- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஇந்த பட்ரோஸ் செடி உங்க வீட்ல இருந்துச்சுன்னா, நீங்க தாங்க செம லக்கி. இல்லாதவங்க...

இந்த பட்ரோஸ் செடி உங்க வீட்ல இருந்துச்சுன்னா, நீங்க தாங்க செம லக்கி. இல்லாதவங்க இந்த செடிய உடனே வளர்த்து இப்படி யூஸ் பண்ண ஆரம்பிச்சுடுங்க.

- Advertisement -

முகத்தின் அழகை பராமரிபதில் மலர்களின் பங்கு இன்றியமையாதது. இந்த செம்பருத்தி, ரோஜா போன்ற மலர்களை அழகு சம்பந்தமாக பயன்படுத்துவதை பற்றி கேள்விப்பட்டிருப்போம் இல்லை நாமும் பயன்படுத்தி இருப்போம். ஆனால் இந்த பட்ரோஸை வைத்தும் முகத்தை அழகுப்படுத்தலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. சாதாரணமாக எங்கே ஒரு கிளை நட்டு வைத்தாலும் துளர்த்து விடும் தன்மை இந்த பட்ரோஸுக்கு அதிகம் உண்டு. அதனால் இந்த செடியை பற்றி பெரும்பாலும் யாரும் பெரிதாக பேசியிருக்க கூட மாட்டார்கள். இத்தனை எளிமையாக கிடைக்க கூடிய இந்த செடியில் அவ்வளவு பயன்கள் இருக்கிறது என்று இதுவரை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். இந்த பட்ரோஸ் செடியை எப்படி அழகு குறிப்புக்கு பயன்படுதலாம் என்பதை தெரிந்து கொள்ளத்தான் இந்த பதிவு.

பட்ரோஸ் பல வண்ணங்களில் பூக்கும் வெள்ளை, மஞ்சள், பிங்க், இன்னும் பல நிறங்களில் இதன் பூக்கள் பூக்கும்.இந்த பிங்க் நிறத்தில் பூக்கும் பூளை வைத்து தான் நாம் இப்போது அழகு குறிப்புக்கு பயன்படுத்த போகிறோம்.

- Advertisement -

பிங்க் கலரில் இருக்கும் பூவை எடுத்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு சிறிய பவுலில் ஒரு ஸ்பூன் பட்ரோஸ் அரைத்த விழுதுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து உங்கள் முகத்தில் தடவி பத்து நிமிடம் வரை மசாஜ் செய்தால் போதும். அதன் பிறகு உங்கள் முகத்தை எப்போதும் போல் தண்ணீர் வைத்து முகத்தை துடைத்துக் கொள்ளுங்கள். இந்த முறையை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் அந்த ரோஜா இதழ்களை போலவே நீங்களும் சிகப்பாக விரைவில் மாறிவிடுவீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

அதன் பிறகு இந்தக் குறிப்பிற்கு எந்த கலர் ரோஜாவாக இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம். இந்த பட்ரோஸ் தண்டு, இலை இரண்டையும் எடுத்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து அதனுடன் ஆயில்சேர்த்து கொள்ள வேண்டும். எந்த ஆயில் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்,ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில் இப்படி முடிக்கு சேர்க்கும் எந்த ஆயிலையும் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு உங்கள் தலைமுடி வேர்க்கால்களில் இருந்து அடி முடி வரை நன்றாக தேய்த்து பத்து நிமிடம் கழித்து நீங்கள் எப்போதும் போல் உபயோகப்படுத்தும் ஷாம்பு அல்லது சீகைக்காய் கொண்டு தேய்த்து குளித்தால் உங்கள் முடி பட்டு போல் ஷைனிங்காக இருக்கும். இதில் முடி வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் ஈ சத்து இந்த தண்டுகளை அனைத்திலும் அதிகமாக இருக்கிறது. எனவே எது முடி தொடர்பான பிரச்சனைக்கும் நல்ல தீர்வு.

இதையும் படிக்கலாமே: அடர்த்தியான முடிக்கு இந்த 2 இலையை மட்டும் நல்லா அரைச்சு தேச்சி குளிச்சு பாருங்க! ஒரு முடி கூட அதுக்கப்புறம் கொட்டவே கொட்டாது காடு போல வளர ஆரம்பிக்கும்.

நான் அழகிற்காக வளர்க்கும் இந்த பட்ரோஸ் செடிகளில் நம் முகத்திற்கும், முடிக்கும் இத்தனை பயன் படுகிறது என்று இதனால் வரை தெரியாமல் இருந்து இருந்தால், இந்த பதிவில் தெரிந்து கொண்ட பிறகு பயன்படுத்தி உங்களின் அழகை மேலும் மெருகூட்டி கொள்ளுங்கள்.
`

சற்று முன்