1 கைப்பிடி பட்டாணி இருந்தா போதும் சட்டுனு சுவையான பட்டாணி போண்டா இது போல 5 நிமிடத்தில் செய்து அசத்தலமே

pattani-peas-bonda_tamil
- Advertisement -

பட்டாணி கோதுமை போண்டா | Pattani wheat bonda recipe

டீ, காபியுடன் மாலை நேரங்களில் சிற்றுண்டி வகையாக செய்யக்கூடிய போண்டா, பக்கோடா போன்ற ரெசிபிகளில் இதுவும் ஒன்று. பட்டாணி கொண்டு செய்யப்படும் இந்த போண்டா ரொம்பவே வித்தியாசமான ஒரு சுவையை கொடுக்க இருக்கிறது. எவ்வளவோ போண்டாக்கள் சாப்பிட்டிருப்போம். இது போல கொஞ்சம் பட்டாணி சேர்த்து அரைத்து செஞ்சு பாருங்க சுவையோ அட்டகாசமாக இருக்கும். வாங்க பட்டாணி போண்டா எப்படி செய்றதுன்னு தெரிஞ்சிக்குவோம்?

தேவையான பொருட்கள்

பச்சை பட்டாணி – ஒரு கைப்பிடி அளவிற்கு, பச்சை மிளகாய் – இரண்டு, பூண்டு பற்கள் – ஐந்து, இஞ்சி – சிறு துண்டு, சோம்பு – கால் டீஸ்பூன், கோதுமை மாவு – 50g(ஒரு கப்), அரிசி மாவு – கால் கப், ஆப்ப சோடா – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு, நறுக்கிய மல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

செய்முறை

பட்டாணி போண்டா செய்வதற்கு முதலில் ஒரு கைப்பிடி அளவிற்கு பச்சை பட்டாணியை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய்களை காம்பு நீக்கி சேருங்கள். பின்னர் 5 பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். அதே அளவிற்கு இஞ்சியையும் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேருங்கள்.

பின்னர் போண்டா நல்ல வாசமாக இருக்க சோம்பு சேர்த்து நைசாக ஒரு சுற்று சுற்றி அரைத்து எடுத்து வாருங்கள். தேவைப்பட்டால் கால் கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அரைத்த இந்த விழுதுடன் ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் என்பது 50 கிராம் அளவிற்கு இருந்தால் போதும். பின்னர் இதனுடன் கால் கப் அளவிற்கு அரிசி மாவு சேர்க்க வேண்டும். அரிசி மாவுக்கு பதிலாக நீங்கள் வறுத்த அல்லது வறுக்காத ரவையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து போண்டா நன்கு உப்பி வருவதற்கு சிறிது ஆப்ப சோடா போட்டு கலந்து கொள்ளுங்கள். பின்னர் கொஞ்சம் கொத்தமல்லி தழையை கையில் எடுத்து நன்கு சுத்தம் செய்து கழுவி பொடிப்பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி போண்டா மாவு பதத்திற்கு கெட்டியாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். எண்ணெய் தேவையான அளவிற்கு ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு கொதித்து வரும் பொழுது அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இந்த கோஸ் பொரியலை கல்யாண் வீ ட்டு ஸ்டைலில் வெள்ளை வெளேர்னு பார்க்கும் போதே சாப்பிடற மாதிரி செஞ்சு கொடுத்து பாருங்க, கோஸ் பொரியலே சாப்பிடாதவங்களா கூட சுண்டி இழுத்தது சாப்பிட வைக்கும்.

பிறகு மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து கையிலேயே போண்டா போல போட வேண்டும். அப்படி போடத் தெரியாதவர்கள் ஸ்பூனில் எடுத்தும் ஒவ்வொரு உருண்டைகளாக சேர்க்கலாம். பிறகு எல்லா புறமும் நன்கு சிவக்க வெந்து வர சட்டியில் இருந்து போண்டாக்களை எடுத்து விட வேண்டியதுதான். இதனுடன் கார சட்னி அல்லது தேங்காய் சட்னி வைத்து கொடுத்தால் அவ்வளவு அட்டகாசமாக இருக்கும். ரொம்பவே டேஸ்டியான இந்த பட்டாணி போண்டா ரெசிபி இதே மாதிரி நீங்களும் சுலபமா செஞ்சு பாருங்க, உங்க வீட்டில் இருக்கும் அனைவரின் பாராட்டுகளையும் வாங்கலாம்.

- Advertisement -