கர்ம வினைகள் தீர சித்ரா பௌர்ணமி அன்று செய்ய வேண்டிய பரிகாரம்

pournami
- Advertisement -

ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய பௌர்ணமி தினம் சிறப்பு என்றால், தமிழ் மாதங்களில் முதலாவதாக வரப்படும் சித்திரை மாத பௌர்ணமி மிகவும் அதிசக்தி வாய்ந்த நாளாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இந்த வருட சித்திரை மாத பௌர்ணமி திதியானது 23.4.2024 செவ்வாய்க்கிழமை அன்று வரவேற்கின்றது.

பொதுவாகவே இந்த பௌர்ணமி நாளில் அம்பாள் வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பான பலனை தரும் என்று சொல்லுவார்கள். இந்த சித்திரை பௌர்ணமி நாளிலும் அம்பாள் வழிபாடு செய்யுங்கள். அம்மன் கோவிலுக்கு செல்லுங்கள் நல்லதே நடக்கும். சித்ரா பௌர்ணமி தினத்தன்று சித்திரகுப்தனை வணங்கி நாம் செய்த பாவத்திற்கு எல்லாம் மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும் என்ற வழக்கமும் நம்முடைய இந்து சாஸ்திரத்தில் இருக்கிறது.

- Advertisement -

ஆகவே நீங்கள் செய்த பாவத்திற்கு எல்லாம் மனம் வருந்தி நாளைய தினம் சித்திரகுப்தனை நினைத்து ஒரு நிமிடம் மன்னிப்பை கேட்டுக்கோங்க. செய்த பாவத்தில் கொஞ்சமாவது குறையும். இந்த சித்ரா பௌர்ணமி நாளில் சித்ரகுப்தனிடம் மன்னிப்பு கேட்டதோடு விடாமல், இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தையும் செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் செய்த பாவங்கள் எல்லாம் பாதியாக குறையும். பாவங்கள் குறையும் போது வாழ்வில் வரக்கூடிய கஷ்டங்கள் குறைந்து நல்லதே நடக்க தொடங்கும்.

கர்ம வினைகள் தீர சித்ரா பௌர்ணமி வழிபாடு

நாளைய தினம் உங்க வீட்டு பூஜை அறையில் நிச்சயமாக இந்த சித்ரா பௌர்ணமி பூஜைக்கு விளக்கு ஏற்றி கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாடு செய்வீர்கள். சின்னதாக ஒரு பாயசமாவது செய்து வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் எல்லோர் வீட்டிலும் இருக்கும். சில பேர் வீடுகளில் தடபுடலாக கலவை சாதம் எல்லாம் செய்து வைத்து வழிபாடு செய்வார்கள்.

- Advertisement -

அப்படி நாளை மாலை பௌர்ணமி நிலவு உதயமாகும் சமயத்தில் இந்த பூஜையை உங்கள் வீட்டில் செய்யும் போது, உங்கள் பூஜையில் வைக்க வேண்டிய அந்த ஒரு பொருள் தர்ப்பைப்புல். நாட்டு மருந்து கடைகளில் விற்கும் வாங்கிக்கோங்க. சிறிதளவு தர்ப்பை புல்லை உங்கள் உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள்.

பௌர்ணமி நிலவு உதயமாகும் சமயத்தில் நிலவுக்கு முன்பாக நின்று நான் செய்த பாவங்கள் எல்லாம் குறைய வேண்டும். இனி மனதறிந்து பாவங்கள் செய்ய மாட்டேன், செய்த பாவத்திற்கு எல்லாம் மன்னிப்பை கொடுத்து விடு என்று சந்திர பகவானிடம் சொல்லிவிட்டு இந்த தர்ப்பை புல்லை கொண்டு வந்து உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு தட்டு மேல் தர்ப்பை புல்லை வைத்து பூஜை அறையில் ஒரு ஓரமாக வைத்து விடுங்கள். நாளைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் அது பூஜை அறையில் இருக்கட்டும். புதன்கிழமை எழுந்தவுடன் அந்த தர்ப்பை புல்லை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி குளிக்கின்ற தண்ணீரில் போடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பணம் சேர சித்ரா பௌர்ணமி வழிபாடு

10 நிமிடம் கழித்து அந்த தர்ப்பை புல் தண்ணீரிலேயே நீங்கள் தலைக்கு குளித்து விட வேண்டும். இப்படி செய்தால் உங்களைப் பிடித்த கர்ம வினை பாவங்கள் எல்லாம் குறையும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. ஆன்மீகம் சார்ந்த இந்த எளிமையான பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -