டீக்கடை பட்டணம் பக்கோடாவை ஞாபகம் இருங்கா. அந்த பக்கோடாவை அதே ருசியில் நம் வீட்டிலும் டீ போடும் நேரத்திற்குள்ளாகவே ரொம்ப சிம்பிளா இப்படி செய்து கொடுங்க.

pattanam pakoda
- Advertisement -

இப்போதெல்லாம் பெரும்பாலும் டீக்கடைகளில் இந்த பட்டணம் பக்கோடா போடுவதில்லை அதற்கு பதிலாக பல்வேறு ஸ்நாக்ஸ் ஐட்டங்களை தயார் செய்கிறார்கள். என்ன இருந்தாலும் இந்த பட்டணம் பக்கோடாவிற்கு ஒரு தனி சுவையும் இதற்கான ஒரு தனி ரசிகர் பட்டாளமும் இருக்க தான் செய்கிறார்கள். இப்போதெல்லாம் இது கிடைக்கவில்லையே என்று நினைப்பவர்கள் இந்த சமையல் குறிப்பு பதிவில் பட்டணம் பக்கோடா ரொம்ப எளிமையா நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி செய்வது என்று தெரிந்து கொண்டு செய்யலாம்.

தேவையான பொருட்கள்

கடலை மாவு – 1 கப், அரிசி மாவு -1/2 கப், உடைத்த கடலை பவுடர் – 1/4 கப், நெய் -1 டேபிள் ஸ்பூன், பேக்கிங் சோடா -1/4 டீஸ்பூன், வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் -2 பொடியாக நறுக்கியது, இஞ்சி -1 துண்டு பொடியாக நறுக்கியது, கருவேப்பிலை, கொத்தமல்லி -1 கைப்பிடி, உப்பு -1/2 டீஸ்பூன், சோம்பு -1/2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் -1 டீஸ்பூன், மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன், எண்ணெய் பொரிக்க தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

இந்த பக்கோடா செய்வதற்கு ஒரு பவுலில் நெய், பேக்கிங் சோடா இரண்டையும் ஒன்றாக சேர்த்து விஸ்க் வைத்து நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு இதில் கடலை மாவு, அரிசி மாவு பொட்டுக்கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள். இந்த சமயத்திலே நீங்கள் மாவை எடுத்து கையில் பிடிக்கும் ஒரு உதிராமல் பிடிப்பட வேண்டும் அந்த அளவிற்கு மாவை பிசைந்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக இந்த மாவில் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம் என அனைத்தையும் சேர்த்த பிறகு நன்றாக ஒரு முறை கலந்து விடுங்கள். இப்போதும் தண்ணீர் சேர்க்கக் கூடாது. இந்த மாவில் சேர்த்த பொருட்கள் அனைத்தும் ஒன்றாக கலந்த பிறகு லேசாக தண்ணீர் தெளித்து பிசைய தொடங்குங்கள். இந்த மாவில் அதிகமாக தண்ணீர் சேர்த்து விடக் கூடாது. சப்பாத்தி மாவின் பதத்தை விட கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்து பிசைந்து வைத்த மாவை ஒரு தட்டில் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அது மிதமான தீக்கு மாற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு தயார் செய்து வைத்து உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு சிவந்து வந்தவுடன் எடுத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஹோட்டல் ஸ்டைலில் இந்த சூப்பரான கீரை கூட்டை வெங்காயம் தக்காளி எதுவுமே சேர்க்காம எப்படி செய்யறதுன்னு பாக்கலாமா? கீரையைப் பார்த்தாலே ஓடுறவங்க கூட இதை கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

அவ்வளவு தான் சுவையான பட்டிணம் பக்கோடா நம் வீட்டிலேயே தயார் செய்து விட்டோம். முன்பெல்லாம் எந்த விசேஷம் என்றாலும் இந்த பலகாரம் இல்லாமல் இருக்காது. இப்போது பெரும்பாலான இடங்களில் இந்த பக்கோடாவை தயார் செய்வதில்லை. இந்த முறையில் செய்தால் ரொம்ப ரொம்ப சுலபமாக நம் வீட்டில் செய்து கொடுத்து விடலாம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -