுத்த நாள் பாத்திரம் தேய்க்க பயன்படுத்திக் கொள்ளலாம். இரண்டு நாளைக்கு தேவையான லிக்விட் மட்டும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நீண்ட நாட்களுக்கு இந்த லிக்விடை ஸ்டோர் செய்யக்கூடாது. கெட்டுப் போய்விடும்.

இதையும் படிக்கலாமே: கருத்துப்போன வெள்ளி கொலுசை 2 நிமிடத்தில் புத்தம் புதுசு போல மாற்றிவிடலாம். ஒரு சொட்டு தண்ணீர் கூட இதற்கு தேவையில்லை.

இதே போல தான் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் பயன்படுத்துபவர்கள், பாத்திரம் தேய்க்கும் லிக்விடில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, கலந்து ஒரு வாட்டர் கேனில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த லிக்விடை பாத்திரத்தின் மீது ஸ்பிரே செய்துவிட்டு, சிங்கிள் இருக்கும் பத்து பாத்திரங்களை ஸ்பாஞ் நாரை வைத்து தேய்த்தால் வேலை சுலபமாக முடிந்து விடும். இந்த எளிமையான வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

சற்று முன்