மிரள வைக்கும் முக அழகை தரும் சுருள் பட்டை. வெறும் 5 நிமிடத்தில் ப்ளீச் செய்தது போல முகம் பளிச்சென்று மாறும்.

face19
- Advertisement -

பொதுவாகவே திருமணம், நிச்சயதார்த்தம் அல்லது வேறு ஏதாவது பெரிய சுபநிகழ்ச்சிகள் ஆக இருந்தால் அந்த நிகழ்ச்சிக்கு தயாராக முகம் வெள்ளையாக மாறுவதற்கு பியூட்டி பார்லருக்கு சென்று ப்ளீச் செய்து கொள்ளக்கூடிய வழக்கம் இருக்கும். செயற்கையாக, செயற்கையான பொருட்களை வைத்து ப்ளீச் செய்யும் போது நம்முடைய முகத்தில் இருக்கும் ரோமங்கள் வெள்ளையாக மாறும். கெமிக்கல் கலந்த ப்ளீச்சினால் தான் இப்படிப்பட்ட ஒரு மாற்றம் நிகழும். ஆனால் எந்த ஒரு கெமிக்கல் கலக்காமல் வீட்டிலேயே சூப்பராக ஒரு ப்ளீச் எப்படி செய்து கொள்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த முறையை பின்பற்றி முகத்தை ப்ளீச் செய்தால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் வெள்ளையாக மாறாது. ஆனால் முகம் உடனடியாக பொலிவாக மாறும். முகம் பார்ப்பதற்கு பளிச்சென்று இருக்கும். இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் 2. ஜாதிக்காய், சுருள் பட்டை. சாதாரண பட்டையை குறிப்புக்கு பயன்படுத்தாதீங்க. கடையில் சுருள்பட்டை என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு பெரிய துண்டு அளவு சுருள்பட்டையை எடுத்து சிறிய துண்டுகளாக உடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, கொதிக்கும் வெந்நீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அரை டம்ளர் அளவு கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றி அப்படியே விட்டு விடுங்கள். தண்ணீர் ஆறும் வரை பட்டை வெந்நீரில் ஊறட்டும். தண்ணீர் நன்றாக ஆறியவுடன் பட்டையை நீக்கிவிட்டு இந்த தண்ணீரை மட்டும் குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். (தண்ணீரில் பட்டையை போட்டு கொதிக்க வைக்க கூடாது).

மஞ்சள் உரசக்கூடிய கல்லில் கொஞ்சமாக இந்த சுருள்பட்டை தண்ணீரை ஊட்டி ஜாதிக்காயை இழைக்க வேண்டும். ஜாதிக்காயை கல்லில் பட்டை தண்ணீரோடு சேர்த்து உரசும் போது, நமக்கு ஜாதிக்காய் பேஸ்ட் கிடைக்கும். இந்த பேஸ்டை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் மெல்லிசாக அப்ளை செய்து அப்படியே விட்டுவிட வேண்டும். இந்த பேக் நன்றாக காய்ந்ததும் குளிர்ந்த தண்ணீரில் லேசாக மசாஜ் செய்து முகத்தை கழுவி விடுங்கள். உங்களுக்கே முகத்தில் நல்ல வித்தியாசம் தெரியும்.

- Advertisement -

அவசரமாக முகம் வெள்ளையாக வேண்டும். திடீரென்று ஏதோ ஒரு விசேஷத்திற்கு செல்ல வேண்டும் எனும்போது இந்த குறிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் மாதத்தில் இரண்டு நாட்கள் இந்த குறிப்பை பயன்படுத்துவது நம்முடைய சருமத்திற்கு நல்லது. சில பேருக்கு பட்டையை முகத்தில் பயன்படுத்தினால் எரிச்சல் ஏற்படக்கூடிய தன்மை உண்டாகும். (பட்டையை வெந்நீரில் போட்டு தான் ஊற வைக்கின்றோம். பாதிப்பு வர வாய்ப்பு இல்லை.)

உங்களுக்கு ரொம்பவும் சென்சிடிவ் ஸ்கின் ஆக இருந்தால் இந்த பேக்கை லேசாக பேட்ச் டெஸ்ட் எடுத்துக் கொண்டு அதன் பின்பு முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். ட்ரை ஸ்கின் உள்ளவர்களும். இந்த பேக்கை போடலாம். ஆயில் ஸ்கின் உள்ளவர்களும் இந்த பேக்கை போடலாம்.

பின்குறிப்பு: உங்களுக்கு ஜாதிக்காய் உரசுவதற்கு கஷ்டமாக இருந்தால், நாட்டு மருந்து கடைகளில் ஜாதிக்காய் பொடி விற்கும். அந்த பொடியில் பட்டைத் தண்ணீரை ஊற்றி கலந்து ஃபேஸ் பேக்காக போட்டுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் ஒரே முறை ட்ரை பண்ணி பாருங்க. சருமத்தில் தோன்றும் அழகை பார்த்து நீங்களே அசந்து போவீங்க.

- Advertisement -