பாவங்கள், தோஷங்கள் கரைந்து புண்ணியம் சேர சித்திரகுப்தருக்கு இந்த வகையான பூஜையை செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தடைகள் விலகி வெற்றி உண்டாகும்

chithra
- Advertisement -

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் முன்னேற வேண்டும், தனது குடும்பத்தை செல்வ செழிப்புடன் நிம்மதியாக, சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறான். இதற்காக அவன் எடுக்கும் முயற்சிகள் பல இருக்கின்றன. அதில் ஒரு சிலருக்கு செய்யத் துவங்கும் பொழுதே அந்த விஷயம் நன்மையாக அமைந்து வெற்றி கிடைத்து விடுகிறது. ஆனால் நிறைய பேருக்கு இவ்வாறான வெற்றிகளும், அதிர்ஷ்டங்களும் கிடைப்பதில்லை. எல்லாமே நல்லபடியாக நடந்து கைக்கு கிடைக்கும் நேரத்தில் அது ஏதேனும் ஒரு வகையில் தள்ளி போய் விடும். அல்லது நிரந்தரமாக அந்த விஷயம் செய்ய முடியாத அளவிற்கு தடைகள் வந்து விடும். இது போன்ற தடைகள் இருப்பதற்கு காரணம் நாம் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவம்களாகவும் இருக்கலாம். இந்த பாவம் மற்றும் தோஷங்கள் தீர செய்ய வேண்டிய சிறப்பு பூஜையை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்

நமது முன்னோர்கள் பின்பற்றி வந்த அனைத்து பழக்க வழக்கங்களையும் தான் இன்று வரை நாம் செயல் படுத்திக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு நமது குடும்பத்திற்கென்று இருக்கும் குலதெய்வத்தை தான் இன்றுவரை வணங்கி வருகிறோம். அது போல நமக்குத் தெரிந்த பல தெய்வங்களை இஷ்ட தெய்வங்களாகவும் வணங்கி வருகிறோம். இவ்வாறு இருக்கின்றார் அனைத்து தெய்வங்களைப் பற்றிய புராணக் கதைகளையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

- Advertisement -

அதில் படைக்கும் கடவுளாக பிரம்மாவையும், காக்கும் கடவுளாக விஷ்ணுவையும், அழிக்கும் கடவுளாக சிவனையும் பார்க்கிறோம். ஒருவரின் உயிரை எடுக்கும் கடவுளாக எமதர்மன் இருக்கிறார். இப்படி ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொருவிதமான பலனை கொடுக்கின்றனர். அப்படி நமக்கு உண்டான பாவ புண்ணியங்களுக்கான பலனை கொடுப்பது சனிபகவான் அவர். ஆனால் நாம் செய்யும் பாவம் மற்றும் புண்ணியங்களின் கணக்கை எழுதுபவர் சித்திரகுப்தன் ஆவார்.

எனவே நமக்கு இருக்கும் பாவங்கள் மற்றும் தோஷங்கள் நிவர்த்தியாக சித்திர குப்தரை வணங்க வேண்டும். அதற்கு நமது வீட்டின் பூஜை அறையில் சித்திர குப்தனின் திருவுருவப் படத்தை வைத்துக் கொள்ள வேண்டும். திருவுருவப்படம் இல்லாதவர்கள் ஒரு கலசம் தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு கலச சொம்பில் தண்ணீர் மற்றும் சிறிதளவு பன்னீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அதில் சிறிதளவு மஞ்சள்தூள், சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விட வேண்டும். அதற்கு மேல் சிறிதளவு மாவிலையை வைத்துவிட்டு, அதன் மீது ஒரு தேங்காய்க்கு மஞ்சள் குங்கும பொட்டு வைத்து வைக்க வேண்டும். இதனை சித்திரகுப்தராக பாவித்துக் கொள்ள வேண்டும். பிறகு பூஜை அறையில் இதனை கிழக்கு நோக்கி வைத்து விட்டு, அதன்முன் அமர்ந்து கொள்ள வேண்டும்.

பிறகு கண்களை மூடி 108 முறை “ஓம் சித்ர குப்தா நமோ” நமக என்று சொல்லவேண்டும். அதன் பிறகு சூடம் ஏற்றி காண்பிக்க வேண்டும். பின்னர் ஏதேனும் ஒரு நைவேத்தியம் படைத்து மறுபடியும் 108 முறை “ஓம் சித்ர குப்தாய நமோ நமக” என்று சொல்ல வேண்டும். பிறகு மறுபடியும் சூடும் காண்பிக்க வேண்டும். அதன்பின் மீண்டும் ஒருமுறை இவ்வாறு “ஓம் சித்ர குப்தாய நமோ நமக” என்று 108 முறை சொல்ல வேண்டும். பின்னர் இறுதியாக ஒருமுறை சூடம் காண்பிக்க வேண்டும்

இப்படி தொடர்ந்து 3 முறை செய்து பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின்னர் இந்த கலசத்தை எடுத்து அதில் வைத்த தேங்காயை சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம். செம்பில் இருக்கும் தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும். மீதம் இருக்கும் தண்ணீரை மறுநாள் குளிக்கும்போது அந்த தண்ணீரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் செய்த பாவங்கள் அனைத்தும் கரைந்து, இனி உங்களுக்கு நடப்பவை அனைத்தும் தடை இல்லாமல் நடந்தேறும்.

- Advertisement -